வெள்ளி, மார்ச் 19, 2010

மரமஞ்சள்

மரமஞ்சள் 
ஆயுர்வேதத்தில் இதனை தாரு ஹரித்ர என்போம் .
கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -தார்வி கிருதம்,தார்வ்யாதி க்வாதம் ,,தார்வ்யாதி தைலம் ,,தார்வ்யாதி லேஹியம் .

ஆசார்யர் சரகர் இதனை -மூல நோய் தீர்க்கும் கசாய வர்கத்திலும்,அரிப்பு நிறுத்தும் கசாய வர்கத்திலும்,லேகநீய -லாக்ஷாதி வர்கத்திலும் சேர்த்துள்ளார் 

குணமாகும் நோய்களில்-பிரமேகம்,கண் நோய்கள்,பெண்களின் வெள்ளை படுதல்,காமாலை ,புண்,அக்கி களில் பயன்படும் 
 1. மர மஞ்சளின் குடிநீர்  தேனுடன் அருந்த வெள்ளை படுதல் சரியாகும் 
 2. மேக நோய்களின் வகைகளில் பிஸ்ட மேஹத்தை சரியாக்கும் 
 3. கோமியதொடு மரமஞ்சள் அரைத்து பூச கட்டிகள் உடையும் .
 4. மரமஞ்சளும் நெல்லிகாயும் தேனுடன் சாப்பிட நீர் கடுப்பு,நீர் தாரை எரிச்சல் தீரும் 
 5. கண் நோய்களில் மிகவும் பயன் தரும்-பல அஞ்சனங்களில் இம்மூலிகை பயன்படுகிறது 
 6. உடல் எடை குறையவும் பயன்படுகிறது
  செய்கை -வெப்பகற்றி,பசிதூண்டி,உரமாக்கி ..
  குணம் -குழந்தை களுக்கு உண்டாகும் கணமும் ,மூலநோய்,சுவையின்மை ,கணசுரம்,உட்சுரம் போக்கும் 

  அழன்ற கண மூலமும் அருசியுடனே 
  உழன்ற கணசுரமும் ஓடுஞ் -சுழன்று ள்ளே 
  வீறு சுறா முந்தனியும் வீசுமர மஞ்சளுக்குத் 
  தேறு மொழியனமே செப்பு (அகத்தியர் குண பாடம் )

  1. இதை இடித்து பத்து கிராம் எடுத்து குடிநீரிட்டு கொடுத்துவர மேற்கண்ட பிணிகள் விலகும்.சுரத்திற்கு பின் உள்ள பலஹீனம் மாறும்.
  2. மர மஞ்சளை நீர் விட்டு அரைத்து தலையில் பற்றிட வெப்பம் மாறும்.,குருதி கட்டிய வீக்கம் மாறும்,தோல் சிதைவுகளில் பூச அவைகள் நீங்கும் 

  குணமாகும் நோய்கள் :புண், கண்நோய்கள், பசியின்மை, தோல்நோய்கள் நீக்கும்

  இன்னுமொரு லிங்க் 

   http://ayurvedamaruthuvam.blogspot.com/2009/12/mara-manjal-ayurvedic-herbs.html

   Post Comment

   1 comments:

   கருத்துரையிடுக