வெள்ளி, ஏப்ரல் 30, 2010

முல்லை-ஜாதி

ஜாதி -மல்லி ..

  • ஆசார்யர் சரகர் இதனை -தோல் நோய்கள் நீக்கும் வர்க்கத்தில் (குஷ்டக்ன கனத்தில்) சேர்த்துள்ளார் ..
  • செய்கைகளில் -மூன்று தோஷங்களையும் சமப்படுத்தும் ,புண்களை ஆற்றும் ,புண்களை சுத்தம் செய்யும் 
  • நோய்களில் -புண் ,கண் நோய்களை குணமாக்கும் ,தலை சார்ந்த நோய்களை போக்கும் ,காதில் சீழ் வடிதலை நீக்கும் ,வாய்ப்புண்ணை சரிசெய்யும் -
  • காதில் நீர் -சீழ் வடிதலை நிறுத்த -இந்த மூலிகையின் இலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையை காதில் விட சரியாகும் -காதில் ஓட்டை இல்ல்லாமளிருந்தால் நல்லது (சக்ர தத்த )
  • வாய்புண்ணை சரிசெய்ய -இந்த மூலிகையின் இலையை அரைத்து தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க மாறும் .
  • கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -ஜாத்யாதி தைலம் (புண் ஆற்றும் -கால் வெடிப்பு சரியாகும் ),ஜாத்யாதி கிருதம் 
  • அதிகமான தாய்பாலை குறைக்க -மல்லியை அரைத்து மார்பில் பூச குணமுண்டாகும்.தாய்பாலை வற்ற செய்யும் 

சித்த மருத்துவத்தில் 

செய்கை -துவர்ப்பி,புழுகொல்லி,வீக்கமுறுக்கி,மூத்திரவர்தனி ,ருது உண்டாக்கி ..
குணம் -உடல் வெப்பம் நீங்கும் ,கண்படலம் நீங்கும் ,மனகலக்கதை போக்கும் ,கலவி இன்பத்தை பெருக்கும் 

போகமிக உண்டாகும் பொங்குக பங் கட்பிரமை 
ஆகஅவனால் சூனியமும் அண்டுமோ -பாகனை யாய் 
மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டேன்றேவரும்
பன்னுமல்லி கைப்பூவர் பார் (அகத்தியர் குணபாடம்)

பூவினால் உடல் உறவில் மேன்மை உண்டாகும்

 குணமாகும் நோய்கள் -கிருமி,ஆண்மை குறைவு ,மூலநோய்க்கும் நல்லது 


Post Comment

வியாழன், ஏப்ரல் 29, 2010

திருதாளி



























குணமாகும் நோய்கள் -விஷம் நீங்கும் ,நீர்சுருக்கு தீரும் .

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

நாளை முதல் சிந்திப்போம் 

Post Comment

சனி, ஏப்ரல் 17, 2010

அவுரி -நீலி


  • ஆயுர்வேதத்தில் இதனை நீலி என்று சொல்வோம் .
  • குணம் -கப வாத நோய்களை தீர்க்கும் ,விஷத்தை போக்கும் ,முடிக்கு நல்லது ,வயிற்று பூச்சிகளை கொல்லும்
  • நோய்களில்- உதரம் என்னும் வயிறு வீக்கம் ,வாதரக்தம் ,ஆமவாதம் ,குன்மம் ,ஜ்வரம்,மண்ணீரல் நோய்களை நீக்கும் .
  • சோஷம் என்னும் உடல் எடை குறைதலில் -அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருகவேண்டும் (கத நிக்ர ஹம்)
  • பாம்பு கடியில் -அவுரி வேரை கழனி தண்ணீரில் இடித்து சாப்பிட எந்த விதமான பாம்பு கடியில் ஏற்படும் விஷமும் நீங்கி விடும் (ராஜ நிகண்டு )
  • பல்லில் உள்ள கிருமிக்கு -நீலியின் வேரை கடித்து துப்ப தீரும் (கத நிக்ர ஹம்)
  • கடைகளில் கிடைக்ககூடிய மருந்துகளில் -நீலி பிருங்காதி தைலம் ,நீலின்யாதி கிருதம் ,நீலிகாதி தைலம் ..
  • இந்த அவரி சமூல சாறு -நல்ல பாம்பு விஷத்திற்கு எதிர் மருந்தாக செயல்படும்
  • தீப்புண்,தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன் படும் 
  • நாய்கடி விஷத்தால் ஏற்படும் -ஹைடிரோ போபியா க்கு நன்றாக வேலை செய்யும் 
  • சிறந்த சாயமேற்றியாக பயன்படுகிறது 
  • வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும் 
அவுரி இலைகள்  சாயம் மட்டும் தருவதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது .இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி . 18 வகை  விஷங்களை  நீக்கும்  வன்மை  பெற்றது .
 
உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி ----- என்கிறது  குண  பாடம் 

 மலச்சிக்கலை நீக்கும். விஷங்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டது.
இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.

இதன் குணங்கள் சோபாநாசினி , விஷநாசகாரி மலகாரி ,உற்ச்சாககாரி

முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன்  அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.
அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்களல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும் .தினம் ஒரு வேலையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும்
  • இதன் இல்லையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும் .இதன் இலையை அரைத்து விளக்கென்னையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும் .இது ஒரு பாதுகாப்பான வைத்தியம் 
  • அவுரிஇலை சாறு பல விஷங்களை நீக்கும் .சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம் அவுரி வேரைநன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேலை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதயவையின் விஷம் நீங்கும் .
  • இதில் நெல்லிக்காய் அளவு என்றுசொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம் சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம். மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வன்றிர்க்கும் ஒவ்வெரு தனி முறை உள்ளது. ஆனால் அவைகள் தெரியாத நிலையில் அந்த மருத்துவ பொருளை  நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் மருந்து சுத்தி ஆகும் . அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி.
  • அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு  நீருடன் கலந்து மண் சட்டியில் காய்ச்சி சரிபாதியாக  ஆகும் வரை காய்ச்சி மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம் .பொதுவாக நல்ல ஒரு மருத்துவர் தனது மருத்துவ முறையை ஆரமிப்பதர்க்கு முன்பு அது வரை வேறு வைத்தியர்களிடம் உண்டுவந்த மருந்த்களின் வீரியத்தைக் குறைத்து விட்டு பிறகுத்தான் தங்களது மருந்தை கொடுக்க ஆரமிப்பது தான் வழக்கம் .இன்னும் கூட சில சிறந்த ரகசிய முறைகள் ஒவ்வரு வைத்தியரும் வைத்திருப்பார்  இப்போதது ஆங்கில முறை மருத்துவத்தில் அத்தகைய கவனிப்பு ஒன்றும் இல்லை.உடலை ஒரு சோதனைக் கூடமாக கருதி வேறு வேறு மருந்துகளை தரும் பழக்கம் தான் உள்ளது . ஆனால்  சித்தமருத்துவத்தில் முன்னர் கொடுத்த மருந்துகளை முரித்தபின்பே அடுத்தது கொடுக்க ஆரமிப்பார் உடலை மிகவும் நேசிப்பார் .
      .
 
