செவ்வாய், மார்ச் 16, 2010

காட்டு கடுகு


காட்டு கடுகு  
வேறு பெயர்கள் : நாய்வேளை ,நாய்கடுகு ,பெருவேளை

செய்கை -அகட்டு வாய் அகற்றி ,புழுக்கொல்லி ,அழுகலஅகற்றி ,தடிப்புண்டாக்கி,கொப்புளமேழுப்பி
குணம் 
 1. வயிற்று பொருமல் ,உடல் கடுப்பு,குத்தல்,காது குத்தல் .,காதிரைச்சல் ,மூக்கு நீர் பாய்தல் இவைகளை போகும் 
 2. இலையை வெந்நீர் அரைத்து வீக்கங்களுக்கின் மேல் பற்றிட வீக்கம் குறையும்.
 3. இலையை நெய் விட்டு காய்ச்சி புண்கள் ,கட்டிகளில் பூச சீக்கிரம் குணமாகும்.
 4. பேய் பிடித்ததென்று(பேய் ,பிசாசு என்று ஒன்று இல்லவே இல்லை ) தன்னை அறியாது தலை விரித்தாடும் பெண்களுக்கு இக் கடுகை நெருப்பிலிட்டு புகை காட்ட அந்த பயம் போகும் -தெளிவு பிறக்கும் 


  1. சூதக வாயுவொடு சோணி தத்தின் வாதமும் போம்
  வாத வலி குன்மம் மடியுங் காண்-மாது நல்லாய் 
  பேய்க்குப் புகையிடப் பேசா தொழிந்துவிடும்
  நாய்க்கடுகை நீ விரும்பினால் .

  வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல் 
  ஓதமிகு பீனச்மும் ஒடுங் காண் -போதறிந்து
  காய்வேளைக் காயுவிழிக் காரிகையே ! வைய மதில் 
  நாய் வேளை யுண்ண நவில் ...(அகத்தியர் குண பாடம் )


குணமாகும் நோய்கள்: மூட்டு வீக்கம், கிருமி, பசியின்மை

Post Comment

0 comments:

கருத்துரையிடுக