மூலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 26, 2021

இது மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும்


மூல நோய் சிகிச்சைக்கான ஆயுர்வேத அணுகுமுறைகள் முழுமையானதாக கருதப்படுகின்றன. ஆயுர்வேத மருத்துவத்துடன் சிகிச்சையளிக்க விரும்பும் மூல நோய் அனுபவிக்கும் மக்கள் மூலிகை வைத்தியம், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் அவர்களின் சிகிச்சை திட்டத்தின் ஒரு பகுதியாக குறைந்த அளவிலான ஆக்கிரமிப்பு நடைமுறைகளை எதிர்பார்க்க வேண்டும்.உங்கள் ஆயுர்வேத மருத்துவர்  சிகிச்சை பரிந்துரைகளை வழங்குவதற்கு முன் உங்கள் மேலாதிக்க தோஷத்தை தீர்மானிக்க உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்வார். சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சை அணுகுமுறைக்கு உங்கள் மருத்துவரிடம் பேசி பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தின் கலவையானது பெரும்பாலும் ஒரு பயனுள்ள அணுகுமுறையாகும், இது உங்களுக்கு சிறந்ததாக செயல்படுவதை நீங்கள் காணலாம். சிலருக்கு, ஆயுர்வேதம் மட்டுமே தந்திரம் செய்யக்கூடும்,

அனோ-மலக்குடல் கோளாறுகள் இளம் குழந்தைகளிடமிருந்து எல்லா வயதினரையும் பாதிக்கலாம். அனைத்து அனோ-மலக்குடல் கோளாறுகளிலும், பைல்ஸ் , பிளவு மற்றும் ஃபிஸ்துலா ஆகியவை மிகவும் பொதுவானவை. மலம் கழிக்கும் போது மலக்குடலின் இரத்தப்போக்கு மற்றும் பெருக்கத்தால் குவியல்கள் வகைப்படுத்தப்படுகின்றன. பிளவு என்பது கடினமான மலத்தை கடந்து செல்வதால் ஏற்படும் குதப் பாதையில் கண்ணீர். ஃபிஸ்துலா என்பது குதப் பாதையில் சீழ் நிறைந்த குழி. அனைத்து அனோ-மலக்குடல் கோளாறுகளிலும் செரிமானம் மந்தமான செரிமானத்துடன் ஒரு முக்கிய கவலையாக உள்ளது. பாலியல் செயல்பாடுகளில் அதிகப்படியான ஈடுபாடு, உடல் ரீதியான சிரமம், அசைவம் உட்கொள்ளுதல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை பிற பொதுவான காரணங்கள். பைல்ஸ் கோளாறுக்கான ஆயுர்வேத சிகிச்சையானது தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை பரிந்துரைகளுடன் நல்ல முடிவுகளை வழங்குகிறது.

 

#piles

#pilesayurveda

#pilestreatment

#pilesayurvedictreatment

#Ayurvedictreatment

#Anal

#AnorectalDiseases

#AnalBleeding

 


Post Comment

திங்கள், மே 22, 2017

மூல நோயை விரட்டும் ஆயுஷ் மருத்துவம்


 மூல நோய்க்கு ஆயுஷ் மருத்துவமே  முழுமையான  நிவாரணம் தரும்

டாக்டர்.அ.முகமது சலீம்(cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .BAMS


   
          நவீன  உணவு  முறைகள் மற்றும் வாழ்க்கை  முறைகளின் காரணமாக  இன்று  பத்தில் 5 பேர் மூல நோயினால் பாதிக்கப்படுகின்றனர் . பசியின்மை, மலம் கழிப்பதில் கடினம்,மலச்சிக்கல் என சிறிய தொந்தரவோடு  ஆரம்பிக்கும் இம்மூல நோயானது இறுதியில் அறுவை  சிகிக்சையில் முடிகிறது.

             இக்காலத்தில் உட்கார்ந்தே வேலை செய்யும்  ஐடீஐ -ஐ கம்பெனியில்  வேலைசெய்பவர்கள் முதல் பேருந்து ஓட்டுபவர்கள்,தையல்காரர்கள், அனைவரையும்  இம்மூல நோய்  விட்டு  வைப்பது  இல்லை.


