செவ்வாய், மார்ச் 23, 2010

கோரை கிழங்கு

ஆயுர்வேதத்தில் இதனை -முஸ்தா என்போம் .
 • ஆச்சார்யர் சரகர் இந்த மூலிகையை அரிப்பு நிறுத்தும் வர்க்கம் ,தாகம் தீர்க்கும் வர்க்கம் ,தாய்ப்பால் சுத்தம் செய்யும் வர்க்கத்தில் சேர்த்துள்ளார் மேலும் பேதியை நிறுத்த உதவவும்,பசியை தூண்டவும் ,தோல் வியாதிகளிலும் உள்ள மருந்துகளிலும் பயன்படுத்தியுள்ளார் .
 • ஆச்சார்யர் வாக்பட்டர் காய்ச்சலை நிறுத்த சிறந்த மூலிகை என்று குறிப்பிடுகிறார் 
 • கோரை கிழங்கு -ஜ்வரம்,கிருமி ,தாகம்,பேதி ,அரிப்பு ,கிரஹநீ,தூக்கமின்மை ,ரக்த வியாதிகளில்,அக்கி -விசர்பம் ,வலிப்பு ,தோல் நோய்களில் உபயோகமாகிறது 
 • எளிதாக கிடைக்ககூடிய ஆயுர்வேத மருந்துகளான முஸ்தாரிச்டம்,கங்காதர சூர்ணம் ,சடங்கபானியம் (ஆயுர்வேத நிலவேம்பு குடிநீர்),முஸ்தாதி வடி ,பாலா சதுர்புஜ சூர்ணம் ,முஸ்தாதி கசாயம் போன்ற பல மருந்துகளில் மிக முக்கியமான சேர்மான்மாகிறது
 • தனி மூலிகை வர்க்கத்தில் -முஸ்த எனப்படும் கோரைகிலங்கும் பற்படமும் -காய்ச்சலை நிறுத்த உதவும் (அஷ்டாங்க ஹ்ருதயம் -சி -ஒன்று )
 • பேதியை நிறுத்த -கோரை கிழங்கு கசாயத்துடன் தேன் சேர்த்து பருக பேதி நிற்கும் (சுஸ்ருத சம்ஹித -உத்-நாற்பது )
 • மஞ்சள் காமாலை ஹலீமகதில் -லோக பஸ்மதுடன்,கோரை கிழங்கு சூர்ணம் சேர்த்து -கருங்காலி கசாயந்துடன் பருக தீரும் (பாவ பிரகாஷ )
 • என்னுடைய மருத்துவ அனுபவத்தில் சதை வலி களுக்கு மிக சிறந்த மருந்து 

 •    செய்கை -துவர்ப்பி ,வெப்பமுண்டாக்கி உரமாக்கி,சிறுநீர்பெருக்கி,வியர்வை பெருக்கி ,உள்ளழல் ஆற்றி ருது உண்டாக்கி ,புழுவகற்றி
  ·         குணம் -நளிசுரம்,குருதி அழல் நோய்,சுரவகைகள் ,நீர்வேட்கை முப்பிணி ,கழிச்சல் ,பைத்திய தோடம்,பித்த காசம் ,கப ரோகம் குதிகாலை பற்றிய வாயு .வாந்தி இவை போகும் 

  செத்த சுரந்தீர்க்குஞ் செம்புனல் பித்தம் போகும்
  வாத சுரந்தணிக்கும் வையகத்தில் -வேதை செய்ய
  வந்த பிணியையெல்லாம் வாட்டுமுத் முத்தக்காசு
  கொந்துலவும் வார்குழலே ! கூறு
  அதிசாரம் பித்தம் அனற்றாகம் ஐயங்
  குதிவாதஞ் சோபங் கொடிய -முதிர்வாந்தி
  யாரைத் தொடர்ந்தாலும் அவ்வவர்க்கெ லாங்குலத்துக்
  கோரை கிழங்கை கொடு (அகத்தியர் குண பாடம் )


  ·         காச நோய் தீர -கோரை கிழங்கின் மாவை கிரமப்படி உபயோகிபின் காச நோய் குணமாகும்-
  கோல வுணவைக் குமர நடலிலடு
  கோல வுணவைக் கொடுக யத்தை-

  • நிலவேம்பு குடிநீருக்கான  பாட்டு 
  முத்தக் காசு பற்பாடகம் முதிர்ந்த விளமிச் சிருவேலி
  சுத்த சுக்கு சண்டனமுஞ் சுகமாய்க் காய்ச்சி குடிபீரேல்
  சித்தப் பிரமை யுடன் பிறந்த தேனே மானே சேர்கன்னாய்
  பித்தத் துடனே வந்த சுரம் பேச தோடிப் போய் விடுமே ..

  இப்போது வந்து கலக்கிய சிக்குன் குனியா ,மற்றுமுள்ள மர்மக்காய்ச்சளுக்கு இந்த மூலிகை கலவையே பயன்பட்டது ..மேலும் விவரங்களுக்கு     இந்த http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/blog-post_15.html நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள் கிளிக் செய்து பார்க்கவும்

  ·         கோரைக் கிழங்கு மாம்பட்டை ஆகிய இரண்டையும்இடித்துப் பொடியாக்கிப் பிட்டு செய்துஅதை நன்கு பிழிந்தெடுத்த சாற்றில் அதிடயம்இலவம் பிசின் இவற்றைச் சேர்த்து தக்க அளவில் உட்கொண்டால் கழிச்சல் ஜுரம் தீரும்.

 • ·         இதன் குடிநீரை பேதிகுன்மம்வாந்தி முதலியவற்றிற்குத் தரலாம்.
 • ·         இஞ்சிகோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டரைத்து ஒரு சிறு சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி போகும்.
 • ·         பச்சைக் கிழங்கை அரைத்து மார்பில் பற்றாகப் போட்டால் பால் சுரக்கும் தேள் கடிபட்ட இடத்திலும் பற்றிடலாம். உடல் மீது பூசி வந்தால்     வியர்வை நாற்றம் போகும்.
 • ·         கோரைக் கிழங்குபேய்ப்புடல்திரிபலைதிராட்சைவேம்புவெட்பாலை இவைகளை வகைக்கு கொஞ்சம் எடுத்து முறையாக குடிநீர் செய்து சாப்பிட்டால் சுரம் நீங்கும்.
 • ·         கோரைக்கிழங்கு முழுகுநீர் கோரைக்கிழங்குதிரிபலைமருக்காரைபுங்குகொன்றைவாலுளுவைவாற்கோதுமைஏழிலைப் பாலைகோட்டம்ஞாழல்மரமஞ்சள்வெண்கடுகு இவற்றை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் பெருநோய்சொறிவீக்கம்பாண்டு தீரும்.
 • ·         கோரைக்கிழங்குசீந்தில்மரமஞ்சள்அன்னபேதிகோண்டம்வெள்ளிளலோத்திரம்கந்தகம்சாம்பிராணிவாய்விடங்கம்மனோசிலைதாளசம்அலசிப்பட்டை இவற்றைப் பொடித்துஉடலில் எண்ணெய் தடவிஅதன்பின் மேற்படி பொடியைத் தேய்க்கசருமப்படைசிரங்கு நீங்கும்.
 • ·         கோரைப்பாய் இது சிறியபெரிய கோரைக்களால் செய்யப்படுகிறது. இதில் படுத்து வந்தால் பசிமந்தம்காய்ச்சல் வேகம் நீங்கும்உடலுக்கு குளிர்ச்சி தரும்தூக்கம் உண்டாகும்

குணமாகும் நோய்கள்: வயிற்று உபாதை, நீர்சுருக்கு, காய்ச்சல்
மேலும் இதே மூலிகைக்கான மற்றுமொரு லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/koraikizangu-ayurvedic-herbs.html

Post Comment

3 comments:

கருத்துரையிடுக