“உயிர் கொடுத்து எழுப்புங்கள் எனது செல்ல மகனை”
என்ற தாய்க்கு “இறப்பில்லா வீட்டில் ஒரு
படி அரிசி வாங்கி வா “ என்றார் புத்தர். எங்கு தேடியும் கிடைக்காத அந்த ஒரு படி
அரிசி . இப்போது புற்று நோய் இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு புற்று
நோய்க்கான காரணிகளோடும் ,புற்று நோயை உண்டாக்கும் உணவுகளோடும் ,சூழ்நிலைகளோடும்
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆரம்ப நிலை புற்று நோய்கள் முற்றிலும்
குணப்படுத்த முடியும் என்றாலும் கிட்டத்தட்ட எல்லா புற்று நோய்களும் முற்றிய
நிலையில் தான் கண்டு பிடிக்க முடிகிறது என்பது தான் யதார்த்த உண்மை. வாழ்வியல்
நோய்களான உயர் இரத்த அழுத்தம் ,கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் , இதய இரத்த குழாய்
அடைப்பு என்று நீளும் பட்டியலில் புற்று அதிக விழுக்காட்டை நோக்கி விரைகிறது
என்கிறது ஒரு புள்ளியல் அறிக்கை.
எது புற்று நோய் என்கிற அறிவியல் விளக்கம்
வழமைக்கு மாற்றான அதிகபடியான கட்டுப்பாடில்லாத வேகமாக வளர கூடிய கட்டிகளை புற்று
என்ற நிலை மாறி இப்போது வித்தியாசமாக எது இருந்தாலும் அது புற்றாக இருக்கும் என்ற
நிலைக்கு மருத்துவ அறிவியல் தள்ளபட்டிருப்பது பயத்தை ஏற்படுத்துகிறது . சாதாரண
கட்டிகளை புற்றாக மாறிவிட வாய்ப்பு அதிகம் என்று கருப்பைகளை குப்பைக்கு அனுப்பி
மருத்துவ வியாபாரம் பார்க்கிறது என்பது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
புற்று நோய்க்கு உதவும் உயிர் காக்கும்
மருந்துகள் விலையோ மிக மிக அதிகம் . உயிரை விட பணம் பெரியது இல்லை என்றாலும் கூட திரும்பி
வராது என்ற உத்தரவாதம் அளிக்க இயலா தொடர்கதை சிகிச்சைகள் தான் மிக பெரிய வருத்தம்
.முற்றிவிட்டது- குணப்படுத்த இயலாது என்று கூறி கொண்டே சிகிச்சைகள் தொடர்வது மிக
மிக வருத்தம் அளிக்க கூடியது.புற்று நோய் பாதித்த பகுதியை வெட்டி எறிந்த பின்னும்
,தொடர் கீமோ தெரபிக்கு பின்னும் தாங்க முடியா வலிகளுக்கு என்ன பதில் ?
ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்றால் என்ன ?
ஆங்கில மருந்துகளோடும் ,ஆங்கில மருத்துவ
சிகிசைகளோடும் இணைந்தும்/ தனியாகவும் தரக்கொடிய ஆயுர்வேத ,சித்த ,யுனானி
,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,இயற்க்கை உணவுகள்
ஆயுஷ் சிகிச்சை முறைகளை நாம் ஒருங்கிணைத்து சிகிச்சை செய்வதால் நாம் இதனை
ஒருங்கிணைந்து சிகிச்சை என்று சொல்கிறோம் .ஒரு புற்று நோயாளிக்கு எது சிறந்ததோ
/எது தேவையோ /எந்த சிகிச்சை எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் புற்று நோய்க்கு
எதிராக போராட பயன் படுத்துவதால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்கிறோம்.
ஆயுர்வேதத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை
முறைகள் .
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்க ரசாயன சிகிச்சை
முறைகள் ,பஞ்ச கர்ம சிகிச்சைகள் ,தோஷங்களை சம நிலை படுத்துகிற சிகிச்சைகள்
தேவைக்கு தக்கவாறு கொடுக்கப்படுகிறது .மருந்துகளில் அம்ருத பல்லதாக லேஹ்யம்
,குக்குலு திக்தக நெய்,யோகேந்திர ரச,நவரத்ன ராஜ ம்ருகாங்க ரச போன்ற
மருந்துகளையும் ஷட்குண செந்தூரம் போன்ற
மருந்துகளை தேவை கருதி BAMS –மருத்துவ ஆலோசனையோடு சரியாக பயன்படுத்துகிறோம்
சித்த மருத்துவத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள்
நெய் குறி என்னும் மூத்திர பரிட்சை, நாடி
பரிட்சையில் கப வாத நாடியின் ஓட்டம் போன்றவை அறிந்து சித்தர்கள் அருளிய
மருந்துகளான சேராங்கொட்டை நெய் , வான் மெழுகு ,கற்பூர மெழுகு ,ரச கந்தி மெழுகு
,மேலும் தாமிர பற்பங்கள் கலந்த மூளிகைசாறுகள் தக்க சுத்தி சிகிச்சைக்கு பின் தக்க
பத்தியங்களோடும் முறையாக சரியாக MD ( Siddha )
படித்த மருத்துவர்கள் துணையோடு தரப்படுகிறது .