ஆசன வாய் பகுதியில் ஏற்படுகிற பிரச்சனைகள் எத்தனை வகைகள் ??
 
ஆசன வாய் பகுதியில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் மூலம் என்ற நோயோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை ..Fissure in ano ,Fistula ,Anal Tag , sentinel pile mass,Bleeding Piles ,Non Bleeding piles , hemorrhoids-first ,second ,third  degree -3’O clock, 7 ‘ O clock .11 ‘O clock position piles  இன்னும் பல பல வெவ்வேறு வகையான பிரச்சனைகள் ஆசன வாய் பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது  

மூல நோயினால் ஏற்படும் தொந்தரவுகள் என்ன ?  

  1.  மலத்துவாரத்தின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ சதை போன்று  வளர்ந்து  காணப்படும்.
  2.    மலம்  கழிப்பதற்க்கு   முன்பு  அல்லது  மலம்  கழித்த பின் ,மலத்தோடு சேர்ந்து மலத்துவாரத்தில்  இருந்து இரத்தம் வெளியேறுதல்.
  3.  மலத்துவாரத்தில் வலி, எரிச்சல்,காந்தல் மற்றும் வறட்சி
  4.   பசியின்மை
  5.  இறுகிய மலம் கழித்தல் –மலச்சிக்கல்
  6. அடிவயிறு வலி ,சோர்வு ,கண் எரிச்சல் ,கோவம்


          இந்தநோய் வருவதற்கான காரணங்கள் என்ன ?

  • ·         அதிக காரம் சேர்ப்பது,பேக்கரி உணவுகள் உட்கொள்வது.
  • ·         அதிக நேர விரதம்.
  • ·          பொறித்த உணவுகள் அதிகம்  சேர்ப்பது.
  • ·         அதிக  நேர வாகன பயணம்.
  • ·          அதிக நேரம் உட்கார்ந்திருத்தல்.
  • ·         அதிக  நேர கடின  உடற்பயிற்சி மற்றும் வெயிலில் வேலை பார்ப்பது.



  • மூல நோயினை  கட்டுப்படுத்தும் உணவு  முறைகள்


        1) கடுக்காய் பொடியோடு வெல்லம்  சேர்த்து உணவுக்கு முன்  இருவேளை  உட்கொள்ள  வேண்டும்.
        2) சிவதை  பொடியோடு  திரிபலா (நெல்லிக்காய், கடுக்காய், தான்ரிக்காய்) கஷாயம்  சேர்த்து  கொடுக்க வேண்டும்
        3) குப்பை மேனி உப்பு –வேப்பெண்ணையில் கலந்து தர வேண்டும்  .
        4) மூல நோய்க்கு மோர் ஒரு சிறந்த உணவாகும்.
        5) நார்ச்சத்துள்ள  உணவுவகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
   6) உடல் உஷ்ணமாக்கும் கோழி கறி,பச்சை மிளாகாய் ,அதிக காரம் ,புரோட்டா ,இரவு கண் விழிப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தல் நலம்

     
      மூல நோய்க்கான ஆயுர்வேத மூலிகைகள்

           1)எள்
           2)சேராங்கொட்டை
           3)நாககேசரம்
           4)கடுக்காய்
           5)சிவதை
           6)கொடுவேலி
           7) நெல்லிக்காய்
           8)மூள்ளங்கி  
           9)கர்ணக்கிழங்கு
        10)திராட்சை
         11)கொன்றை
        12)பார்லி
         13)கோதுமை
          14)மோர்
           15)வெள்ளரிக்காய்
            16)புடலங்காய்
            17)ஆட்டுப்பால்

             மூல  நோய்க்கான  ஆயுர்வேத மருந்துகள்

      1) காங்காயன வடி
      2) சூரண மோதகம்
      3)  பல்லாதக லேகியம் 
  4) அபயாரிஷ்டம்
 5) திராக் ஷாசவம்
 6) அவிபதிகர  சூரணம்
 7) அர்ஷகுடார  ரஸ்
 8) சவ்யாதி  க்ருதம்
 9) தக்ரா  அரிஷ்டம்
10) சிறு வில்வாதி கஷாயம்
11) திரிபலா குக்குலு
12) துராலபாரிஸ்டம்
13)சித்ரக லேகியம்
14) கோமூத்ரஹரிதகி  லேகியம் .
15) பகுஷாலகுல  லேகியம் 

அறுவை  சிகிக்சை  இல்லாமல் மூல நோயினை  முழுமையாக  குணப்படுத்தும்  ஆயுர்வேத  சிகிக்சை  முறைகள் :-

      1) அவகாஹ  ஸ்வேதம் .
      2) க்ஷார லேபம்.
      3)  க்ஷார சூத்ரம்
      4) வஸ்தி.
      5) அட்டை விடும் சிகிச்சை.

