அரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

படை ,ஸ்கேபிஸ்,கரப்பான் -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam


படை ,ஸ்கேபிஸ்,கரப்பான்  -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam
 (ref-யோகரத்னாகரம் - பாமா சிகித்ஸா)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
I.             

 1.பாதரஸம் – ரஸ                      50 கிராம்
2.     கந்தகம்  - கந்தக                 50           “
கந்தகத்தைக் கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் ரஸத்தைச் சேர்த்து அறைத்து நன்கு கறுத்த கஜ்ஜளி ஆக்கவும்.

II.             

மனோசிலை (மனசில) 50 கிராம் எடுத்துத் தனியே கல்வத்திலிட்டுப் பொடிக்கவும்.


III.         

  1.            சீரகம் – ஜீரக                     50 கிராம்
2.            கருஞ்சீரகம் – க்ருஷ்ணஜீரக       50           “
3.            மிளகு – மரீச்ச                   50           “
4.            மஞ்சள் – ஹரித்ரா               50           “
5.            மரமஞ்சள் – தாருஹரித்ரா        50           “

இவைகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். பின்னர்

1.            ரஸகந்தக கஜ்ஜளி                         100 கிராம்
2.            பொடித்த மனோசிலை                    50           “
3.            பொடித்துச் சலித்த சரக்குகளின் சூரணம் 250         “
4.            வங்கச்சிந்தூரம்                          50           “
இவைகளை ஒன்று சேர்த்துக் கல்வத்திலிட்டு அக்கலவை நன்கு கருத்துவரும் வரை அரைத்து பத்திரப்படுத்தவும்.

இம்மருந்து வெளி உபயோகத்திற்கானதால் ரஸம், கந்தகம், மனோசிலை இவைகளைச் சுத்தி செய்ய வேண்டியதில்லை.

இம்மருந்தைத் தேங்காய் எண்ணெய், நெய், எலுமிச்சம் பழச்சாறு, இவற்றுடன் கலந்தும் பூசலாம்.

                 
மேற்கூறிய மருந்தைக் களிம்பாகச் செய்து பயன்படுத்த வேண்டுமானால் அதற்காக உபயோகிக்க வேண்டிய சரக்குகளின் விகிதம் பின் வருமாறு அமையும்:
1.            ரஸோத்தமாதிலேப சூர்ணம் 10 கிராம்
2.            தேங்காய் எண்ணெய்        300         “
3.            தேன் மெழுகு              75           “
இவைகளை முறைப்படி சேர்த்துக் களிம்பாக்கவும்.

தீரும் நோய்கள்: 



 சொரி (அ) நமைச்சல் (அ) அரிப்பு (கண்டு), சிரங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) முதலிய நோய்கள் (சரும ரோகங்கள்).


 பயன்படுத்தும் முறை:           

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். லேப சூர்ணமாக இருக்கும் சமயங்களில் தேங்காய் எண்ணெய், நெய் அல்லது எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து மேலே பூசலாம். களிம்பாக இருக்கும் சமயங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் அப்படியே பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கரப்பானுக்கு -இந்த லேபதை -கரப்பான் தைலத்துடன் கலந்து பூச -நன்கு பலன் தரும்
  2. தோல் நோய்களில் -எவ்விதமாக இருந்தாலும் -நல்ல பலன் தரும்
  3. இந்த லேபம் -களிம்பாக இல்லாமல் -சூரணமாக கிடைக்கிறது

Post Comment

வியாழன், மார்ச் 08, 2012

பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam


பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam
                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வங்க ஸிந்தூரம் – கிரிஸிந்தூர          20 கிராம்
2.            ரஸ கற்பூரம் (பூரம்) – ரஸகற்பூர        10           “
3.            ரஸ ஸிந்தூரம் – ரஸ ஸிந்தூர         10           “
4.            மிருதார்சிங்கி – ம்ருத்தார ஸ்ருங்க      20           “

இவைகளை வங்க ஸிந்தூரம் நீங்கலாகத் தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் வங்க ஸிந்தூரத்தையும் சேர்த்து ஒன்றாக அறைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல  400 கிராம்
2.            தேன் மெழுகு – மதுச்சிஷ்ட              100         “
இவைகளைக் கொண்டு தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சேற்றுப்புண்  பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண), படை (விஸர்ச்சிகா), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்த வெடிப்பு எனப்படும் கால்களிலேற்படும் பித்தவெடிப்பு (விபாடிகா), இரணம் (வ்ரண), அரிப்பு.

 தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காலில் ஏற்படக்கூடிய எல்லா வகையான வெடிப்புகள் அது பித்த வெடிப்பானாலும் ,ப்லாண்டார் சோரியாசிஸ் எனப்படும் நோயானாலும் அது இந்த மருந்தால் முற்றிலும் குணமாகும்

