வியாழன், மார்ச் 08, 2012

பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam


பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam
                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர          20 கிராம்
2.            ரஸ கற்பூரம் (பூரம்) ரஸகற்பூர        10          
3.            ரஸ ஸிந்தூரம் ரஸ ஸிந்தூர         10          
4.            மிருதார்சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க      20          

இவைகளை வங்க ஸிந்தூரம் நீங்கலாகத் தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் வங்க ஸிந்தூரத்தையும் சேர்த்து ஒன்றாக அறைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல  400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட              100        
இவைகளைக் கொண்டு தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சேற்றுப்புண்  பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண), படை (விஸர்ச்சிகா), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்த வெடிப்பு எனப்படும் கால்களிலேற்படும் பித்தவெடிப்பு (விபாடிகா), இரணம் (வ்ரண), அரிப்பு.

 தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காலில் ஏற்படக்கூடிய எல்லா வகையான வெடிப்புகள் அது பித்த வெடிப்பானாலும் ,ப்லாண்டார் சோரியாசிஸ் எனப்படும் நோயானாலும் அது இந்த மருந்தால் முற்றிலும் குணமாகும்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக