புற்று நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புற்று நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 18, 2019

கணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை

கணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை ..

உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூட இந்த கணைய புற்று நோயால் ..எந்த வித மிக பெரிய சிகிச்சைக்கும் பலன் தாராமல் இறந்து போனார் ...பணம் இந்த சிகிச்சைக்கு பலன் தராது

இன்று இறந்து போன கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் அவர்களுக்கும் இந்த கணைய புற்று நோய் தான் இருந்தது.AIIMS போன்ற தரமான மருத்துவமும் கூட இந்த நோய்க்கு தீர்வை தரவில்லை ..மிக பெரிய பதவியில் இருந்தாலும் ..சிறந்த சிகிச்சை பலன் தரவில்லை என்பது இங்கே தெளிவாகிறது .

வெறும் அல்சர் தானே என்று  அலட்சியம் செய்யும் நிலையில் உள்ள நமக்கு தெரிய வாய்ப்பே இல்லை ...அது கணைய புற்று நோயாக கூட இருக்கும் என்று....சைலன்ட் கில்லர் என்று அடை மொழியோடு நம்மை தாக்க காத்திருக்கும் ஒரு புற்று நோய் இதற்கு மட்டுமே பொருந்தும். எளிதாக கண்டு பிடிக்கவே முடியாத கணைய புற்று நோய். கணைய புற்று நோய் என்று கண்டு பிடிக்கப்பட்டால் எந்த வகை சிகிச்சை அளித்தாலும் இரண்டாவது ஆண்டில் உயிர் பிழைக்க வாய்ப்பு 8 % சதவீதம் மட்டுமே..

இறப்பை இரக்கமற்று தரக்கூடிய புற்று நோயில் கணைய புற்று உலகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதை நினைக்க பயங்கரமாக இருக்கிறது.

ஆண்களில் வரக்கூடிய புற்று நோயில் 11  வது இடமும்,பெண்களுக்கு 9 தாவது இடத்தில் இருந்தாலும் வெகு வேகமாக முதல் மூன்று இடங்களுக்கு முன்னேறிக்கொண்டே இருக்கிறது இந்த கணைய புற்று நோய் ..

இந்த நோயினால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நான்கு ஆண்டுக்கு மேல் ஒரு நோயாளியை ஆயுர்வேத சிகிச்சை பெரிய பொருட் செலவு இல்லாமல் காப்பாற்றி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கே தெரிவித்து கொள்கிறேன் .கடந்த பிப்ரவரி மாதம் அமிர்தா மருத்துவ கல்லூரியில் நடை பெற்ற புற்று நோய் கருத்தரங்கில் இந்த ஆய்வு கட்டுரையை பல்வேறு நிபுணர்களுக்கு மத்தியில் சமர்பித்தேன். பல மருத்துவ வல்லுனர்களின் பாராட்டை பெற்ற இந்த ஆய்வு கட்டுரையின் சான்றிதழையும் இத்துடன் இணைத்துள்ளேன் ...

கணைய புற்று நோய்க்கு ஆயுஷ் மருத்துவம் ஒரு சிறந்த தீர்வை தரவல்லது.

Post Comment

வெள்ளி, மார்ச் 31, 2017

புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறையில் சாதனை

புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறையில் சாதனை 

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர்  ஷ்யூர்).,BAMS.,M.Sc.,MBA,

“உயிர் கொடுத்து எழுப்புங்கள் எனது செல்ல மகனை” என்ற தாய்க்கு  “இறப்பில்லா வீட்டில் ஒரு படி அரிசி வாங்கி வா “ என்றார் புத்தர். எங்கு தேடியும் கிடைக்காத அந்த ஒரு படி அரிசி . இப்போது புற்று நோய் இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு புற்று நோய்க்கான காரணிகளோடும் ,புற்று நோயை உண்டாக்கும் உணவுகளோடும் ,சூழ்நிலைகளோடும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆரம்ப நிலை புற்று நோய்கள் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றாலும் கிட்டத்தட்ட எல்லா புற்று நோய்களும் முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்க முடிகிறது என்பது தான் யதார்த்த உண்மை. வாழ்வியல் நோய்களான உயர் இரத்த அழுத்தம் ,கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் , இதய இரத்த குழாய் அடைப்பு என்று நீளும் பட்டியலில் புற்று அதிக விழுக்காட்டை நோக்கி விரைகிறது என்கிறது ஒரு புள்ளியல் அறிக்கை.

