காயின் குணம்: கையால் சுவையின்மை ,நீங்க வெப்பம்,கபம்,சுரம் இவை போம்.வற்றலால் சுவையின்மையும் கரப்பானும் நீங்கும்
கிழங்கால் முப்பிணி,கீல்களில் உண்டாகும் குத்தல்,அழல் நோய்,நீரழிவு ,நாப்புண்,இரைப்பு ,கோழை நீங்கும்
பொது குணம் -கோழை அகற்றி ,இசிவகற்றி ,முறை வெப்பகற்றி,உஷ்ணகாரி,வியர்வை பெருக்கி
கண்ணுங் குளிர்ச்சிபெறுங் காசமொடு வாயுவறும்
புண்ணுஞ் சிரங்கும் புரண்டேகும்-நண்ணுடலும்
மீதிலார் வெப்பகலும் வீழாநீர்க் கட்டேருங்
கோதிலாக் கோவையிலைக்கு
(அகத்தியர் குணபாடம்)
- கண் நோய் குணமாக-கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
- தோல் கிருமிகள் நீங்க-தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.
- இரத்தம் சுத்தமடைய-கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
- உடல் சூடு சமநிலையிலிருக்க-அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .
- வியர்க்குரு ஏற்படாமல் தடுக்க-கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.
- தாது புஷ்டியாக-தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.
- இது உடம்புக் குளுமையாக வைக்க உதவும்
- ரத்தப் பெருக்கை தடுக்கும் கோவைக்காய்
- நீரிழிவு நோய் போக்கும் கோவைக்காய் / சர்க்கரை நோயை போக்கும
-
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
குணமாகும் நோய்கள்
நீரிழிவு, ஈரல் நோய்கள்
2 comments:
உங்களுடைய மூலிகை பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. நீரிழிவு நோயை சரி செய்வதற்கு ஏதேனும் நிரூபிக்கப்பட்ட மூலிகைகளோ அல்லது சிகிச்சை முறைகளோ உள்ளதா? நீங்கள் அதை உங்கள் அனுபவத்தில் சரி பார்த்திருக்கிறீர்களா? எனக்கு ஜூவெனைல் டயாபெடிஸ் கடந்த 25 வருடங்களாக உள்ளது. ஏதேனும் மருத்துவம் இருந்தால் மிக உபயோகமாக இருக்கும். நன்றி.
வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடவும். பின்னூட்டமிடுபவர்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தரும்.
நன்றி அமர பாரதி -
தங்களது கருத்துரைக்கு நன்றி -
தாங்கள் படித்து வரும் மேல் கூறிய மூலிகைகள் இன்னும் சரியாக எண்பது மிச்சம் உள்ளது -அதனை முடிக்க இன்னுன்ம் எனக்கு இருபது நாட்கள் தேவைப்படும்
பின்னர் நீங்கள் கேட்டது போல் அனைத்திற்கும் கட்டுரைகளாக எழுத உள்ளேன் (நீரழிவையும் சேர்த்து தான் )
டைப் ஒன் டய பட்டீசுக்கு மிக சிறந்த மருந்துகள் உள்ளது -
நீரழிவை நோய் என்பதை விட -நோய்களுக்கு தாய் என்றே சொல்லலாம்.நீரழிவால் வரக்கொடிய பல பக்க விளைவுகளையும் ஆயுர்வேத மருந்துகள் தடுத்து விடும்
கதக கதிராதி கசாயம் அல்லது நிஷா கதகாதி கசாயம் அல்லது மேஹாந்தக கசாயம் -தினமும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இன்சுலின் சுரக்க ஆரம்பிக்க வாய்ப்புள்ளது
அபிரக பஸ்மம் (நூறு புடம் ) தினமும் இரண்டு உளுந்து எடை அளவுக்கு பாலில் காலை ஆகாரத்திற்கு பின் சாப்பிட நல்ல பலன் தரும் -இன்சுலின் ஊசியின் யூனிட்டையும் குறைத்து விடலாம்.
நிஷா ஆம்லகி மாத்திரை காலை மதியம் இரவு இரண்டு மாத்திரைகள் சாப்பிடலாம்.
புஜங்காசனம் -வயிற்றின் மேல் பக்கம் மாகா முத்திரையுடன் செய்ய பலன் கிடைக்கும்
other wise please call me 09688778640
கருத்துரையிடுக