குறிப்பு -

  பிஸ்வாஸ் போன்ற வட இந்தியாவில் இருந்து வரும் எந்த ஒரு கல்வி தகுதியில் இல்லாத ,மஞ்சள் நோட்டீஸ் போலி மருத்துவர்களிடம் சென்று உங்கள் பணத்தையும் ,உடலையும் அழித்து கொள்ளாதீர்கள் .

                 சரியான  ஆயுர்வேத  மருத்துவர்களை  தேர்ந்தெடுத்து சிறந்த  ஆயுர்வேத  சிகிசைகளின்  மூலம்  மூலநோயிலிருந்து   முழுமையாக விடுபடுங்கள் . மூலம் மற்றும் ஆசனவாய் சார்ந்த நோய்களில் இருந்து மிக குணமாக சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை  9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை –கீழ்கட்டளை)






Post Comment

சனி, மார்ச் 03, 2012

எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati


எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati
 (ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகள்:

1.            ஓமம் (குராஸானி) – பார்சீகயவனி            40 கிராம்
2.            சீரகம் – ஜீரக                               40           “
3.            கொத்தமல்லி விதை – தான்யக              40           “
4.            மிளகு – மரீச்ச                             40           “
5.            விஷ்ணுக் கரந்தை (உலர்ந்தது) – விஷ்ணுக்ரந்தி     40           “
6.            ஓமம் – அஜமோதா                         40           “
7.            கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                 40           “
8.            பெருங்காயம் (பொரித்தது) – ஹிங்கு               60           “
9.            ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார                  80           “
10.          யவக்ஷாரம் – யவக்ஷார                     80           “
11.          இந்துப்பு – ஸைந்தவலவண                  80           “
12.          கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண                  80           “
13.          கரியுப்பு – பிடாலவண                  80           “
14.          சோற்றுப்பு – ஸமுத்ரலவண                 80           “
15.          வளையலுப்பு – காச்சலவண                 80           “
16.          கருஞ்சிவதை – த்ரிவ்ருத்                    80           “
17.          நாகதந்திவேர் (நேர்வாளவேர்) – தந்தீமூல           160         “
18.          கிச்சிலிக் கிழங்கு – ஸட்டீ                   160         “
19.          புஷ்கரமூலம் – கோஷ்ட                     160         “
20.          வாயுவிடங்கம் – விடங்க                    160         “
21.          மாதுளை ஓடு – தாடிமத்வக்                 160         “
22.          கொடிவேலி வேர் – சித்ரக                   160         “
23.          சீமைக் கொடுக்காய்ப் புளி – அம்லவேதஸம்        160         “
24.          சுக்கு – சுந்தீ                                160         “
25.          கடுக்காய்த் தோல் – ஹரீதகீ பலத்வக்             160         “

செய்முறை:      

இவற்றை முறைப்படி நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு போதுமான அளவு துருஞ்சிச்சாறு கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.

அளவு:           

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை நெய், பால், நீர் (அ) மோர் (மத்யம்) ஆகியவற்றுடன்.



