வியாழன், மார்ச் 18, 2010

கற்பூர வள்ளி

கற்பூர வள்ளி 

சம்ஸ்க்ருதத்தில் இதனை பர்ன யாவானி என்போம் .

முக்கிய உபயோகமாக -இலை சாறு பத்து மிலி சாப்பிட வயிற்றுபோக்கு நிச்சயம் சரியாகும் 
பிற உபயோகங்கள் -கிராணி கழிச்சல் ,சீத கழிச்சல் ,உதர நோய்,நீர்கடுப்பு ,சிறு நீரக கல் சரியாகும் .

காச இருமல் கதித்தம சூரியயையம்

பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்

கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்

கற்பூர வள்ளிதனைக் கண்டு

                   (அகத்தியர் குணபாடம்)

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின

நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே

                      (தேரையர் குணபாடம்)

  1. குழந்தைகளின் மாந்தம் குறைய -கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
  2. ஆஸ்துமாவின் தீவிரம் குறைந்திட -தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.
  3. சளித் குறைய -க ற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
  4. புகையின் பாதிப்பு குறைய   கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
  5. வியர்வை பெருக்கி- வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.
  6.  கிருமி நாசினியாகும்.வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.



















குணமாகும் நோய்கள்: காய்ச்சல், சளி, இளைப்பு, பசியின்மை போக்கும்

Post Comment

1 comments:

jasi சொன்னது…

same potto or ok pls cheakகற்பூர வள்ளிpotto andஇருவேலி

கருத்துரையிடுக