Post Comment

வெள்ளி, ஜனவரி 13, 2012

காணாக்கடிக்கும் விஷ கடிக்கும் நல்ல மருந்து பில்வாதி குடிகா- Bilwadhi Gutika


காணாக்கடிக்கும் விஷ கடிக்கும் நல்ல மருந்து
பில்வாதி குடிகா- Bilwadhi Gutika
(அஷ்டாங்க ஹ்ருதயம், உத்தரஸ்தானம் – ஸர்ப்பவிஷ சிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            வில்வவேர் – பில்வமூல                        50 கிராம்
2.            துளசிப்பூ – துளசி புஷ்ப                          50           “
3.            புங்கம் பருப்பு – கரஞ்ஜபீஜ மஜ்ஜ                  50           “
4.            கிரந்தி தகரம் – தகர                              50           “
5.            தேவதாரு – தேவதாரு                            50           “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       50           “
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     50           “
8.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 50           “
9.            சுக்கு – சுந்தீ                                     50           “
10.          மிளகு – மரீச்ச                                   50           “
11.          திப்பிலி – பிப்பலீ                                50           “
12.          மஞ்சள் – ஹரித்ரா                               50           “
13.          மரமஞ்சள் – தாரு ஹரித்ரா                       50           “

செய்முறை:     

 இவைகளை நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு வெள்ளாட்டின் மூத்திரம் (அஜமூத்ர) விட்டரைத்து 500 மில்லி கிராம் மாத்திரைகளாகச் செய்யவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை, இரண்டு முதல் நான்கு வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  





சிலந்தி, தேள், பாம்பு, எலி ஆகியவற்றின் கடி விஷம் (லூத, வ்ருஷிக, ஸர்ப்ப, ஆகு விஷ), வாந்திபேதி (விஷூஸிகா), செரியாமை (அஜீர்ண), அஜீர்ண பேதி, இடு விஷம் (அ) மருந்தீடு (கரவிஷ (அ) கரதோஷ), காய்ச்சல் (ஜ்வர).
                 
விஷக்கடிகளில் இதனைத் தண்ணீருடன் உரைத்துக் கடிவாயின் மேல் பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. விஷ கடிக்கு இந்த மருந்து மிக சிறந்தது
  2. தொடர்ந்து சாப்பிட அரிப்பு ,தோல் வியாதிக்கும் நல்ல மருந்து
  3. வில்வ வேர் சேர்த்ததால் மட்டுமே பலன் கிடைக்கும் ,வில்வ இலை சேர்த்து பல கம்பெனிகள் தயாரிப்பதாய் அறிகிறோம் ..வில்வ இலை சேர்ந்தால் எந்த பலனும் இல்லை
  4. ஆட்டு மூத்திரம்  பயன்படுவதால் ..மருந்து சற்றே அந்த வாசனை தெரியும் ..ஆனால் இம்மருந்தே நன்றாக வேலை செய்யும் ..பல கம்பெனிகள் ..பிலிம் கோட்டெட் மாத்திரைகளை வெளிவிடுகின்றன ..ஆனால் அம்மாத்திரைகளால் எந்த பலனும் இல்லை
  5. கடிகள் எதுவானாலும் இந்த மருந்தை சாப்பிட்டால் பின்னால் பயப்படவே வேண்டாம்

Post Comment

திங்கள், டிசம்பர் 12, 2011

கப பித்த தோல் நோய்களில் சிறந்த மருந்து -நால்பாமராதி தைலம்-Nalpamaradhi thailam


கப பித்த தோல் நோய்களில் சிறந்த மருந்து -நால்பாமராதி தைலம்-Nalpamaradhi thailam
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மஞ்சள் – ஹரீத்ரா          260 கிராம்
2.            பர்ப்பாடகம் – பர்பாடக  260         “
3.            தண்ணீர் – ஜல        8.320 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 2.080 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

1.            நல்லெண்ணெய் – திலதைல            260 கிராம்
2.            தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல  260         “

ஆகியவைகளைச் சேர்த்து

1.            ஆலம்பட்டை – வாதத்வக்                         10 கிராம்
2.            அரசம்பட்டை – அஸ்வத்தாத்வக்                   10           “
3.            அத்திப்பட்டை – உதும்பரத்வக்                     10           “
4.            இத்திப்பட்டை – ப்ளக்ஷத்வக்                      10           “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10           “
6.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10           “
7.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                     10           “
8.            சந்தனம் – சந்தன                           10           “
9.            விளாமிச்சம் வேர் – உசீர                         10           “
10.          கோஷ்டம் – கோஷ்ட                             10           “
11.          மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                      10           “
12.          கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ                         10           “
13.          அகில்கட்டை – அகரு                             10           “

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    

 ½ பங்கு சரக்குடன் 16 பங்கு தண்ணீர் சேர்த்து 4 பங்காகக் குறுக்கி வடிக்கட்டிய கஷாயத்துடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு 4 பங்கும், கல்க சாமான்கள் வகைக்கு 40ல் ஒரு பங்கும் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
                பச்சை மஞ்சள், பசும் பர்ப்பாடகம் இவற்றின் சாறு பிழிந்து தயாரிப்பதும் உத்தமம்.

பயன்படுத்தும் முறை:     

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  


சொறி (கண்டூ), சிரங்கு (பாமா), அக்கி (விஸர்ப்ப), படை (விஸர்ச்சிகா), சிறு தோல் நோய்கள் (ஸூத்ர குஷ்டம்) போன்ற பலவித தோல் நோய்கள் (த்வக்ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. தோல் நோய்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
  2. ஆலமரம்,அரசமரம்-போன்ற அற்புத மூலிகைகள் அடங்கிய இந்த துவர்ப்பு சுவை அதிகமுள்ள மருத்துகள் அடங்கிய இந்த மருந்து -தோல் நோய்களில் முக்கியமாக கப பித்த தோல் நோய்களில் நல்ல பலன் தரும் ..
  3. கரப்பானுக்கு இந்த மருந்து சிறந்த மருந்து

Post Comment