எது புற்று நோய் என்கிற அறிவியல் விளக்கம் வழமைக்கு மாற்றான அதிகபடியான கட்டுப்பாடில்லாத வேகமாக வளர கூடிய கட்டிகளை புற்று என்ற நிலை மாறி இப்போது வித்தியாசமாக எது இருந்தாலும் அது புற்றாக இருக்கும் என்ற நிலைக்கு மருத்துவ அறிவியல் தள்ளபட்டிருப்பது பயத்தை ஏற்படுத்துகிறது . சாதாரண கட்டிகளை புற்றாக மாறிவிட வாய்ப்பு அதிகம் என்று கருப்பைகளை குப்பைக்கு அனுப்பி மருத்துவ வியாபாரம் பார்க்கிறது என்பது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

புற்று நோய்க்கு உதவும் உயிர் காக்கும் மருந்துகள் விலையோ மிக மிக அதிகம் . உயிரை விட பணம் பெரியது இல்லை என்றாலும் கூட திரும்பி வராது என்ற உத்தரவாதம் அளிக்க இயலா தொடர்கதை சிகிச்சைகள் தான் மிக பெரிய வருத்தம் .முற்றிவிட்டது- குணப்படுத்த இயலாது என்று கூறி கொண்டே சிகிச்சைகள் தொடர்வது மிக மிக வருத்தம் அளிக்க கூடியது.புற்று நோய் பாதித்த பகுதியை வெட்டி எறிந்த பின்னும் ,தொடர் கீமோ தெரபிக்கு பின்னும் தாங்க முடியா வலிகளுக்கு என்ன பதில் ?

ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்றால் என்ன ?

ஆங்கில மருந்துகளோடும் ,ஆங்கில மருத்துவ சிகிசைகளோடும் இணைந்தும்/ தனியாகவும் தரக்கொடிய ஆயுர்வேத ,சித்த ,யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,இயற்க்கை உணவுகள்  ஆயுஷ் சிகிச்சை முறைகளை நாம் ஒருங்கிணைத்து சிகிச்சை செய்வதால் நாம் இதனை ஒருங்கிணைந்து சிகிச்சை என்று சொல்கிறோம் .ஒரு புற்று நோயாளிக்கு எது சிறந்ததோ /எது தேவையோ /எந்த சிகிச்சை எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் புற்று நோய்க்கு எதிராக போராட பயன் படுத்துவதால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்கிறோம்.

ஆயுர்வேதத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள் .

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்க ரசாயன சிகிச்சை முறைகள் ,பஞ்ச கர்ம சிகிச்சைகள் ,தோஷங்களை சம நிலை படுத்துகிற சிகிச்சைகள் தேவைக்கு தக்கவாறு கொடுக்கப்படுகிறது .மருந்துகளில் அம்ருத பல்லதாக லேஹ்யம் ,குக்குலு திக்தக நெய், போன்ற மருந்துகளையும்  ஷட்குண செந்தூரம் போன்ற மருந்துகளை தேவை கருதி BAMS –மருத்துவ ஆலோசனையோடு சரியாக பயன்படுத்துகிறோம்

சித்த மருத்துவத்தில் புற்று  நோய்க்கான சிகிச்சை முறைகள்
நெய் குறி என்னும் மூத்திர பரிட்சை, நாடி பரிட்சையில் கப வாத நாடியின் ஓட்டம் போன்றவை அறிந்து சித்தர்கள் அருளிய மருந்துகளான சேராங்கொட்டை நெய் , வான் மெழுகு ,கற்பூர மெழுகு ,ரச கந்தி மெழுகு ,மேலும் தாமிர பற்பங்கள் கலந்த மூளிகைசாறுகள் தக்க சுத்தி சிகிச்சைக்கு பின் தக்க பத்தியங்களோடும் முறையாக சரியாக MD ( Siddha ),BSMS  படித்த மருத்துவர்கள் துணையோடு தரப்படுகிறது .