ஹோமியோபதியில் புற்று நோய்கான சிகிச்சை முறைகள்
உயிர் சக்தி என்னும் Vital Force ஐ
அதிகப்படுத்திற மருந்துகளையும் ,ஜெர்மன் மருந்துகளையும் , Carcinosinum, Chelidonium, Scirrhinum, Vinca Minor போன்ற பல்வேறு
மருந்துகளையும் ,பல முக்கிய நாசோட்களையும் சரியான வீர்யத்தில் கொடுக்க நல்ல உடலின்
நல்ல முன்னேற்றம் ஏற்படும் .வாயிலே எல்லா மருத்துகளும் கரைவதால் விழுங்க இயலா
நோயாளிக்கும் மிக எளிமையாக கொடுக்க இயலும்
.புற்று நோய் இருக்கும் இடம் ,தற்போதைய குறி குணங்கள் இவற்றை அனுசரித்து புற்று
நோயாளியின் மன பயத்தை நீக்கி தெளிவு கிடைக்க ,பசி எடுத்து சாப்பிட,நன்கு உறங்கிட
ஹோமியோ மருத்துகள் நல்ல பலன் தரும்.BHMS படித்த மருத்துவரின் உதவியோடு நாம் இந்த
மருந்துகளை long acting medicine /short acting medicine என்று பிரித்து
கொடுக்கிறோம் .
யுனானி மருத்துவத்தில் புற்று நோய்கான சிகிச்சை முறைகள் .
ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுக்கும்
சிகிச்சை முறைகள் ,மருந்துகளில் கஸ்தூரி சேர்ந்த மருந்துகள் ,காமிரே அப்ரேசன் மருந்துகள் ,சிறப்பு டானிக்குகள் உடல் வலு ஏற்ற
சிகிச்சை அளிக்கபடுகிறது .
அக்குபஞ்சர் மருத்துவத்தில் புற்று நோய்க்கான
சிகிச்சை முறைகள்
அக்குபஞ்சர் நாடி பார்த்து ,Five Element தியரி படியும் ,Qi சக்தியை அதிகரிக்க ,Balancing
அக்குபஞ்சர் ,அக்கு டச் சிகிச்சைகளும் தரப்படுகிறது
.
யோகா ,மூச்சு பயிற்சிகளில் புற்று நோய்க்கான
சிகிச்சை
உடல் வன்மை ,பிராண சக்தி அதிகரிக்க theraputical
yoga சொல்லிகொடுக்கபடுகிறது
பஞ்ச கவ்யம் ,முள்ளு சீதா சாறுகள் கொண்டு புற்று
நோய்க்கான சிகிச்சைகள்
கேன்சர் செல்களை அழிக்க வல்ல உணவு சிகிச்சைகளும்
,இயற்கை உணவு அட்டவணைகளும் ,உணவு உண்ணும் முறைகளும் கற்று தரப்படுகிறது
கேன்சர் வலிகளுக்கு சிறப்பு சிகிச்சை ..
எந்த ஊசி, மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலிகளை
மிக எளிதான மருந்தில் குறைக்க உதவுகிற மூலிகைகளும் கொடுக்கபடுகிறது
ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளே சிறந்த சிகிச்சை
புற்று நோயாளிக்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத,சித்த
,ஹோமியோபதி யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,நேச்சுரோபதி சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை/ தீர்வை
நிச்சயம் தர இயலும் .இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெற்றிட
,சிறந்த மருத்துவ ஆலோசனைக்கு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம், 2,
துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை ,சென்னை .முன் பதிவுக்கு 90 4333 6444.
குறிப்பு –சிறப்பு மருத்துவர் ,இரண்டாம்
ஞாயிறும்( இந்த மாதம் 08/02/15),நான்காம் ஞாயிறும் (இந்த மாதம் 22/02/15) சிகிச்சை
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்க உள்ளார். முன்
பதிவுக்கு 90 4333 6444.
1 comments:
புற்று நோயாளிக்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத,சித்த ,ஹோமியோபதி யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,நேச்சுரோபதி சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை/ தீர்வை நிச்சயம் தர இயலும்
கருத்துரையிடுக