அவுரி-இண்டிகோ வின் வரலாறு -
பல நூற்றாண்டுகளாக, இந்தியாவிற்கே உரிய நீலச் சாயப்பொருளான இண்டிகோவைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், 1750களில் இங்கிலாந்து ஆலைகளில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவுகளில் தேவைப்பட்டது. அதுவரையில் இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள், அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்ட பின், இந்தியாவில் விளைவிப்பது அவசியமானது. வங்காள விவசாயிகள்தான் மீண்டும் கையில் சிக்கினர்.5
உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர்செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, அபினிக் கதையைப் போலவே விவசாயிகளின்மேல் பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டனர். 19ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்ற அளவுக்கு இந்தப் பயிர் பரவலாக்கப்பட்டது!
வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி. லதூர், 1848இல் இவ்வாறு கூறினார்: "இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது.... நீதிபதி என்ற தகுதியில் என்னிடம் அனுப்பப்படும் பல விவசாயிகளின் உடல்களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன; தோட்ட முதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.... இவ்வாறு இண்டிகோ வர்த்தகத்தை மேற்கொள்வது, ரத்தம் சிந்தவைக்கும் கொடூரமான முறை என்றே கருதுகிறேன்."6
நிலைமை மிகவும் மோசமானதும் 1868ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. அதே சமயம், 1880இல், இரசாயன நீலச்சாயம் உற்பத்திசெய்யும் முறை கண்டறியப்பட்ட பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது; நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895-96இல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06இல் 5 லட்சம் ஏக்கராகவும் பின்னர் மேலும் சுருங்கியது.7 பல இண்டிகோ தோட்டத்தொழிலாளிகள் வறுமையில் வாடி மடிந்தனர்.
அவுரி -சாறு துணிகளுக்கு இயற்க்கை சாயமாகிறது 

சித்த மருத்துவத்தில் -

எல்லா விடங்களுக்கும் ஏற்ற முறிப்பாகும்
பொல்லாச் சுர மூர்ச்சை பொங்கு வெட்டை-நில்லாப் 
பவுரி தருங் குன்ம முதல் பண்ண யோழியும்
அவுரி தரும் வேருக் கறி

எல்லா விஷங்களையும் போக்கும் 
மஞ்சள் காமாலை சரியாகும் 
மாந்தம் கீல்வாதம் போகும் 
உடல் பொன்னிறமாகும் 






























குணமாகும் நோய்கள் -வலிப்பு, நரம்பு நோய்கள், புண்கள், மூலம்,காமாலை, நீர்சுருக்கு நீக்கும்

Post Comment

புதன், ஏப்ரல் 14, 2010

செம்பருத்தி -ஜபா


  • ஆயுர்வேதத்தில் -இதனை ஜபா,ஜபா புஸ்பா .ருத்ர புஷ்ப ,ரக்த கார்பாச என்று அழைக்கபடுகிறது 
  • பாவ பிரகாஷ நிகண்டுவில் (காது நோய்கள் ,உதடு நோய்கள் ),ராஜ நிகண்டுவில் ,சக்ர தத்த (யோனி ரோகத்தில்),ஹரித சம்ஹிதையில் இந்த செம்பருத்தி பற்றி குறிப்புகள் காண படுகிறது 
  • கப பித்த நோய்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் 
  • அதிகமான பெண்களின் மாத விலக்கை-சரி செய்ய -ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவின் பத்து பூக்களை அரிசி கழனி தண்ணீரில் கலந்து -அரைத்து-சர்பத் போலவோ -இம்பூரல் செடியின் சாறோடோ சேர்த்து சாப்பிட குணமாகும் 
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சரிசெய்ய -செம்பருத்தி பட்டையின் சாறை-தண்ணீருடன் கலந்து சாப்பிட ஓரிரு நாளில் குணமாகும் 
  • திடீரென்று ஏற்பட்ட பேதியை நிறுத்த -பூவின் இதழ்களை -கழனி தண்ணீரில் அரைத்து சாப்பிட உடன் நிற்கும் 
  • புழுவெட்டை சரிசெய்ய -செம்பருத்தி பூவின் இதழோடு -வரிக்கமட்டி காயையும் அரைத்து பூச சரியாகும் 

  • கலப்பின அல்லது ஒட்டு வகை செம்பருத்தி -பல அடுக்கு செம்பருத்தி களையும் பயன் படுத்துவதில்லை -
  • செம்பருத்தியை வைத்து பொதுவாக பல கதை போன்ற கட்டுக்கதை மருத்துவ குறிப்புகளை பலர் அவிழ்த்து விட்டுள்ளார்கள் -அவைகளில் பல ஆதாரமற்றவைகள் .யாராவது செய்து பலன் கண்டவர்கள் சொன்னால் மட்டும் செய்து பாருங்கள் -இல்லை செய்து முழிக்காதீர்கள் .
சித்த மருத்துவத்தில் -

