செவ்வாய், செப்டம்பர் 25, 2012

அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati


அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati
 (refபைஷஜ்யரத்னாவளி - சோதோரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்சநாபி                 10 கிராம்
2.            சுத்தி செய்த ஊமத்தன் விதை ஷோதித தத்தூரபீஜ     10          

செய்முறை:     

 இவற்றைத் தனித்தனியே சிறிது ஊமத்தன் இலைச் சாற்றில் ஊற வைத்து அறைத்து நுண்ணிய விழுதாக்கி ஊமத்தன் இலைச்சாறு கொண்டே கல்வத்தில் நன்கு அறைத்த சுத்தி செய்த இலிங்கம் (ஷோஷிதஹிங்குள) 10 கிராம் உடன் சேர்த்து எல்லாவற்றையும் ஊமத்தன் இலைச்சாறு (தத்தூர பத்ர ஸ்வரஸ) கொண்டே ஒன்று பட அரைத்துப் பதத்தில் 25 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை பால் அல்லது தேனுடன் தினமும் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 பெருவயிறு (உதர), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்க நோய்கள் (ஸோத ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மேலே கூறிய எல்லா மருந்துகளையும் ஆயுர்வேத சாஸ்திரங்கள் சொன்ன படி சுத்தம் செய்து முக்கியம் ( சுத்தம் -சோதன முறைகள் பற்றி பின் தனி கட்டுரைகள் எழுதுகிறேன் )
  2. லிவர் சிர்ரோசிஸ் என்னும் கல்லீரல் சுருக்க நோய் மற்றும் அதனால் வரும் அசைட்டீஸ் என்னும் வயிறு வீக்கத்திற்கும் இந்த மருந்தை தக்க கவனத்துடன் பயன் படுத்த நல்ல பலன் கிடைக்கும்
  3. பூனை மீசை ,விஷ நாராயணி போன்ற கிட்னி பெயிலியருக்கு பயன்படும் மருந்துகளின் சூரணங்கள் உடன் மிக மிக குறைந்த அளவு இந்த மருந்தை பயன்படுத்தி வீக்கத்தை குறைக்கலாம் ..கிட்னி பெயியரிலும் மிக மிக கவனத்துடன் கொடுக்கலாம் ..
  4. வீக்கங்களில் நல்ல பலன் அளிக்கும்

Post Comment

திங்கள், செப்டம்பர் 24, 2012

அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham


அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham
  (ref-பைஷஜ்யரத்னாவளி - சூலாதிகார)

தேவையான மருந்துகள்:

1.            நெல்லிக்காய்ச் சூரணம் ஆமலகீ (தாத்ரீ சூர்ண)    8 பங்கு
2.            அதிமதுரச் சூரணம் யஷ்டீ மதுரச் சூர்ண          2   
3.            அயபற்பம் லோஹபஸ்ம                         4   


செய்முறை:     

 இவைகளைப் போதுமான அளவு சீந்தில்கொடி கஷாயம் (குடூசிகஷாய) கொண்டு ஏழு நாட்கள் ஏழு முறை பாவனை செய்து ரவியில் (சூரிய ஒளியில்) வைத்து உலர்த்திப் பொடித்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  சூலைநோய் (சூலரோக), பரிணாம சூலை எனப்படும் குடற்புண்கள், இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்த), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாஹ), மலச்சிக்கல் (மலபந்த).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. வயிறு புண் ,வயிற்று வலி  நோயாளிக்கு பொதுவாக எந்த இரும்பு சத்து  மாத்திரையும் கொடுக்க இயலாது ...அனால் இந்த மருந்தை வயிறு புண் ஆறவும் இரத்த சோகை தீரவும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ?
  2. பொதுவாக இரத்த சோகைக்கு பயன்படும் மருந்து இரத்த சோகை உண்டாக்கும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று ...ஆனால் ஆயுர்வேத மருந்துகளில் அப்படி இல்லை என்பதற்கு இந்த மருந்தை உதாரணம் தரலாம் ..இரத்த சோகை நீக்கும் மருந்து மலமிளக்கியாகவும் பயன்படும் ..


Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

நீரழிவு என்னும் சர்க்கரை நோயை ஓட விரட்டும் யோகாசனங்கள்


அர்த  மத்சேயேந்த்திற  ஆசனம்
மயூராசனம்

புஜங்காசனம்


மத்சியாசனம்தனுராசனம்

யோகா முத்திரை ,மகா முத்திரைமன்டூகாசானம்


ஜானு சிரசாசனம்
பவன முக்தாசனம்

சவாசனம் 

Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

நீரழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு அக்குபஞ்சர் புள்ளிகள்

நீரழிவு என்னும் சர்க்கரை நோயை சிறந்த முறையில் கட்டுக்குள் வைக்கும் அக்குபஞ்சர் புள்ளிகள் ...

நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பின் பலஹீனம் , அதிக சக்தி என்பதை தெரிந்து கொண்டு சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்வது  முக்கியம் ...

ஆனாலும் கீழே கண்ட புள்ளிகள் நல்ல பலனை தரும்

மூன்று யின் மேரிடியன்களும் சந்திக்கும் ஸ்ப்லீன் -மண்ணீரல் சக்தி நாளத்தின் ஆறாவது புள்ளி ..உடனடியாக சர்க்கரை அளவை குறைக்கும்
spleen -6 


மூன்று யாங் மெரிடியன் புள்ளிகளும் சந்திக்கும் ..மூவெப்ப கட்டுப்பாட்டு உறுப்பு புள்ளி 8 -triple warmer 8
 
நாளமில்லா சுரப்பிகளில் சக்தி ஓட்டத்தை சரி செய்யும் ..(endocrine points)

gall bladder -GB -21 (பித்தப்பை சக்தி நாளம் 21)


large intestine LI -18 (பெருங்குடல் சக்தி நாளம் -18)


Ren -15(ரென் -15)

large intestine LI -11 (பெருங்குடல் சக்தி நாளம் -11)


பிட்யூட்டரி புள்ளிகளான கீழ் கண்ட புள்ளிகள் Pitutary points
triple warmer -3 ( மூவெப்ப கட்டுப்பாட்டு -3)

 
Ren 15 (ரென் -15)

large intestine Li 20 (பெருங்குடல் சக்தி நாளம்-20)

Small intestine Si 15 (சிறுகுடல் சக்தி நாளம் -15)

 triple warmer -22 ( மூவெப்ப கட்டுப்பாட்டு நாளம் -22)


வளர் சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைக்கும் கீழ் கண்ட புள்ளிகள்
 Slpeen -4மண்ணீரல் சக்தி நாளத்தின் நான்காவது புள்ளி
 
Liver 8கல்லீரல் சக்தி நாளத்தின் எட்டாவது புள்ளி

Ren -12(ரென் -12)

மேலே கண்ட புள்ளிகளை சரியாக தூண்ட சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் தரும் என்பது திண்ணம் ..


நாளை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க யோகாசனங்கள்


  
Post Comment