திங்கள், டிசம்பர் 03, 2012

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்

தேங்காய் எண்ணெய்  தேய்த்தால் வழுக்கை  ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட் ..
ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய்  பயன்படுத்தினால் வழுக்கை  ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை 
தேங்காய்  எண்ணையே  கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய்   என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு  பதில் வேறு என்ன இருக்க முடியும் ?தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..
பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய்  விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய்  என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய  கழிவுடன் தேங்காய் எண்ணெய்  எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய்  என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப்  பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய்  என்னும் லிக்யுட்  பேரபின்  ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து  அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .. 

மினரல்  ஆயில் பற்றி படிக்க விக்கிலீக் தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் 


பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 

தேங்காய் எண்ணெய்  என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய்  இவைகள் ..
சாம்பிளுக்கு சில பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
தோல் வறண்டு போகும் 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் 
அரிப்பு வரும் ..
ஆராய்ச்சிகள்  குழந்தைகளுக்கு  பயன்படுத்த தடை விதிக்கிறது ..
சாம்பிளுக்க்கு  மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்க்கும் என்பதற்கான யூ டியூப் லிங்க் ..


தேங்காய் எண்ணெய்  வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய்  ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை  வாங்காதீர்கள் 

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய்  முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய்  எண்ணெய்  முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை 

அடுத்து கட்டுரை -மினரல் ஆயில் கலந்த தேங்காய் எண்ணெய்  உள்ளே சமையலுக்கு பயன்படுத்தினால் என்ன ஆகும் 

Post Comment

வியாழன், நவம்பர் 22, 2012

ஆண்மையை மட்டும் அதிகரிக்குமா அமுக்ரா சூர்ணம்


சித்த மருத்துவத்தில் கிடைக்கும் அஸ்வகந்தா சூர்ணம் (அமுக்ரா சூர்ணம்-Amukra choornam )ஆயுர்வேத மருத்துவத்தில் கிடைக்கும் அஸ்வகந்தா சூர்ணமும் Aswagndha choornam ஒன்றா ?

ஒரேடியாக ஆயுர்வேத கட்டுரைகள் எழுத படிக்கவும் போரடிக்கும் என்று சித்த மருத்துவம் பற்றி ..


ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் செய்யும் முறை -பயன்பாடுகள் பற்றி படிக்க இங்கே எனது பழைய கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ..


சித்த மருத்துவத்தில் அமுக்ரா சூர்ணம் செய்யும் முறை ..

Ref-சித்த வைத்திய திரட்டு

ஆதாரப் பாடல் :


    “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
       குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
       தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
       தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
       வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
      விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
      நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
     நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
     செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “

                               -    அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் - 360

சேரும் பொருட்களும் அளவும் :

இலவங்கம்             0.39 %      
சிறுநாகப்பூ             0.79 %        
ஏலம்                         1.57 %      
மிளகு                       3.15 %
திப்பிலி                    6.30 %      
சுக்கு                         12.60 %
அமுக்கரா வேர்    25.20 %     
 சர்க்கரை                 50.00 %

அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :

எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும். 

சுரத்திற்கு ( டெ ங்கி  போன்ற விஷ காய்ச்சல்கள்) பின் சிறந்த உடல் தேற்றியாக  பயன்படுத்தபடுகிறது 

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

 1. ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் -ஒரு ஒரு மூலபொருள் -சீமை அமுக்ரா  மட்டும் ..ஆனால் சித்த அமுக்ரா சூரணத்தில் எட்டு பொருட்கள் சேரும்
 2. ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் சற்று கசக்கும் -ஆனால் சித்த அமுக்ரா சூரணம்  நன்றாக இனிக்கும் -ஏனென்றால் அதில் சர்க்கரை (நாட்டு ) சேருவதால் ..
 3. இதே போல் தான் ஆயுர்வேத மருந்தும் -சித்த மருந்தும் ஒன்றல்ல ..பெயரளவில் ஒன்றாக இருந்தாலும் கூட ..ஆனால் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல ..
 


Post Comment

சனி, அக்டோபர் 27, 2012

நில வேம்பு குடிநீர் -கஷாய சூர்ணம் இலவசம்

 தமிழ் நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவை தடுக்க ..தமிழக அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கி கொண்டு  வருகிறது ..
அக்டோபர் இருபத்து ஆறு அன்று தமிழக செய்தி குறிப்பு இது 

