உப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 16, 2014

கிட்னி பெயிலியருக்கு பூனை மீசை காய்ந்த சமூலம் விற்பனைக்கு ..

நாளுக்கு நாள் கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகள் அதிமாகி கொண்டு வருகிறார்கள் ..
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் ,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தம் ,உணவில் ஏற்படுகிற விஷத்தன்மை ,குடி நோய் ,செயற்கை உணவுகள் ,துரித உணவுகள் என்று காரணங்கள் பல இருந்தாலும் சிறுநீரக செயல் இழப்பிற்கு இது வரை மக்கள் பார்க்கிற சிகிச்சைகள் டயாலிசிஸ் ஆரம்பித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்று நீள்கிறது ...

எத்தனை சிறுநீரக நோயாளிகளால் டயாலிசிஸ் செலவை ஏற்க முடிகிறது ..
எத்தனை  சிறுநீரக நோயாளிகளால் மாற்று சிறுநீரகத்தை ஏற்பாடு செய்ய முடிகிறது ,தானமாக பெற முடிகிறது ?

இதற்க்கு முன் உள்ள எனது கட்டுரைகிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்பிற்கு  நல்ல மருந்து -பூனை மீசை என்ற தலைப்பை படித்து ( இப்போது படிக்க இங்கே கிளிக் செய்யவும் பல நபர்கள் என்னை பூனை மீசை செடிக்காக தொடர்பு கொண்டனர் ..எப்படியாவது உதவி செய்யுங்கள் ..கொஞ்சமாவது தாருங்கள் ,எங்கே கிடைக்கும் ..என்னை சிந்திக்க வைத்தது ...

எனது மானசீக குரு வைத்ய  உஸ்மான அலி அவர்கள் என்னை போன்ற மருத்துவர்களுக்கு சொல்லி பல சிறுநீரக நோயாளிகளை சரி வர பராமரிக்க ,டயாலிசிஸ் அளவை குறைக்க ,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தேவைப்படாமல் இருக்க இந்த பயன்படும் ஆராய்ச்சியில் ஈடு படுங்கள் என்று எங்களை தூண்டியவர் அவர்க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் ,மேலும் சித்த மருத்துவர் திருநாராயணன் அவர்களுக்கும் ,என்னை எப்போதும் வழிகாட்டும் எனது சகோதரர் மருத்துவர் சித்தீக் அலி அவர்களுக்கும் நான் நன்றி உளமார  கூற கடமைப்பட்டுள்ளேன் .. 




பூனை மீசை செடியை முதலில் 
வீட்டில் வைத்து வளர்த்து பார்த்தேன் பின்னர் எனது மருத்துவ மனையில் தொட்டியில் வளர்த்து பார்த்தேன் ,மக்களுக்கு அடையாளம் காட்ட உதவியதே தவிர நோயாளிக்கு கொடுக்கும் அளவுக்கு கிடக்கவில்லை ..பின்னர் யோசித்தேன் என்ன செய்யலாம் அதிக அளவில் பயிரிட வேண்டுமே ?

என்னிடம் நிலம் இல்லை ,நண்பர் ஒருவரின் தென்னை தோப்புக்குள் வளர்க்க ஏற்பாடு செய்தேன் ..பூச்சி மருந்துகள் இடாத ஒரு இயற்கை விவசாயி அவர் ,ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட இயற்கை எரு உரமிட்டு பன்படுத்தினோம்.இந்த இடம் மலை அடிவாரம் ..ஊர் வடகரை ..பின்னர் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பூனை மீசை செடிகளை மருத்துவர் மைக்கேல் ஜெயராஜு அய்யா அவர்களிடம் பெற்றேன் ..