தீரும் நோய்கள்:  

மூலம் (அர்ஷ), குன்மம் (குல்ம), இதய நோய் (ஹ்ருத் ரோக), பெருங்கழிச்சல் (கிரஹணீ), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), சூலை (சூல), இரத்த பித்தம் (ரக்த பித்த), குடற்புண்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆசன வாய் வெடிப்பிற்கு -சிர வில்வாதி கஷாயம் + திரிபலா குக்குலு + இந்த காங்கயன வடி = நூற்றுக்கு நூறு நல்ல பலன் தெரியும்
  2. உள் மூலம் - சிர வில்வாதி கஷாயம் அல்லது துராலபாதி கஷாயம் + அர்ஷகன வடி + பஹுசால குட லேஹியம் அல்லது சூரனாதி லேஹ்யியம் + இந்த மருந்து நல்ல பலன் தரும்
  3. இரத்த மூலம்  இந்த மாத்திரை சேராங்கொட்டை சேர்ந்த மருந்துகளுடன் முன்னர் சொன்ன மருந்துகள் நல்ல பலன் தெரியும்
  4. பவுந்திரத்திர்க்கு இந்த மருந்து குப்பை மேனி உப்பு + இந்த மாத்திரை நல்ல பலன் தெரியும்

Post Comment

வியாழன், ஜனவரி 12, 2012

விந்து முந்துதலுக்கு மருந்தாகும் (மூலம் ,மார்பக கட்டியையும் சரி செய்யும்) -பல்லாதகவடீ-Bhallathaka vati


விந்து முந்துதலுக்கு மருந்தாகும் (மூலம் ,மார்பக கட்டியையும் சரி செய்யும்)
-பல்லாதகவடீ-Bhallathaka vati
 (பைஷஜ்ய ரத்னாவளி - அர்சோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1. சுத்தி செய்த சேராங்கொட்டை – ஷோதித பல்லாதக      50 கிராம்
2.  தோல் போக்கிய எள்ளு – தில பீஜ                        50           “
3. கடுக்காய் (கொட்டை நீக்கிப் பொடித்துச் சலித்தது) – ஹரீதகீ    50       “
4.            வெல்லம் – குட                                  50           “\

செய்முறை:     

 சேராங்கொட்டையை நன்கு அரைத்து விழுதாக்கி ஓடு நீகியபின் மற்றவைகளை சேர்த்து அரைத்து 200 மில்லி கிராம் மாத்திரைகளாக உருட்டவும். மாத்திரை உருட்டும்போது சேராங்கொட்டை ஓடு விரல்களில் தென்பட்டால் அவைகளை நீக்கி உருட்டவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை பாலுடன் இரு வேளைகள் நோயாளியின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஏற்ப, பொதுவாக சிறு அளவிலே தொடங்கி பின்னர் அளவைக் கூட்டிக் கொள்வதே நடைமுறை வழக்கு.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (பிரங்கஜ வ்ரண), குஷ்டம் (தோல் நோய்கள்), கீல்வாயு (சந்திவாத), தானே விந்து வெளிப்படல் (சுக்ரமேஹ).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வாத கப மூலத்திற்கு அதாவது இரத்தம் வராத காய்ந்த மூலத்தை சுருக்க உதவும் ..மூலம் இந்த மருந்தால் தீரும்
  2. சேராங்கொட்டை ஒரு காய கல்ப மூலிகை -நல்ல காமம் பெருக்கியாக உதவும் என்கிறது சாரங்கதர சம்ஹிதை
  3. ஆசார்யர் சுஸ்ர்ததர் -ஸ்தன்ய சோதன மூலிகை என்கிறார் ..தாய்ப்பாலை சுத்தம் செய்யும் எனக்கொள்ளலாம் ..அனால் எனது அனுபவத்தில் கர்ப்பிணிகளுக்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது ...ஆனால்  மார்பக கட்டிகள் ,மார்பக புற்று நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  4. சேராங்கொட்டை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் அது ஆபத்தாக முடியும்
  5. சீக்கிரம் விந்து நழுவுதல் என்னும் -விந்து முந்துதலுக்கு -இந்த மருந்தை தக்க துணை மருந்தோடு -படித்த ஆயர்வேத மருத்துவரின் துணையோடு சாப்பிட -நல்ல பலன் கிடைக்கும்
  6. வாத நீர் சம்பதமான வலிகளை போக்கும் ஆற்றல் உடையது
  7. எலும்பில் வாதம் தாக்கினாலும் (அஸ்தி வக ஸ்ரோதஸ் ) அதை பக்குவமாக விடுபட செய்ய முடியும்
  8. சற்றே உஷ்ண வீர்யம் என்பதால் தக்க கவனம் தேவை
  9. தோல் நோய்க்கும் ,ஆறாத புண்ணுக்கும் ,கேன்சருக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்

Post Comment