செம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியொடு

வம்பிரத்த வெள்ளை வழுவழுப்பும்-வெம்பும்

பெரும்பாடு ரத்தபித்த பேதம் அகற்றும்

கரும்பா மொழிமயிலே காண்

- அகத்தியர் குணபாடம்

  • வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க-தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
  • பெண்களுக்கு-மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.வெள்ளைப் படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • இருதய நோயாளிகள்-செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
  • தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளர-செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 






























குணமாகும் நோய்கள் -மூச்சுத்திணறல், தோல் நோய்கள் போக்கும், தலைமுடிக்கு நல்லது

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

முறிகூடி


  • இந்த மூலிகை -தண்ணீருக்கடியில் பல மாதங்கள் வெட்டி வைத்திருந்தாலும் உயிரோடிருக்கும் .
  • புண்களை ஆற்ற வல்லது -கிருமிகளை கொல்லும்-ஆண்டி பாக்டீரியாவாக வேலை செய்யும் 
  • இது பொதுவாக அழகுக்காக வளர்ப்பார்கள் 
  • புண்களை -சீக்கிரம் கூட வைப்பதால் -இதனை முறி கூடி என்று மலையாளத்தில் அழைப்பார்கள் .
  • கட்டைகளையும் குணப்படுத்தும் 




























குணப்படுத்தும் நோய்கள் -புண்களை ஆற்றும், வீக்கம், கிருமி, கட்டிகளை குணப்படுத்தும்

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 06, 2010

நன்னாரி -சாரிப



  • ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று சொல்வோம்
  • சாரிபாத்யாசவம் ,சாரிபாதி வடி ,சாரிபாதி க்வாதம் ,சாரிபாதி லேஹியம் போன்ற மருந்துகளில் -இந்த நன்னாரி சேர்க்கிறது 
  • வேறு பெயர்கள் -ஆனந்த மூலம்
  • சரக சம்ஹிதை -சூத்ர -இருபதைந்து ,சுஸ்ருத சம்ஹிதை -உத்தர ஸ்தான போன்ற அத்தியாயங்களில் இந்த மூலிகையின் ரெபரன்ஸ் கிடைக்கிறது 
  • குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும் ..

  • உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்
சித்த மருத்துவத்தில் 


சலதொடம் பித்தமதி தாகம் உழலை 
சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற் 
சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும் 
மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)

அன்காரிகை மூலி யாச்சியாத்தோ டுண்ண நித்தி 
யங்கா ரிகை மூலி யாளுமே-யன்காரி 
பற்றாது (தேரையர் வெண்பா )

காமவல் லியனடிக் கரியுணப் பித்தமா 
நேமமே கப்பிணி நிலை குலைந்தாலுமே (தேரையர் கா )

  • மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்

  • பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

  • சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

  • நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்
  • சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .
  • பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
  • பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.
  • வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்
  • ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
  • சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.
  • வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.
  • விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.
  • கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
குறிப்பு -ரோட்டரத்தில்  கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் -நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை 


















































குணமாகும் நோய்கள் -நீர்சுருக்கு, தாகம், தோல் நோய்கள், மூட்டுவாதம் நீக்கும்
மற்றுமொரு லிங்க்-நன்னாரி  http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/nannari-ayurvedic-herbs.html
கரு நன்னாரி 
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/nannari-karuppu-ayurvedic-herbs.html

Post Comment

சனி, ஏப்ரல் 03, 2010

சூர்ய காந்தி


சூர்ய காந்தி -

சித்த மருத்துவத்தில் --
  • செய்கை-வியர்வை பெருக்கி 
  • குணம் -முப்பிணி ,வாத நோய் போகும்,நீரேற்றம் போகும் 

சந்திர ..............................................................................
...................................................................சந்திலுறும்
பாரிய வாதம் பருகு நீறேற்றமும் போம் 
சூரிய காந்திக்கு சொல் ...(அகத்தியர் குண பாடம்)

