குன்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குன்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 23, 2013

அஜீரணத்தை போக்கும் அற்புத மருந்து -அஷ்ட தீபாக்கினிச் சூரணம்






அஷ்ட தீபாக்கினிச் சூரணம் -ASTA DEPPAGNI CHOORNAM  ( SIDDHA MEDICINE)
சிகிச்சா ரத்தின தீபம்


சேரும் பொருட்களும், அளவும் :
சுக்கு                           12.50 %                      மிளகு                         12.50 %
திப்பிலி                      12.50 %                      ஓமம்                           12.50 %
இந்துப்பு                     12.50 %                      சீரகம்                         12.50 %
கருஞ்சீரகம்               12.50 %                      பெருங்காயம்             12.50 %
அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 3 கிராம் வரை இரண்டு அல்லது மூன்று வேளைகள் நெய்யுடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
வயிற்றில் உண்டாகும் வாயுக்களை பரிகரிக்கும். குன்மரோகத்தில் முதற்குறியாகிய அஜீரணத்தைப் போக்கும்.
கிடைக்கும் அளவு :           100 கிராம்     500 கிராம்
குறிப்பு :
போஜன சமயத்தில் அன்னத்தில் முதலில் நெய் சேர்த்து உண்டு பின்னர் எளிதில் சீரணிக்கக்கூடிய பதார்த்தக் குழம்பினங்களுடன் சாப்பிட சீரணமாகும்.

தெரிந்து  கொள்ள வேண்டியவை ..
ஆயுர்வேதத்தில் கூறப்படுகிற அஷ்ட சூரணமும் இதுவும் ஒன்று ..
சமையலறையில் உள்ள பொருட்களில் செய்யபடுகிற இந்த மருந்து நமது முதலுதவிபெட்டியிலும் இருக்க வேண்டிய அற்புத மருந்து இது 

Post Comment

வெள்ளி, மார்ச் 22, 2013

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம்


அமுக்கராச் சூரணம் -AMUKRA CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
            “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
               குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
               தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
  தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
  விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
  நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
  நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
 செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
-       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360
சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                0.39 %                        சிறுநாகப்பூ                0.79 %                       
ஏலம்                           1.57 %                        மிளகு                         3.15 %
திப்பிலி                      6.30 %                        சுக்கு                           12.60 %
அமுக்கரா வேர்         25.20 %                      சர்க்கரை                    50.00 %

அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், இக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்.
கிடைக்கும் அளவு :         100 கிராம்     500 கிராம்
குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
சித்த மருத்தவத்தில் மேலே கூறப்பட்ட அமுக்ராசூர்ணமும் ,ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிற அஸ்வகந்தா  சூரணமும் ஒன்றில்லை ..
உடலை வலுபடுத்தும் ..வன்மையாக்கும் ..
ஆண்மை அதிகரிக்கும் என்று மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தவறு ..

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம் 

குறிப்பு -இனி சித்த மருந்து செய் முறைகளும் நடு நடுவே தொடரும் ..
இந்த பான்ட் பிடிக்காதவர்கள் ,திறக்க இயலாதவர்கள் தொடர்பு கொள்ளலாம் ..


Post Comment

திங்கள், ஜனவரி 14, 2013

வாத நோய்களில் -காலாக்னிருத்ர ரஸ _KALAGNIRUDRA RASA


வாத நோய்களில் -காலாக்னிருத்ர ரஸ  _KALAGNIRUDRA RASA                                                                                            
(ref-பஸவராஜீயம் – வாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக        10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            ஓமம் – அஜமோதா                                      10 கிராம்
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10           “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                     10           “
7.            கொடிவேலிவேர் – சித்ரக                             10           “
8.            சீரகம் – ஜீரக                                        10           “
9.            வாயுவிடங்கம் – விடங்க                             10           “
10.          சுக்கு – சுந்தீ                                         10           “
11.          மிளகு – மரீச்ச                                      10           “
12.          திப்பிலி – பிப்பலீ                                    10           “