ஹோமியோபதியில் புற்று நோய்கான சிகிச்சை முறைகள்

உயிர் சக்தி என்னும் Vital Force ஐ அதிகப்படுத்திற மருந்துகளையும் ,ஜெர்மன் மருந்துகளையும் , Carcinosinum, Chelidonium, Scirrhinum, Vinca Minor போன்ற பல்வேறு மருந்துகளையும் ,பல முக்கிய நாசோட்களையும் சரியான வீர்யத்தில் கொடுக்க நல்ல உடலின் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .வாயிலே எல்லா மருத்துகளும் கரைவதால் விழுங்க இயலா நோயாளிக்கும்  மிக எளிமையாக கொடுக்க இயலும் .புற்று நோய் இருக்கும் இடம் ,தற்போதைய குறி குணங்கள் இவற்றை அனுசரித்து புற்று நோயாளியின் மன பயத்தை நீக்கி தெளிவு கிடைக்க ,பசி எடுத்து சாப்பிட,நன்கு உறங்கிட ஹோமியோ மருத்துகள் நல்ல பலன் தரும்.BHMS படித்த மருத்துவரின் உதவியோடு நாம் இந்த மருந்துகளை long acting medicine /short acting medicine என்று பிரித்து கொடுக்கிறோம் .

யுனானி மருத்துவத்தில்  புற்று நோய்கான சிகிச்சை முறைகள் .

ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுக்கும் சிகிச்சை முறைகள் ,மருந்துகளில் கஸ்தூரி சேர்ந்த மருந்துகள் ,காமிரே அப்ரேச மருந்துகள் ,சிறப்பு டானிக்குகள் உடல் வலு ஏற்ற  சிகிச்சை அளிக்கபடுகிறது .

அக்குபஞ்சர் மருத்துவத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள்
அக்குபஞ்சர் நாடி பார்த்து ,Five Element  தியரி படியும் ,Qi சக்தியை அதிகரிக்க ,Balancing அக்குபஞ்சர்  சிகிச்சைகளும் தரப்படுகிறது .

யோகா ,மூச்சு பயிற்சிகளில் புற்று நோய்க்கான சிகிச்சை
உடல் வன்மை ,பிராண சக்தி அதிகரிக்க theraputical yoga சொல்லிகொடுக்கபடுகிறது

பஞ்ச கவ்யம் ,முள்ளு சீதா சாறுகள் கொண்டு புற்று நோய்க்கான சிகிச்சைகள்
கேன்சர் செல்களை அழிக்க வல்ல உணவு சிகிச்சைகளும் ,இயற்கை உணவு அட்டவணைகளும் ,உணவு உண்ணும் முறைகளும் கற்று தரப்படுகிறது

கேன்சர் வலிகளுக்கு சிறப்பு சிகிச்சை ..
எந்த ஊசி, மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலிகளை மிக எளிதான மருந்தில் குறைக்க உதவுகிற மூலிகைகளும் கொடுக்கபடுகிறது

ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளே சிறந்த சிகிச்சை

புற்று நோயாளிக்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத,சித்த ,ஹோமியோபதி யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,நேச்சுரோபதி  சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை/  தீர்வை  நிச்சயம் தர இயலும் .இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெற்றிட ,சிறந்த மருத்துவ ஆலோசனைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர்  ஷ்யூர் ).,BAMS.,M.Sc.,MBA,

கடையநல்லூர் கிளை -அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04633 242522

திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664.

ராஜபாளையம் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.

சென்னை கிளை -ஹெர்ப்ஸ்ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6000

Post Comment

வெள்ளி, மார்ச் 24, 2017

புற்று நோயை வரவைக்கும் மஞ்ச பொடி..

மங்களகரமாய் எதை ஆரம்பித்தாலும் மஞ்சளில் ஆரம்பிப்பது தமிழர் மரபு.
மஞ்சள் சேர்ந்தால் தான் எந்த உணவும் முழுமை பெரும் .உணவில் நிறத்தை மட்டுமல்லாது உணவில் நமக்கு தெரியாமல் ஏற்பட போகிற ஏதாவது விஷ சேர்க்கை இருந்தாலும் மஞ்சள் அதை மாற்றி நம்மை காக்கும் என்பது உண்மை. அமெரிக்கர்கள் இந்திய மஞ்சளுக்கு பேடன்ட் வாங்கி விட்டார்கள் என்று ஆதங்க படுபவர்கள் நாம் –உண்மையான மஞ்சள் இப்போது கிடைக்கிறதா என்று கேட்டு உறுதிபடுத்தி கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.

