புதன், மார்ச் 31, 2010

ஆல மரம் -வட வ்ருக்ஷம்

 • சம்ஸ்க்ருதத்தில் இதனை வட என்போம் 
 • வேறு பெயர்கள் -ந்யக்ரோத ,தார்வி,க்ஷீரி,பழு மரம் ,பூதம் 
 • சரகர் இந்த ஆலமரத்தை மூத்திர சங்கிரகநீயம்(சிறுநீர் சுருக்கும் மருந்துகள் 
 • சுஸ்ருதர் -ந்யக்ரோத கனத்தில் இந்த மரத்தை சேர்த்துள்ளார் .
 • நோய்களில் -கப பித்த நோய்களை சரிசெய்யும் ,குழந்தையின்மை ,பெண்களின் பெண்ணுறுப்பின் பிரச்சனைகள் (யோனி நோய்கள் ),தளர்ந்த பெண் உறுப்புகளை இறுக்கமாக்க,ரக்த பித்த நோய்கள்,அக்கி நோய் ,முகத்தில் உள்ள கருப்பு (வியங்கம் ),அதிக தாகம்,வாந்தி 
 • ஆண் குழந்தை பிறக்க( -பும்சாவன விதிக்கு -)-ஆலமரத்தின் இளம் விழுதை பசும் பாலில் அரைத்து வலது மூக்கில் நசியம் குழந்தை தனிப்பதர்க்கு முன்பும் ,கருத்தரித்த பின்பு இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து விட ஆண் குழந்தை பிறக்க உதவும்( சுஸ்ருத சம்ஹிதை -சரிர ஸ்தானம் -இரண்டு )
 • கண்புரை நீங்க (திமிரம் )-கற்பூரத்தை (கடைகளில் கிடைக்கும் கற்பூரம் இல்லை ) ஆலமரத்தின் பால் விட்டு அரைத்து கண்ணில் அஞ்சனமிட தீரும் (சக்ர )தத்தா)
 • மருந்துகளில்-பஞ்ச வலகல சூர்ணம் ,ந்யக்ரோதாதி கசாயம் ,நால்பாமராதி தைலம் 
சித்த மருந்துகளில் 
 • செய்கை-துவர்ப்பி ,உரமாக்கி,காமம் பெருக்கி 
 • பண்பு -இதன் எல்லா பாகமும் மேகம்,வயிற்று கடுப்பு நீரழிவு  போக்கும் -உடல் வன்மை பெருக்கும்
அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட 
வச்சமற மேகமுந்தீ யாகுமே -இச்சகத்தில் 
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும் 
பூத மதிபதி போல் (தேரையர் வெண்பா )

சொல்லுகின்ற மேகத்தை துட்ட அகக்கடுப்பைக் 
கொல்லுகின்ற நீரழிவை கொல்லுங்காண்-நல்லாலின்
பாலும் விழுதும் பலமும் விதையும் பூவும் 
மேலும் இலையுமென விள்(அகத்தியர் குண பாடம் )
 • வாயில் ஏற்படும் சிறு கொப்பளங்களையும்,புண்ணையும்,கிரந்தி மேகத்தையும் போக்கும் உடலுக்கு வன்மை பேருக்கும்  
ஆலம் பால் -மேகத்தை போக்கும் ,அசைகின்ற பல்லை இறுக்கும்,தலைக்கு குளிர்ச்சி தரும் ,விந்துவை பெருக்கும்.

ஆலம்பால் மேக மறுதசையும் பல்லி றுக்கும்
கோல முடிக்குக் குளிர்ச்சி தரும் -ஞா லமத்தில் 
மெத்தவுமே சுக்கிலத்தை விர்த்தி செய்யுந் தாப்பமற்
சுத்த மதி முகத்தாய் ! சொல் (அகத்தியர் குனபாடம் )

பூதச் சுதை போற் பொருபாண்டிவைகளுக்கு 
பூதச் சுதை யுண்.

 • அருன்கொட்டைச் சமூலதைப் பொடித்து சூரணம் செய்து +ஆலம்பாலைச் சேர்த்து சரியாய் ஒரு மண்டலம் சாப்பிட -வெண்குட்டம் ,சோகை தீரும் 
 • நாக்கு வெடிப்பு ,வெள்ளை ,ஆண்மை குறைவு இவைகளை உள்ளுக்கும்,பல் ஆட்டம்,கால் வெடிப்பு இவைகளை மேலுக்குக்ம் வழங்கலாம் .
ஆலும் வேலும் பல்லுக்குறுதி 
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி 

ஆலம் விழுதால் பல் விலக்க பல் இறுகும்.

ஆலம்பட்டை-குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம்,ஈற்றுப்புன்,நாவெடிப்பு போகும் விரணங்களை கழுவ மாறும் 
பட்டையை இடித்து பத்து மடங்கு நீர் விட்டு ஊற வைத்து உள்ளுக்கு கொடுத்துவர நீரழிவு நீங்கும் 
ஆல் வேர் பட்டையை -குடிநீரிட்டு பாலுடன் பருக வெள்ளை தீரும் 
ஆலிலையை வதக்கி மேகபுண்ணில் கட்ட உடையும் 
  குணமாகும் நோய்கள்- வாத நோய்கள், பேதி, நீரிழிவு போக்கும் குளிர்ச்சி தரும்

  இன்னொரு லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/ala-maram-ayurvedic-medicine.html

  Post Comment

  0 comments:

  கருத்துரையிடுக