இவைகளை பொடித்துச் சலித்த சூரணத்தையும், பொடித்த

13.          ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார                       10           “
14.          யவக்ஷாரம் – யவக்ஷார                           10           “
15.          வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) – டங்கண பஸ்ம 10           “
16.          இந்துப்பு – ஸைந்தவ லவண                      10           “
17.          கல்லுப்பு – ஸ்வர்ச்ச லவண                       10           “

ஆகியவற்றையும் எலுமிச்சம் பழச்சாற்றில் வைத்துத் தனித்தனியே அரைத்து நுண்ணிய விழுதாக்கிய

18.          சுத்தி செய்த நாபி – ஷோதித வத்ஸநாபி                 10           “
19.          சுத்தி செய்த எட்டிக்கொட்டை – ஷோதித விஷமுஷ்டி    180         “

இவைகளையும் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள்  2 முதல் 3 வேளைகளுக்கு சிறிது நெய்யும், மிளகுச் சூரணமும் சேர்த்துக் கொடுக்கவும்.

மிளகு, சீரகக் கஷாயத்துடனோ, சித்தரத்தைக் கஷாயத்துடனோ இதனைக் கொடுப்பது வழக்கம். 

தீரும் நோய்கள்: 

பசியின்மை (அக்னிமாந்த்ய), குன்மம் (குல்ம), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), ஜீரணக்கோளாறுகள், மற்றும் பொதுவான வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் பாரிசவாயு (பக்ஷாகாதவாத) போன்ற வாத நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. வாத நோய்களில் -பக்க வாதத்தில் -ஏகாங்க வீர ரச மாத்திரையுடன் பயன்படும் 

                

Post Comment

வியாழன், நவம்பர் 22, 2012

ஆண்மையை மட்டும் அதிகரிக்குமா அமுக்ரா சூர்ணம்


சித்த மருத்துவத்தில் கிடைக்கும் அஸ்வகந்தா சூர்ணம் (அமுக்ரா சூர்ணம்-Amukra choornam )ஆயுர்வேத மருத்துவத்தில் கிடைக்கும் அஸ்வகந்தா சூர்ணமும் Aswagndha choornam ஒன்றா ?

ஒரேடியாக ஆயுர்வேத கட்டுரைகள் எழுத படிக்கவும் போரடிக்கும் என்று சித்த மருத்துவம் பற்றி ..


ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் செய்யும் முறை -பயன்பாடுகள் பற்றி படிக்க இங்கே எனது பழைய கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ..


சித்த மருத்துவத்தில் அமுக்ரா சூர்ணம் செய்யும் முறை ..

Ref-சித்த வைத்திய திரட்டு

ஆதாரப் பாடல் :


    “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
       குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
       தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
       தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
       வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
      விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
      நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
     நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
     செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “

                               -    அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் - 360

சேரும் பொருட்களும் அளவும் :

இலவங்கம்             0.39 %      
சிறுநாகப்பூ             0.79 %        
ஏலம்                         1.57 %      
மிளகு                       3.15 %
திப்பிலி                    6.30 %      
சுக்கு                         12.60 %
அமுக்கரா வேர்    25.20 %     
 சர்க்கரை                 50.00 %

அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :

எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும். 

சுரத்திற்கு ( டெ ங்கி  போன்ற விஷ காய்ச்சல்கள்) பின் சிறந்த உடல் தேற்றியாக  பயன்படுத்தபடுகிறது 

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

  1. ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் -ஒரு ஒரு மூலபொருள் -சீமை அமுக்ரா  மட்டும் ..ஆனால் சித்த அமுக்ரா சூரணத்தில் எட்டு பொருட்கள் சேரும்
  2. ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் சற்று கசக்கும் -ஆனால் சித்த அமுக்ரா சூரணம்  நன்றாக இனிக்கும் -ஏனென்றால் அதில் சர்க்கரை (நாட்டு ) சேருவதால் ..
  3. இதே போல் தான் ஆயுர்வேத மருந்தும் -சித்த மருந்தும் ஒன்றல்ல ..பெயரளவில் ஒன்றாக இருந்தாலும் கூட ..ஆனால் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல ..
 


