வெள்ளி, மார்ச் 12, 2010

எருக்கு

எருக்கு


எருக்​கை சமஸ்க்ருதத்தில் அர்க என்பர்.
எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும்.

இலைகள்​ : எருக்​கன் செடி​யின் இலைகளை எரித்து,​​ அதன் புகையை முகர்ந்தால்,​​ வாய் வழியாகச் சுவாசித்தால்,​​ மார்புச் சளி வெளியேறும்.​ ஆஸ்துமா,​​ இருமல் கட்டுப்படும்.
இதன் இலைகள்,​​ பூக்கள்,​​ வேர்,​​ பட்டைகள்,​​ எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.


மொட்டுகள்​ : இதன் மொட்​டு​கள்,​​ சுக்கு,​​ ஓமம்,​​ கறுப்பு உப்பு ஆகியவற்றை மெல்லியதாகப் பொடியாக்கி,​​ சிறிதளவு தண்ணீர் கலந்து பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.​ தினசரி இரண்டு மாத்திரைகள் வீதம் காலை,​​ மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம்,​​ பசியின்மை,​​ வாயு கோளாறு,​​ வயிறு உப்புசம் ஆகியவை கட்டுப்படும்.
பூக்கள்​ : காலரா,​​ வயிற்​றுப் போக்கு,​​ வாந்தி,​​ குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க இரண்டு எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.
பால்​ : எருக்​கம் பால் தலைப் பொடுகு,​​ படை,​​ மூட்டு வலி​கள்,​​ மூட்டு வீக்கம்,​​ மூலநோய்க்கு மருந்தாகப் பயன்தருகிறது.


கிராமப்புறங்களில் காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவுவர். இதனால் வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும். அத்துடன் முள்ளும் வந்துவிடும். குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும். உடம்பில் கட்டிகள் தோன்றி உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும். எருக்கஞ் செடியின் குச்சியை, கருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது.

வெள்ளெருக்கம்பூ Bronchitis, asthma ஆகியவற்றுக்குச் சிறந்தது.


குணமாகும் நோய்கள் வீக்கம், வாதநோய்கள், தொழுநோய்கள்
http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/eruku-ayurvedic-herbs.html

Post Comment

0 comments:

கருத்துரையிடுக