பூனை மீசை செடி வளர்ந்து வரும் போது நிறைய விவசாயம் கற்றோம் .. ஆடு மேயாது என்று ஆனந்தபட்டால் நிறைய மயில்கள் வந்து செடிகள் நாசம் செய்தது ,நிற்காத தொடர் மழை வந்து களை பறிக்க முடியாது கஷ்டப்படுத்தியது ,செடிகளின் இலைகளை பூச்சிகள் அரித்தது ..கடைசியில் தோற்று நின்றேன் ..இரண்டு வருட விவசாய அனுபவம் என்னை ஏன் இதை செய்ய ஆரம்பித்தேன் என்று தோணுகிற அளவுக்கு வருத்தத்தை கொடுத்தது ...தோல்விகள் பாடம் புகட்டியது ,தோல்விகள் எனக்கு பல வழிகளை கற்று கொடுத்தது ...இப்போது நீங்கள் பூனை மீசை காய்ந்த சமூலம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிற அளவுக்கு என்னை உருவாக்கிருக்கிறது ...


உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ,நபர்கள் ,நோயாளிகள் சிறுநீரக நோயால் பாதிக்கபட்டால் சொல்லுங்கள் எங்களால் இப்போது பூனை மீசை காய்ந்த சமூலம் எங்களால் தர இயலும் ..

குறைந்தது நூறு கிராம முதல் -நூறு கிலோ வரை இப்போது தர இயலும் ..

பூனை மீசை -காய்ந்த செடியை எப்படி பயன்படுத்துவது ?

இருபது கிராம் காய்ந்த பூனை மீசை சமூலம் + நானூறு மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஐம்பது மிலியாக வற்ற வைத்து காலை வெறும் வயிற்றில் அதே போல் மாலையும் இருபது கிராம் பூனை மீசை செடியில் தயாரித்த குடிநீர் ஐம்பது மிலி வெறும் வயிற்றில் பருகுதல் பலன் தரும் ..

பூனை மீசை குடிநீரை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் ?

இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும் ..

அடிக்கடி டயாலிசிஸ் செய்கிற தேவை இருக்காது ..
டயாலிசிஸ் செய்த பின் நோயாளிக்கு ஏற்படுகிற நிம்மதி நிலைக்கும் ..
சிறுநீரகத்திற்கு  சக்தி கிடைக்கும் ..

பூனை மீசை குடிநீரால் கிட்னி பெயிலியர் பூரண குணம் கிடைக்குமா ? முற்றிலும் குணம் கிடைக்குமா ?

முற்றிலும் குணமாகுமா என்பதை போலி மருத்துவர்கள் போல் வாக்கு தர இயலாது ..ஆனால் பல ஆராய்ச்சிகள் இரத்தத்தில் உள்ள அதிக யூரியா ,க்ரியாடினின் அளவை குறைக்க உதவுகிறது என்பது சொல்கிறது ,நிச்சயமாக உப்பு சத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் ..நல்ல மாற்று மருந்தாக இது செயல்படும் ..நோயாளியின் மற்ற உடல்  தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் ,பலசாலியாக இருந்தால் நோய் முழுவதும் குணம் ஆக வாய்ப்புள்ளது ..

ஆங்கில மருந்தை பயன்படுத்தும் போது இந்த மருந்தை பயன்படுத்தலாமா ?
எந்த ஆங்கில மருந்தோடும் சேர்த்து பயன்படுத்தலாம் 

டயாலிசிஸ் செய்கிற போதும் பயன்படுத்தலாமா ?
பயன்படுத்தலாம் .

எவ்வளவு காலம் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் ?
மிக குறைந்த நாட்களிலே இந்த மருந்தின் பலன் தெரியும் ..இரத்தத்தில் உள்ள உப்பு சத்தின் அளவை பொருத்து எவ்வளவு நாட்கள் தொடர வேண்டும் என்பது முடிவு செய்யலாம் 

இந்த மருந்துக்கு அதிகம் செலவாகுமா ?
மருந்தின் விலை அதிகம் இல்லை 

மருந்து எந்த அளவுகளில் கிடைக்கும் ?
ஒரு வேலை சாப்பிடுகிற அளவான இருபது கிராம் தனி தனி பாக்கெட்டுகளில் கிடைக்கும் 

மருந்தை எப்படி வாங்குவது ?
பேங்கில் பணம் டெபாசிட் செய்தால் கூரியரில் மருந்தை பெற்று கொள்ளலாம்.

