- ஆனசுவடி என்று அழைக்கபடும் இந்த மூலிகை யானையின் கால் தடம் போன்று உள்ளது போல் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம் -
- சம்ஸ்க்ருதத்தில் இதனை கோஜிஹ்வா (ஆட்டின் நாக்கு ) என்று அடையாளம் காணப்படுகிறது
- சிறந்த கிருமி நாசினியாக இது ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது
- வேரும் இலையும் -நீர்கடுப்பு,கழிச்சல் ,சீத கழிச்சல் சரி செய்ய உதவுகிறது -வயிறு வலி வீக்கம் போக்கும்
- வேர் -வாந்தி நிற்க உதவும்
- வேர் பொடியும்-மிளகு +கிராம்பு பொடியுடன் சேர்த்து பல் துலக்க பல் உறுதியாகும் ,பல் வலி போகும்
- இலை புண் ஆற,கரப்பான் மாற வெளி பிரயோகமாக உதவுகிறது
- நெஞ்சு சளி ,அம்மை நோய்க்கும் இதை கேரளாவில் பயன் படுத்துவார்கள்
- மூளையின் ஆற்றலை பெருக்க உதவுகிறது
- நீர் பெருக்கியாகவும்,வலி நீக்கியாகவும் பயன்படும்
குறிப்பு படத்தில் தவறாக ஆனை நெருஞ்சில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது -இது ஆனை நெருஞ்சில் இல்லை-படத்தில் எழுத்து பின்பு எடிட் செய்யப்படும்
குணமாகும் நோய்கள் -நீர் கல்லடைப்பு, நீர்கடுப்பு, வீக்கம், ரத்தபேதி,வாந்தி, தோல் அரிப்பு போக்கும்
0 comments:
கருத்துரையிடுக