பாக்கெட்டில் விற்கும் அத்தனை பொடிகளும் –லேபிளில் படத்தை போட்டு விட்டால் அதை உண்மை என்று நம்பி விடுகிறோம் . நமது அவசர தேவையை உணர்ந்த பல கம்பெனி மஞ்சள் தூள் பிராண்டுகளில் பல கலப்படங்கள் உள்ளது என்று பரிசோதனைகள் சத்தியம் செய்கின்றன.

மஞ்சள் புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தும் என்று நம்புகிற நாம் வாங்கும் மஞ்சள் பொடியில் மஞ்சள் நிறம் தான் அதிகம் உள்ளது .அதிலே உள்ள கலப்படங்கள் புற்றுநோயை வரவைக்கும் ஆற்றல் படித்தவை என்பதை அறிந்து கொள்வது நமது கடமை

மஞ்சள் பொடியில் என்ன என்ன கலப்படங்கள் உள்ளது .

சுண்ணாம்பு என்கிற ச்சாக் பொடி,மரத்தூள் ,அரிசி தவிடு அரைத்தது , அரிசி மாவு ,ஸ்டார்ச் ..இன்னும் பல பல எடையை கூட்டவும் ..

நிறத்திற்காக –மெட்டானில் யெல்லோ,புற்று நோயை வரவைக்க கூடிய லெட் க்ரோமேட் என்ற பொருளும் அதிக அளவு சேர்கிறார்கள் என்கிற ஒரு ஆராய்ச்சி நிறுவனம். முழு மஞ்சள் மற்றும் மஞ்சள் தூள் தயார் செய்யும் உற்பத்தியாளர்கள் லெட் குரோமேட் என்னும் வேதிபொருளை கலந்து மஞ்சளுக்கு செயற்கையாக நிறம் கொடுத்து, நல்ல மஞ்சள் நிறத்தை உண்டாக்கி, அதனை வாங்குவோரை ஏமாற செய்து விற்பனையில் நல்ல இலாபம் பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து வாங்கி உபயோகிப்பவர்களுக்கு ரத்த சோகை முடக்குவாதம் ,புற்று நோய் ,நரம்பு தளர்ச்சி ஆகிய கொடிய நோய்கள் ஏற்படும். மேலும் கருவுற்ற தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்படும்.

எப்படி கண்டுபிடிப்பது ?

கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 

ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம்.

லெட் க்ரோமேட் சேர்ந்ததை கண்டு பிடிக்க –மஞ்சள் பொடியை எரித்து சம்பலாக்கி ஒரு சோதனை குழாயில் எடுத்து அதில் அடர் கந்தக அமிலம் 1: 7 விகிதத்தில் கலந்து .அதில் 0.1% dipenylcarbazide ஒரு சொட்டு சேர்க்க –இளஞ் சிவப்பாக (பிங்க் ) மாறினால் அதில் புற்று நோயை வரவைக்க கூடிய லெட் க்ரோமேட் சேர்த்திருக்கிறார்கள் என்று பொருள்.

அம்மோனியம் சேர்த்து இருந்தால் நிறம் மாற்றம்

மரத்தூள் கலந்தால் –கிளாசில் அடியில் படிவது

தண்ணீரில் கலந்தால் உடனடியாக மான்கள் நிறம் பெறுவது –போன்றவையும் கலப்படம் தான் ..

அறிவுரை –

பசு ( ஈர) மஞ்சளை வாங்கி –நிழலில் காய வைத்து அரைப்பது தான் நல்லது .

பாக்கெட்டில் விற்கும் எந்த கம்பெனி பிரான்டிற்கு உத்தரவாதம் இல்லவே இல்லை 

தரமான மஞ்சளை என்றுமே பயன்படுத்தி –கலப்படம் இல்லாத ஆயுர்வேத மருந்துகளை பெறவும் .தரமான ஆயுஷ் மருத்துவ ஆலோசனை பெறவும் அணுக வேண்டியது . ஒருங்கிணைந்த சிகிச்சை பெற –,ஆயுர்வேதம்,சித்தா ,ஹோமியோபதி , யுனானி ,அக்குபஞ்சர் ,யோகா & இயற்கை சிகிச்சைகள் போன்ற சிகிச்சைகளை பெற மருத்துவ ஆலோசனை பெற அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000..