பேங்க் விவரம் ?

NAME- AL-SHIFA AYUSH AGENCY
CURRENT ACCOUNT NO 267109000171971
BANK -CITY UNION BANK
BRANCK .KADYANALLUR
IFSC CODE   CIUB0000267

தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9688778640 


Post Comment

செவ்வாய், ஜனவரி 03, 2012

க்ஷாரம் -உப்பு செய்வது எப்படி ? KSHARA


க்ஷாரம் -உப்பு செய்வது எப்படி ?  Ksharam preperation
லவண க்ஷாரம்-உப்புக்கள்
                                                                                     
                மருந்துச் சரக்குகளின் சாம்பலைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதன் தெளிவைச் சுண்டக் காய்ச்சி பெரும்பாலும் க்ஷாரங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவைகள் காரச் சரக்குகள் (Alkaline Compounds) ஆகும்.

                முதலில் சரக்குகள் நன்கு காயவைக்கப்படுகின்றன. பின்னர் அவைகள் அதிகம் காற்று புகாத இடத்தில் கொளுத்தப்பட்டு நன்கு சாம்பலாக்கப்படுகின்றன. அந்தச் சாம்பலானது நான்கு பங்கு தண்ணீரில் கரைக்கப்பட்டு கலவை நன்கு தெளிவடைவதற்காக ஒரு நாள் முழுவதும் கலங்காமல் பாத்திரத்தில் வைக்கப்படுகிறது. நன்கு தெளிந்த பின்னர் கலவை கலங்காதவாறு அதன் தெளிவு மட்டும் நன்றாக இறுத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு அந்தத் தெளிவு கொதிக்க வைக்கப்பட்டுக் குறுக்கப்படுகிறது. க்ஷாரத்தின் வெண்மை நிறம் பெரிதும் தெளிவின் தரத்தையே பெரிதும் பொருத்தது. ஆதலால் கலவையின் வண்டல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

                நீர்மப் பகுதி முற்றிலுமாக வற்றி வெண்ணிறமான கட்டிகளும் பொடிகளுமாகத் தங்கிய க்ஷாரம் நன்கு ஆறிய பின்னர் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தப்படுகிறது. க்ஷாரங்கள் கசியும் தன்மையுள்ளவையாகையால் காற்றுப் புகாத கலங்களில் இவைகளைப் பத்திரப்படுத்த வேண்டும். இவைகள் உப்புச் சுவை உடையன.

                க்ஷாரங்கள், கசிந்து நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிக்கட்டிக் கொதிக்க வைத்துத் தண்ணீர் வற்றியவுடன் மேலே கூறிய முறைப்படியே  பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

                உட்கொள்ளுவதற்கு திரவமாகவும், வெளியே பூசுவதற்குச் சிறிது தடித்தும் இவற்றை தயாரிப்பது உண்டு. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் மேலே கூறிய முறையே (பொடி வடிவம்) பின்பற்றப்படுகிறது.

                மருந்துச் சரக்குகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி நெய், பசுவின் மூத்திரம் போன்ற திரவங்களுடன் கலந்தோ, அவை அல்லாமலோ மண்சட்டியிலிட்டுச் சட்டியின் வாயை அகலால் மூடி நன்கு சீலை மண் செய்து காய்ந்த பின்னர் சரக்குகள் கருகும்வரை நன்கு எரிக்கவும். ஆறிய பின்னர் அதைப் பொடித்துச் சலிக்கவும்.

                கருகாத பாகங்களைப் பிரித்தெடுத்து மறுபடியும் முறைப்படி எரித்தும் தயாரிக்கலாம்.


                சாம்பலைத் தண்ணீரில் கரைத்து க்ஷாரம் தயாரிக்கும் போது சாம்பல் கலவை ருசியற்றுப் போகும்வரை தண்ணீர் சேர்த்துக் கலக்கி கலக்கித் தெளிவை எடுத்து வற்ற வைக்கலாம்.

