வியாழன், ஏப்ரல் 01, 2010

அரச மரம் -அஸ்வத்தம் • ஆயுர்வேதத்தில் அரச மரத்தை -அஸ்வத்த என்போம்
 • வேறு பெயர்கள் -போதி மரம் (போதி தரு ),சல பத்ர,திரு மரம் ,பிப்பலம் 
 • ஆச்சார்யர் சர்க்கார் -மூத்திர சங்கிரக நீயம் ,கஷாய ஸ்கந்தா பிரிவில் சேர்த்துள்ளார் 
 • ஆச்சார்யர் சுஸ்ருதர் -ந்யக்ரோதாதி கனத்தில் சேர்த்துள்ளார் 
 • பயன்பாடுகளில் -கப பித்த நோய்களிலும் ,ஆண்மை பெருக்கவும்,வர்ணத்தை கொடுக்கவும் ,புண்களை ஆற்றவும்,சுத்தம் செய்யவும் பயன்படும் 
 • நோய்களில் -பெண்களின் பெண் உறுப்பு நோய்கள்,வாத ரக்த என்னும் நீர் வாதத்திலும் ,தோல் நோய்களிலும் ,கெட்ட ஆரப் புண்களிலும் சரிசெய்யும் 
 • வாத ரக்த நோயில் -அரசம்பட்டையை குடிநீராக்கி குடிக்க தீரும் (சரக சம்ஹிதை -சி -இருபத்தி ஒன்பது அத்தி)
 • ஆண்மையில்லாதவனுக்கு (கிலைபியத்தில்)-அரசம் பாலில் அரச பூ,வேர்,பட்டை ,இலை மொக்கு வேக வைத்து தேன் சர்க்கரையுடன் சாப்பிட ஆண்மை இல்லாதவன் ஆண்மை பெறுவான்,குறி எழும்பாதவன் ஆண் மகனாவான் (சுஸ்ருத சம்ஹிதை -சி-இருபத்தி ஆறு )
 • தீப்புண்ணில் -அரசம்பட்டையின் வேர் பொடியை தூவ தீப்புண் சீக்கிரம் ஆறும் (வ்ரு-மாதவம் )
 • கடைகளில் கிடைக்கும் மருந்ந்துகளில்-அஸ்வத்த மூலாதி மோதகம் ,நால்பாமராதி தைலம் 
சித்த மருத்துவத்தில் 
 • செய்கை -விதை -மலம் இளக்கி,
 • இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் -அதனாலே "அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டு பார்த்தாள்" என்ற பழ மொழியும் உண்டு 
அரசவேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து 
வெருவவரும் சுக்கில நோய் வீட்டும் -குரல் வறள்வி
தாகமொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்பகற்றும்
வேக முத்தோ டம்போக்கும் மெய் (அகத்தியர் குண பாடம் )
 • இலை கொழுந்தை பாலில் அவித்து சர்க்கரை சேர்த்து உன்ன -காய்ச்சல் தணியும்-முப்பிணி தணியும் 
 • வித்தை -தக்க அளவில் சேர்க்க மலச்சிக்கல் போகும் ,குரல் வறட்டல் நீங்கும் -பசி தீ பெரும் 
 • பட்டியை பொடித்து சாம்பாலாக்கி தர விக்கல் நிற்கும் 
 • பட்டை தூளில் கழுவ -சொறி சிரங்கு குணமாகும் -புண் ஆறும் 
 • இம்மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்து பிள்ளை பேறு இல்லா பெண்களுக்கு எலுமிச்சை பழம் அளவக்கு சூதகதிர்க்கு முன்பு சாப்பிட சூல் அமையும் 
 • இம்மரப்பாலை -பதத்தில் தடவ பித்த வெடிப்பு மாறும் 

குணமாகும் நோய்கள் -மலமிளக்கும், தோல்நோய்கள்,ஈரல் நோய்,புண்களில் சிறந்தது

Post Comment

3 comments:

கருத்துரையிடுக