Post Comment

சனி, பிப்ரவரி 07, 2015

புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறை

“உயிர் கொடுத்து எழுப்புங்கள் எனது செல்ல மகனை” என்ற தாய்க்கு  “இறப்பில்லா வீட்டில் ஒரு படி அரிசி வாங்கி வா “ என்றார் புத்தர். எங்கு தேடியும் கிடைக்காத அந்த ஒரு படி அரிசி . இப்போது புற்று நோய் இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு புற்று நோய்க்கான காரணிகளோடும் ,புற்று நோயை உண்டாக்கும் உணவுகளோடும் ,சூழ்நிலைகளோடும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆரம்ப நிலை புற்று நோய்கள் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றாலும் கிட்டத்தட்ட எல்லா புற்று நோய்களும் முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்க முடிகிறது என்பது தான் யதார்த்த உண்மை. வாழ்வியல் நோய்களான உயர் இரத்த அழுத்தம் ,கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் , இதய இரத்த குழாய் அடைப்பு என்று நீளும் பட்டியலில் புற்று அதிக விழுக்காட்டை நோக்கி விரைகிறது என்கிறது ஒரு புள்ளியல் அறிக்கை.

எது புற்று நோய் என்கிற அறிவியல் விளக்கம் வழமைக்கு மாற்றான அதிகபடியான கட்டுப்பாடில்லாத வேகமாக வளர கூடிய கட்டிகளை புற்று என்ற நிலை மாறி இப்போது வித்தியாசமாக எது இருந்தாலும் அது புற்றாக இருக்கும் என்ற நிலைக்கு மருத்துவ அறிவியல் தள்ளபட்டிருப்பது பயத்தை ஏற்படுத்துகிறது . சாதாரண கட்டிகளை புற்றாக மாறிவிட வாய்ப்பு அதிகம் என்று கருப்பைகளை குப்பைக்கு அனுப்பி மருத்துவ வியாபாரம் பார்க்கிறது என்பது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

புற்று நோய்க்கு உதவும் உயிர் காக்கும் மருந்துகள் விலையோ மிக மிக அதிகம் . உயிரை விட பணம் பெரியது இல்லை என்றாலும் கூட திரும்பி வராது என்ற உத்தரவாதம் அளிக்க இயலா தொடர்கதை சிகிச்சைகள் தான் மிக பெரிய வருத்தம் .முற்றிவிட்டது- குணப்படுத்த இயலாது என்று கூறி கொண்டே சிகிச்சைகள் தொடர்வது மிக மிக வருத்தம் அளிக்க கூடியது.புற்று நோய் பாதித்த பகுதியை வெட்டி எறிந்த பின்னும் ,தொடர் கீமோ தெரபிக்கு பின்னும் தாங்க முடியா வலிகளுக்கு என்ன பதில் ?

ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்றால் என்ன ?
ஆங்கில மருந்துகளோடும் ,ஆங்கில மருத்துவ சிகிசைகளோடும் இணைந்தும்/ தனியாகவும் தரக்கொடிய ஆயுர்வேத ,சித்த ,யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,இயற்க்கை உணவுகள்  ஆயுஷ் சிகிச்சை முறைகளை நாம் ஒருங்கிணைத்து சிகிச்சை செய்வதால் நாம் இதனை ஒருங்கிணைந்து சிகிச்சை என்று சொல்கிறோம் .ஒரு புற்று நோயாளிக்கு எது சிறந்ததோ /எது தேவையோ /எந்த சிகிச்சை எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் புற்று நோய்க்கு எதிராக போராட பயன் படுத்துவதால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்கிறோம்.

ஆயுர்வேதத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள் .