சில க்ஷாரங்களும் அவற்றின் உபயோகங்களும்:

                அபமார்க க்ஷாரம் எனப்படும் நாயுருவிச் சாரத்தினை 125 – 500 மி.கிராம் அளவிலே நீருடன் உட்கொள்ள குன்மம் (குல்ம), வயிற்றுவலி (உதர சூல), இரைப்பு (ஸ்வாஸ) ஆகியன நீங்கும்.

                கதலி க்ஷாரம் எனப்படும் வாழைச் சாரத்தினை 125 – 250 மி.கிராம் அளவிலே நீருடன் கொள்ள குன்மம் (குல்ம), மண்ணீரல் வீக்கம் (ப்லீஹோதர), நாட்பட்ட காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர), வீக்கம் (ஷோப) ஆகியன தீரும்.
                பலாச க்ஷாரம் எனப்படும் புரச சாரத்தினை அரை முதல் ஒரு கிராம் அளவிலே வெந்நீர் அல்லது பாலுடன் உட்கொள்ள பசியின்மை (அக்னி மாந்த்ய), குன்மம் (குல்ம), கல்லீரல் மண்ணீரல் வீக்கம் (ப்லீஹயக்ருத்வ்ருத்தி), எரிச்சலுடன் சிறு நீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர), கல்லடைப்பு (அஷ்மரீ) ஆகிய நோய்கள் தீரும்.

                மூலக க்ஷாரம் எனப்படும் முள்ளங்கிச் சாரத்தினை ஒரு கிராம் அளவில் நீருடன் உட்கொள்ள சிரமத்துடன் சிறுநீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர), கல்லடைப்பு (அஷ்மரீ) ஆகியன தீரும்.

                யவக்ஷாரம் எனப்படும் பார்லிச் செடியின் சாரத்தினை அரை முதல் ஒரு கிராம் வரை வெந்நீர் அல்லது நெய்யுடன் உட்கொள்ள வயிற்றுப்புசம் எனும் அகட்டு வாய்வு (ஆத்மான), மலச்சிக்கல் (ஆனாஹ), சூலை (சூல), பெருவயிறு (உதர), குன்மம் (குல்ம), சிரமத்துடன் சிறுநீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர), மண்ணீரல் கோளாறினால் ஏற்படும் செரியாமை தோஷம் எனும் ஆமதோஷம் (ப்லீஹாமய) ஆகியன தீரும்.

                வாஸாக்ஷாரம் எனும் ஆடாதோடைச் சாரத்தினை அரை கிராம் அளவிலே நீருடன் கொடுக்க குன்மம் (குல்ம), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ) ஆகிய நோய்கள் தீரும்.

                எருக்க இலையையும், சோற்றுப்பையும் சம அளவிலே எடுத்துக் கொண்டு நாரிகேள லவணம் செய்யப்படும் அதே செய்முறைக்குட்படுத்தி தயாரிக்கப்படும் அர்க்கலவணத்தை ஒரு கிராம் அளவில் நீர் அல்லது மோருடன் கொடுக்க குன்மம் (குல்ம), வயிற்றுக் கோளாறுகள் (உதர ரோக), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹோதர) ஆகியன தீரும். 

இவைகள் தவிர கோகிலாக்ஷார (நீர்முள்ளிச்சாரம்), ஸ்னுஹீக்ஷாரம் (சதுரக்கள்ளிசாரம்), கூஷ்மாண்டக்ஷாரம் (பூசணிச்சாரம்), அஸ்வத்தக்ஷாரம் (அரசமரசாரம்) ஆகியனவும் மருந்தாகவும், மருந்துச் சரக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.

            
                க்ஷாரங்கள் வெண்ணிறமுடையன. காற்று பட்டவுடன் இவைகள் பிசுபிசுப்படைவதால் இவற்றை காற்றுப் புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். க்ஷாரங்களும், லவணங்களும் நீண்டநாட்கள் வரை கெடாமல் இருக்கவல்லவை இவைகள் உப்புச்சுவை உடையன.

Post Comment