சூர்ய காந்தி எண்ணை-நல்லதென்று சொல்லும் ஒரு ஆயுர்வேத சித்த ரேபெரன்சும் எனக்கு கிடைக்க வில்லை -
நல்லெண்ணையும் நல்லது.(உடல் உழைப்பு இல்லாமல் எந்த எண்ணை பொருளும் நல்லதில்லை )
விளம்பரத்தால் தான் நாம் வழி கெடுக்கப் படுகிறோம்..
சூரிய காந்தி எண்ணை நல்லதில்லை என்று நான் சொல்லவில்லை -அதனிலும் மிகவும் நல்ல பயக்கும் எண்ணைகள் இருக்கத்தான் செய்கிறது ..
எண்ணையில் பொறித்த உணவுகள் எது என்றாலும் -அதே எண்ணை மீண்டும் சூடாக்கப்படும் பொது ஆக்சிஜன் ஏற்றம் பெற்று -சேரக்கூடாத அமினோ அமிலங்களின் கோர்வையாகும் போது அது உடலை பாதிக்கும் ஆமம் என்ற விஷ பொருளாக இரத்தத்தில் சேரும் ...

  • புகைப்பவர்கள் புகை விட வேண்டுமென்றால் -எப்போதெல்லாம் புகை பிடிக்க தோணுகிறதோ அப்போதெல்லாம் சூரிய காந்தி விதையை வாயில் இட்டு சுவைப்பதன் மூலம் நிகோடின் வெறியை குறைக்கலாம் 




























மேலும் ஒரு படம் பார்க்க -லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/soory-gandhi-poo-ayurvedic-herbs.html


குணமாகும் நோய்கள் -நீர்சுருக்கு, தோல் நோய்கள்

Post Comment

பத்ராக்ஷம்

  • பாக்டீறீயாக்களை அழிக்கும்
  • வைரசை அழிக்கும் 
  • புஞ்சைகளை அழிக்கும் 
  • கேன்சர் செல்களை அழிக்கும் 
  • இரத்தத்தை சுத்தம் செய்யும் 
  • இருமலை குறைக்கும் 
  • ப்ரீ ராடிகல் என்னும் கசடுகளை அழிக்கும் ஆன்டி-ஆக்சிடண்டாக வேலை செய்யும் 
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் 
  • சதை வலிகளை குறைக்கும் 
  • புண்களை ஆற்றும் 
  • முடியை வளரச்செய்யும் 
  • வயிறு சம்பதமான பிரச்சனைகளை -கழிச்சலை போக்கும் 
  • கர்ப்பிணிகளுக்கு தரக்கூடாது -கர்ப்பம் கலையலாம்,இதய நோயாளிகள் தவிர்ப்பதும் நல்லது 
  • இரத்தத்தை உறைய வைக்கும் 





























  குணமாகும் நோய்கள் -வலிப்பு நோய், காய்ச்சல், நரம்பு நோய்கள்

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 02, 2010

கொடம்புளி-வ்ருக்ஷ ஆம்ல


கொடம்புளியை ஆயுர்வேதத்தில் வ்ருக்ஷ ஆம்ல என்று சொல்வோம் .
இப்போது மார்கெட்டில் உடல் எடை குறைக்க கூடிய ஆயுர்வேத மருந்துகளில் இந்த கார்சினியா என்ற கொடம்புளி சேராமல் இருக்கவே இருக்காது 
கொடம்புளியை இப்போது நிறைய கேரளத்து மக்கள் மீன் குழம்பு செய்ய பயன்படுத்துகிறார்கள் (மிக்க சுவையாக இருக்கும் )
கொடம்புளியை ரசமாகவும் சாப்பிடலாம்.

நாற்பது நாளில் குறையும் -கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் ???
1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?
கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
கொள்ளு (கருப்பு காணம்)  இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது 
3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3  மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .
4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது 
8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால்    சாபிடலாம்.
9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.

  • பசியை அடக்கும்-தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.
  • மலச்சிக்கல் தீர-புளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.





