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்க ரசாயன சிகிச்சை முறைகள் ,பஞ்ச கர்ம சிகிச்சைகள் ,தோஷங்களை சம நிலை படுத்துகிற சிகிச்சைகள் தேவைக்கு தக்கவாறு கொடுக்கப்படுகிறது .மருந்துகளில் அம்ருத பல்லதாக லேஹ்யம் ,குக்குலு திக்தக நெய்,யோகேந்திர ரச,நவரத்ன ராஜ ம்ருகாங்க ரச போன்ற மருந்துகளையும்  ஷட்குண செந்தூரம் போன்ற மருந்துகளை தேவை கருதி BAMS –மருத்துவ ஆலோசனையோடு சரியாக பயன்படுத்துகிறோம்

சித்த மருத்துவத்தில் புற்று  நோய்க்கான சிகிச்சை முறைகள்

நெய் குறி என்னும் மூத்திர பரிட்சை, நாடி பரிட்சையில் கப வாத நாடியின் ஓட்டம் போன்றவை அறிந்து சித்தர்கள் அருளிய மருந்துகளான சேராங்கொட்டை நெய் , வான் மெழுகு ,கற்பூர மெழுகு ,ரச கந்தி மெழுகு ,மேலும் தாமிர பற்பங்கள் கலந்த மூளிகைசாறுகள் தக்க சுத்தி சிகிச்சைக்கு பின் தக்க பத்தியங்களோடும் முறையாக சரியாக MD ( Siddha )  படித்த மருத்துவர்கள் துணையோடு தரப்படுகிறது .

ஹோமியோபதியில் புற்று நோய்கான சிகிச்சை முறைகள்

உயிர் சக்தி என்னும் Vital Force ஐ அதிகப்படுத்திற மருந்துகளையும் ,ஜெர்மன் மருந்துகளையும் , Carcinosinum, Chelidonium, Scirrhinum, Vinca Minor போன்ற பல்வேறு மருந்துகளையும் ,பல முக்கிய நாசோட்களையும் சரியான வீர்யத்தில் கொடுக்க நல்ல உடலின் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .வாயிலே எல்லா மருத்துகளும் கரைவதால் விழுங்க இயலா நோயாளிக்கும்  மிக எளிமையாக கொடுக்க இயலும் .புற்று நோய் இருக்கும் இடம் ,தற்போதைய குறி குணங்கள் இவற்றை அனுசரித்து புற்று நோயாளியின் மன பயத்தை நீக்கி தெளிவு கிடைக்க ,பசி எடுத்து சாப்பிட,நன்கு உறங்கிட ஹோமியோ மருத்துகள் நல்ல பலன் தரும்.BHMS படித்த மருத்துவரின் உதவியோடு நாம் இந்த மருந்துகளை long acting medicine /short acting medicine என்று பிரித்து கொடுக்கிறோம் .

யுனானி மருத்துவத்தில்  புற்று நோய்கான சிகிச்சை முறைகள் .

ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுக்கும் சிகிச்சை முறைகள் ,மருந்துகளில் கஸ்தூரி சேர்ந்த மருந்துகள் ,காமிரே அப்ரேசன் மருந்துகள் ,சிறப்பு டானிக்குகள் உடல் வலு ஏற்ற  சிகிச்சை அளிக்கபடுகிறது .

அக்குபஞ்சர் மருத்துவத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள்
அக்குபஞ்சர் நாடி பார்த்து ,Five Element  தியரி படியும் ,Qi சக்தியை அதிகரிக்க ,Balancing அக்குபஞ்சர் ,அக்கு டச் சிகிச்சைகளும் தரப்படுகிறது 
.
யோகா ,மூச்சு பயிற்சிகளில் புற்று நோய்க்கான சிகிச்சை
உடல் வன்மை ,பிராண சக்தி அதிகரிக்க theraputical yoga சொல்லிகொடுக்கபடுகிறது

பஞ்ச கவ்யம் ,முள்ளு சீதா சாறுகள் கொண்டு புற்று நோய்க்கான சிகிச்சைகள்
கேன்சர் செல்களை அழிக்க வல்ல உணவு சிகிச்சைகளும் ,இயற்கை உணவு அட்டவணைகளும் ,உணவு உண்ணும் முறைகளும் கற்று தரப்படுகிறது

கேன்சர் வலிகளுக்கு சிறப்பு சிகிச்சை ..
எந்த ஊசி, மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலிகளை மிக எளிதான மருந்தில் குறைக்க உதவுகிற மூலிகைகளும் கொடுக்கபடுகிறது

ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளே சிறந்த சிகிச்சை
புற்று நோயாளிக்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத,சித்த ,ஹோமியோபதி யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,நேச்சுரோபதி  சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை/  தீர்வை  நிச்சயம் தர இயலும் .இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெற்றிட ,சிறந்த மருத்துவ ஆலோசனைக்கு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம், 2, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை ,சென்னை .முன் பதிவுக்கு 90 4333 6444.

