தைலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தைலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

செம்பருத்தி தைலம் செய்வது எப்படி ?


ஜபாபத்ரியாதி தைலம் 
(செம்பருத்தியாதி தைலம்)                             (ref-ஸஹஸ்ரயோகம்)    
 செம்பருத்தி தைலம் செய்வது எப்படி  ?
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            செம்பருத்தி இலை – ஜபாபத்ரி     200 கிராம்
2.            கீழாநெல்லி – பூ ஆமலகீ          200         “
3.            வில்வ இலை – பில்வ பத்ர       200         “
4.            விருட்சிப்பூ – விருக்ஷிக புஷ்ப          200         “
5.            அருகம்புல் – தூர்வா              200         “
6.            வெற்றிலை – நாகவல்லி பத்ர          200         “
7.            துளசி இலை – துளசி பத்ர        200         “
8.            ஜாதிமல்லி இலை – மாலதி பத்ர  200         “
9.            அவுரி இலை – நீலி பத்ர          200         “

இவற்றை நன்கு இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய் (நாரிகேள தைல) 800 கிராம், தேங்காய்ப் பால் (நாரிகேள க்ஷீர) 800 கிராம், நன்கு விழுதாக அரைத்த

10.          அதிமதுரம் – யஷ்டீ              33 கிராம்
11.          சீரகம் – ஜீரக                     33           “
12.          கருஞ்சீரகம் – கிருஷ்ணஜீரக       33           “

ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்து காய்ச்சிப் பதத்தில் வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சிரங்கு (பாமா), அரிப்பு (கண்டு), கரப்பான் (விஸர்ப்ப) போன்ற தோல் நோய்கள் (சர்ம ரோக), முக்கியமாக குழந்தைகளின் மேற்கூறிய நிலைகளில் மிகச் சிறந்தது. தலைப் பொடுகுக்கு (சிரகண்டு) இதனைப் பயன்படுத்துவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆயுர்வேதத்தில் செய்யபடும் இந்த செம்பருத்தி தைலமும் -சித்த முறைப்படி செய்யப்படும் செம்பருத்தி தைலமும் ஒன்றல்ல
  2. பொடுகுக்கு -துர்துற பத்ராதி தைலம் + வெட்பாலை தைலம் + இந்த தைலம் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்
  3. இந்த தைலம் -தோல் வியாதிகளிலும் நல்ல பலன் தரும்

Post Comment

வெள்ளி, டிசம்பர் 23, 2011

தலை சார்ந்த நோய்க்கு தலையாய தைலம் -ஷட்பிந்து தைலம் -Shad Bindu thailam


தலை சார்ந்த நோய்க்கு தலையாய தைலம் -ஷட்பிந்து தைலம்  -Shad Bindu thailam
(ref-பைஷஜ்யரத்னாவளி - சிரோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கரிசலாங்கண்ணிச்சாறு – ப்ருங்கராஜஸ்வரஸ  3.200 லிட்டர்
2.            ஆட்டுப்பால் – அஜக்ஷீர                  800 கிராம்
3.            நல்லெண்ணெய் – க்ருஷ்ணதிலதைல              800         “

இவைகளை ஒன்று கலந்து அத்துடன்

1.            ஆமணக்குவேர் – எரண்டமூல          10   கிராம்
2.            தகரம் – தகர                     10           “
3.            சதகுப்பை – ஸதபுஷ்ப            10           “
4.            கீரைப்பாலை – ஜீவந்தி             10           “
5.            அரத்தை – ராஸ்னா              10           “
6.            இந்துப்பு – ஸைந்தவலவண       10           “
7.            கரிசலாங்கண்ணி – ப்ருங்கராஜ    10           “
8.            வாயுவிடங்கம் – விடங்க         10           “
9.            அதிமதுரம் – யஷ்டீ              10           “
10.          சுக்கு – சுந்தீ                     10           “

இவைகளையும் நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்துக் காய்ச்சி மிருது பாகத்தில் இறக்கி வடிக்கட்டி பத்திரப்படுத்தவும்.

அளவு:           

6 சொட்டுகள் வரை மூக்கில் சொட்டு மருந்தாக உபயோகிக்கலாம். கபாலக்ரஹ, சிரோப்யங்க, அப்யங்க போன்ற உபயோக முறைகளிலும் பயன் படுத்தலாம்.

தீரும் நோய்கள்:  

தலைசார்ந்த நோய்கள் (சிரோ ரோக), பல்லாட்டம் (தந்தசலன), பார்வைமங்கல் (த்ருஷ்டி தௌர்பல்ய), முடியுதிரல் (கேஸஸாத).


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. துஷ்ட பீனசம் தவிர எல்லா பீனச நோய்களுக்கும் -நசியம் செய்து வர -மண்டை கணம் -பீனச தொந்தரவுகள் மாறும்
  2. கரிசாலை இருப்பதால் -முடி வளர வைக்க -நசியம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
  3. கண் பார்வை தெளிவாக்கும்
  4. பல் ஆட்டத்தை குறைக்க -இந்த தைலம் கொண்டு நசியம் செய்திடல் வேண்டும்

Post Comment

வியாழன், டிசம்பர் 22, 2011

வீக்கமுள்ள வாத வலிகளுக்கு-விஷமுஷ்டி தைலம்-Visha Mushti thailam


வீக்கமுள்ள வாத வலிகளுக்கு-விஷமுஷ்டி தைலம்-Visha Mushti thailam
(ref-பஸவராஜீயம் - ரோகப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பழுத்த எட்டிப்பழங்களைப் பிசைந்து கொட்டை நீக்கி எடுத்த கதுப்பு – விஷமுஷ்டீ பலமஜ்ஜ 800 கிராம்.

2.            புளித்தகாடி – காஞ்ஜிக 6.400 கிலோ கிராம் இவ்விரண்டையும் நன்கு கலந்து அத்துடன்.
3.            800 கிராம் எட்டிப்பழக் கொட்டைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 6.400 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து (1.600 லிட்டராகக்) குறுக்கி வடிகட்டிய கஷாயம் 1.600 லிட்டர்

4.            எலுமிச்சம்பழச்சாறு – ஜம்பீரஸ்வரஸ    1.600 கிலோ கிராம்
5.            நல்லெண்ணெய் – திலதைல      1.600                     “
6.            விளக்கெண்ணெய் – எரண்டதைல  0.800                     “
7.            எட்டிக்கொட்டை – விஷமுஷ்டீ (சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு அரைத்து விழுதாக்கியது)         0.800 கிலோ கிராம்

இவைகளை நன்கு கலந்து கொதிக்க வைத்துக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

பயன் படுத்தும் முறை:           
 
 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

குறிப்பு:     

வெய்யில் நாட்களிலும், பித்தம் உடையவர்களுக்கும் (பித்த தேஹி) கொடுக்கும் போதும் மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும்

தீரும் நோய்கள்:  


மூட்டுகள் மற்றும் அவயவங்களைப் பற்றிய வாதரோகங்கள் மற்றும் இரண இசிவு (காயத்தின் காரணமாக ஏற்பட்ட வலிப்பு).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வலிகளை-வீக்கம் கலந்த வலிகளை போக்கும்
  2. நீர்வாதங்களில் தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
  3. சுத்தம் செய்து தான் -எட்டிபழம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை -வெளிபிரயோகம் என்றால் எட்டி -விஷம் என்று உணருதல் நல்லது


Post Comment