மேலும் படிக்க http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/blog-post_09.html

குணமாகும் நோய்கள் -வயிற்று நோய்கள், வாத நோய்களில் சிறந்தது மலமிளக்கி

Post Comment

வியாழன், ஏப்ரல் 01, 2010

அரச மரம் -அஸ்வத்தம்



  • ஆயுர்வேதத்தில் அரச மரத்தை -அஸ்வத்த என்போம்
  • வேறு பெயர்கள் -போதி மரம் (போதி தரு ),சல பத்ர,திரு மரம் ,பிப்பலம் 
  • ஆச்சார்யர் சர்க்கார் -மூத்திர சங்கிரக நீயம் ,கஷாய ஸ்கந்தா பிரிவில் சேர்த்துள்ளார் 
  • ஆச்சார்யர் சுஸ்ருதர் -ந்யக்ரோதாதி கனத்தில் சேர்த்துள்ளார் 
  • பயன்பாடுகளில் -கப பித்த நோய்களிலும் ,ஆண்மை பெருக்கவும்,வர்ணத்தை கொடுக்கவும் ,புண்களை ஆற்றவும்,சுத்தம் செய்யவும் பயன்படும் 
  • நோய்களில் -பெண்களின் பெண் உறுப்பு நோய்கள்,வாத ரக்த என்னும் நீர் வாதத்திலும் ,தோல் நோய்களிலும் ,கெட்ட ஆரப் புண்களிலும் சரிசெய்யும் 
  • வாத ரக்த நோயில் -அரசம்பட்டையை குடிநீராக்கி குடிக்க தீரும் (சரக சம்ஹிதை -சி -இருபத்தி ஒன்பது அத்தி)
  • ஆண்மையில்லாதவனுக்கு (கிலைபியத்தில்)-அரசம் பாலில் அரச பூ,வேர்,பட்டை ,இலை மொக்கு வேக வைத்து தேன் சர்க்கரையுடன் சாப்பிட ஆண்மை இல்லாதவன் ஆண்மை பெறுவான்,குறி எழும்பாதவன் ஆண் மகனாவான் (சுஸ்ருத சம்ஹிதை -சி-இருபத்தி ஆறு )
  • தீப்புண்ணில் -அரசம்பட்டையின் வேர் பொடியை தூவ தீப்புண் சீக்கிரம் ஆறும் (வ்ரு-மாதவம் )
  • கடைகளில் கிடைக்கும் மருந்ந்துகளில்-அஸ்வத்த மூலாதி மோதகம் ,நால்பாமராதி தைலம் 
சித்த மருத்துவத்தில் 
  • செய்கை -விதை -மலம் இளக்கி,
  • இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் -அதனாலே "அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டு பார்த்தாள்" என்ற பழ மொழியும் உண்டு 
அரசவேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து 
வெருவவரும் சுக்கில நோய் வீட்டும் -குரல் வறள்வி
தாகமொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்பகற்றும்
வேக முத்தோ டம்போக்கும் மெய் (அகத்தியர் குண பாடம் )
  • இலை கொழுந்தை பாலில் அவித்து சர்க்கரை சேர்த்து உன்ன -காய்ச்சல் தணியும்-முப்பிணி தணியும் 
  • வித்தை -தக்க அளவில் சேர்க்க மலச்சிக்கல் போகும் ,குரல் வறட்டல் நீங்கும் -பசி தீ பெரும் 
  • பட்டியை பொடித்து சாம்பாலாக்கி தர விக்கல் நிற்கும் 
  • பட்டை தூளில் கழுவ -சொறி சிரங்கு குணமாகும் -புண் ஆறும் 
  • இம்மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து பிள்ளை பேறு இல்லா பெண்களுக்கு எலுமிச்சை பழம் அளவக்கு சூதகதிர்க்கு முன்பு சாப்பிட சூல் அமையும் 
  • இம்மரப்பாலை -பதத்தில் தடவ பித்த வெடிப்பு மாறும் 





























குணமாகும் நோய்கள் -மலமிளக்கும், தோல்நோய்கள்,ஈரல் நோய்,புண்களில் சிறந்தது

Post Comment