குறிப்பு –சிறப்பு மருத்துவர் ,இரண்டாம் ஞாயிறும்( இந்த மாதம் 08/02/15),நான்காம் ஞாயிறும் (இந்த மாதம் 22/02/15) சிகிச்சை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்க உள்ளார். முன் பதிவுக்கு 90 4333 6444.

Post Comment

வியாழன், ஜனவரி 12, 2012

விந்து முந்துதலுக்கு மருந்தாகும் (மூலம் ,மார்பக கட்டியையும் சரி செய்யும்) -பல்லாதகவடீ-Bhallathaka vati

விந்து முந்துதலுக்கு மருந்தாகும் (மூலம் ,மார்பக கட்டியையும் சரி செய்யும்)
-பல்லாதகவடீ-Bhallathaka vati
 (பைஷஜ்ய ரத்னாவளி - அர்சோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1. சுத்தி செய்த சேராங்கொட்டை – ஷோதித பல்லாதக      50 கிராம்
2.  தோல் போக்கிய எள்ளு – தில பீஜ                        50           “
3. கடுக்காய் (கொட்டை நீக்கிப் பொடித்துச் சலித்தது) – ஹரீதகீ    50       “
4.            வெல்லம் – குட                                  50           “\

செய்முறை:     

 சேராங்கொட்டையை நன்கு அரைத்து விழுதாக்கி ஓடு நீகியபின் மற்றவைகளை சேர்த்து அரைத்து 200 மில்லி கிராம் மாத்திரைகளாக உருட்டவும். மாத்திரை உருட்டும்போது சேராங்கொட்டை ஓடு விரல்களில் தென்பட்டால் அவைகளை நீக்கி உருட்டவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை பாலுடன் இரு வேளைகள் நோயாளியின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஏற்ப, பொதுவாக சிறு அளவிலே தொடங்கி பின்னர் அளவைக் கூட்டிக் கொள்வதே நடைமுறை வழக்கு.

தீரும் நோய்கள்:  

பரங்கிப்புண் (பிரங்கஜ வ்ரண), குஷ்டம் (தோல் நோய்கள்), கீல்வாயு (சந்திவாத), தானே விந்து வெளிப்படல் (சுக்ரமேஹ).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வாத கப மூலத்திற்கு அதாவது இரத்தம் வராத காய்ந்த மூலத்தை சுருக்க உதவும் ..மூலம் இந்த மருந்தால் தீரும்
  2. சேராங்கொட்டை ஒரு காய கல்ப மூலிகை -நல்ல காமம் பெருக்கியாக உதவும் என்கிறது சாரங்கதர சம்ஹிதை
  3. ஆசார்யர் சுஸ்ர்ததர் -ஸ்தன்ய சோதன மூலிகை என்கிறார் ..தாய்ப்பாலை சுத்தம் செய்யும் எனக்கொள்ளலாம் ..அனால் எனது அனுபவத்தில் கர்ப்பிணிகளுக்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது ...ஆனால்  மார்பக கட்டிகள் ,மார்பக புற்று நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  4. சேராங்கொட்டை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் அது ஆபத்தாக முடியும்
  5. சீக்கிரம் விந்து நழுவுதல் என்னும் -விந்து முந்துதலுக்கு -இந்த மருந்தை தக்க துணை மருந்தோடு -படித்த ஆயர்வேத மருத்துவரின் துணையோடு சாப்பிட -நல்ல பலன் கிடைக்கும்
  6. வாத நீர் சம்பதமான வலிகளை போக்கும் ஆற்றல் உடையது
  7. எலும்பில் வாதம் தாக்கினாலும் (அஸ்தி வக ஸ்ரோதஸ் ) அதை பக்குவமாக விடுபட செய்ய முடியும்
  8. சற்றே உஷ்ண வீர்யம் என்பதால் தக்க கவனம் தேவை
  9. தோல் நோய்க்கும் ,ஆறாத புண்ணுக்கும் ,கேன்சருக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்

Post Comment