Post Comment

சனி, மார்ச் 03, 2012

எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati


எல்லா வகையான மூலத்திற்கும்-காங்காயன வடி-Kabkayana Vati
 (ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகள்:

1.            ஓமம் (குராஸானி) – பார்சீகயவனி            40 கிராம்
2.            சீரகம் – ஜீரக                               40           “
3.            கொத்தமல்லி விதை – தான்யக              40           “
4.            மிளகு – மரீச்ச                             40           “
5.            விஷ்ணுக் கரந்தை (உலர்ந்தது) – விஷ்ணுக்ரந்தி     40           “
6.            ஓமம் – அஜமோதா                         40           “
7.            கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                 40           “
8.            பெருங்காயம் (பொரித்தது) – ஹிங்கு               60           “
9.            ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார                  80           “
10.          யவக்ஷாரம் – யவக்ஷார                     80           “
11.          இந்துப்பு – ஸைந்தவலவண                  80           “
12.          கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண                  80           “
13.          கரியுப்பு – பிடாலவண                  80           “
14.          சோற்றுப்பு – ஸமுத்ரலவண                 80           “
15.          வளையலுப்பு – காச்சலவண                 80           “
16.          கருஞ்சிவதை – த்ரிவ்ருத்                    80           “
17.          நாகதந்திவேர் (நேர்வாளவேர்) – தந்தீமூல           160         “
18.          கிச்சிலிக் கிழங்கு – ஸட்டீ                   160         “
19.          புஷ்கரமூலம் – கோஷ்ட                     160         “
20.          வாயுவிடங்கம் – விடங்க                    160         “
21.          மாதுளை ஓடு – தாடிமத்வக்                 160         “
22.          கொடிவேலி வேர் – சித்ரக                   160         “
23.          சீமைக் கொடுக்காய்ப் புளி – அம்லவேதஸம்        160         “
24.          சுக்கு – சுந்தீ                                160         “
25.          கடுக்காய்த் தோல் – ஹரீதகீ பலத்வக்             160         “

செய்முறை:      

இவற்றை முறைப்படி நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு போதுமான அளவு துருஞ்சிச்சாறு கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்து பத்திரப்படுத்தவும்.

அளவு:           

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை நெய், பால், நீர் (அ) மோர் (மத்யம்) ஆகியவற்றுடன்.



தீரும் நோய்கள்:  

மூலம் (அர்ஷ), குன்மம் (குல்ம), இதய நோய் (ஹ்ருத் ரோக), பெருங்கழிச்சல் (கிரஹணீ), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), சூலை (சூல), இரத்த பித்தம் (ரக்த பித்த), குடற்புண்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆசன வாய் வெடிப்பிற்கு -சிர வில்வாதி கஷாயம் + திரிபலா குக்குலு + இந்த காங்கயன வடி = நூற்றுக்கு நூறு நல்ல பலன் தெரியும்
  2. உள் மூலம் - சிர வில்வாதி கஷாயம் அல்லது துராலபாதி கஷாயம் + அர்ஷகன வடி + பஹுசால குட லேஹியம் அல்லது சூரனாதி லேஹ்யியம் + இந்த மருந்து நல்ல பலன் தரும்
  3. இரத்த மூலம்  இந்த மாத்திரை சேராங்கொட்டை சேர்ந்த மருந்துகளுடன் முன்னர் சொன்ன மருந்துகள் நல்ல பலன் தெரியும்
  4. பவுந்திரத்திர்க்கு இந்த மருந்து குப்பை மேனி உப்பு + இந்த மாத்திரை நல்ல பலன் தெரியும்

Post Comment