(இந்திய  மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட நிலவேம்புக் குடிநீர், தமிழகத்திலுள்ள, வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் தெரிவித்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், தமிழகத்தில் பரவி வரும் "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் நோக்கில், சித்த மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட, நிலவேம்புக் குடிநீரை, சென்னை, அரும்பாக்கம், இந்திய அரசினர் இந்திய மருத்துவமனை புறநோயாளிகளுக்கு வழங்கும் விழா, நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர், இராமநாதன் சென்னை மாநகராட்சி மேயர், சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், தமிழக சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் பங்கேற்று, நிலவேம்புக் குடிநீரை அருந்தி, பிறகு நோயாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில், அமைச்சர் விஜய் பேசியதாவது: "டெங்கு' காய்ச்சல் உள்ளிட்ட எந்த வைரஸ் காய்ச்சலுக்கும் தனியான சிகிச்சை கிடையாது. அவை தானாக சரியாகுபவை. "டெங்கு' காய்ச்சலை, நிலவேம்புக் குடிநீர் ஓரளவு குறைக்கும் ஆற்றல் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நிலவேம்பு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. எனவே நிலவேம்புக் குடிநீரை அருந்துவதன் மூலம், "டெங்கு'வை தடுக்கலாம். இந்நீரை அருந்துவதால் பக்க விளைவுகள் கிடையாது, ஆங்கில மருந்துகளோடு, இதனை அருந்தலாம். நிலவேம்புக் குடிநீர் தமிழகத்திலுள்ள வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

நிலவேம்புக் குடிநீர் குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் இராமநாதன் மற்றும் இணை இயக்குனர் அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்ததாவது: நோய் கிருமியை எதிர்க்கும் குணம் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் நிலவேம்பு, காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி, நீர் பாரத்தை அகற்றக் கூடிய மிளகு, செரிமானப் பிரச்னையை சரி செய்யக் கூடிய சுக்கு, சிறுநீர் பிரச்னை சரி செய்யும் சந்தனம், வாய் கசப்பை போக்கி, நீர்ச்சத்தை அளிக்கும் வெட்டி வேர், உடல் வெப்பத்தை அகற்றி, குளிர்ச்சியை அளிக்கும் பற்படாகம், பேய்ப்புடல், விளாமிச்சை வேர், வயிற்று வலியை போக்கும் கோரைக் கிழங்கு ஆகிய, ஒன்பது மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான், நிலவேம்புக் குடிநீர். காய்ச்சல் உள்ளவர்களும், காய்ச்சல் இல்லாதவர்கள் என, அனைவரும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். இந்த குடிநீரை அருந்தினால், "டெங்கு' காய்ச்சல் நம்மை நெருங்காது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.)


டெங்கு காய்ச்சல் பற்றிய -இந்திய மருத்துவம் கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

நில வேம்பு குடிநீரை நாமே எப்படி தயாரிப்பது எப்படி என்ற கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  ..

நிறைய நண்பர்கள் என்னிடம் நில வேம்பு குடிநீர் எங்கே தனியாக கிடைக்கும் என்று கேட்கிறார்கள் ...
இப்போது அரசே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்திய மருத்துவ பிரிவிலும் இலவசமாக கிடைக்கும் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்திதான் ..

 

தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் இலவசமாக அனுப்பி தர -இலவச சேவை செய்ய உள்ளோம்...


என்றாலும் ...என்னால் முடிந்த உதவியாக தமிழ் நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ..வராமல் தடுக்கவும்
நில வேம்பு குடிநீர் ( ஐம்பது கிராம் முதல் -நூறு கிராம் வரை ) இலவசமாக அனுப்பித்தர நினைத்துள்ளோம் ..

உங்களுக்கு நில வேம்பு குடிநீர் சூர்ணம் இலவசமாக வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இவைகள்
 1. உங்களுக்கு நில வேம்பு குடிநீர் வேண்டும் என்இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இட வேண்டும்
 2. உங்கள் விலாசம்  இ மெயில் முகவரி ,தொலை பேசி எண் போன்ற விவரங்களை எனது இ மெயில் முகவரி curesure4u@gmail.com -அனுப்ப வேண்டும்
 3. நில வேம்பு குடிநீர் கஷாய சூர்ணம் இலவசமாக பெறலாம்
    .போஸ்டல் செலவு -கூரியர் செலவு மற்றும் மருந்தை அனுப்பும் செலவுகள்  மட்டும் ரூபாய் இருபத்தைந்து மட்டும் எங்களது விலாசத்திற்கு அனுப்பி தந்தால் ( மணி ஆர்டர் அல்லது -இ மணி பரிமாற்றம் மூலம் ) எங்களால் அனுப்பி தர இயலும் ..
 4. மணி ஆர்டர் அனுப்ப நீங்கள் எனது விலாசம் அல்- ஷிபா ஆயுர்வேத ஹோமியோ கிளினிக் -36/22-பீர் முஹம்மது தைக்கா தெரு கடையநல்லூர் ,தென்காசி வட்டம் ,திருநெல்வேலி மாவட்டம் -627 751-
 5. இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் வசதி படைத்தவர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம் ..
 6. மேலும் இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் ,வலை தல நண்பர்களுக்கும் பகிர்ந்தும் சேவை புரியுங்கள்

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் ..

சர்க்கரை இல்லாமல் இப்போது எந்த உணவுமே இல்லை ...சர்க்கரை சேராமல் பல மருந்துகளில் சிரப்புகள் செய்ய முடியாது ..மருந்துகள் கூட இல்லை என்ற நிலை உள்ளது ...
இந்த சர்க்கரை உடலுக்கு நல்லது தானா ?
வெள்ளை சர்க்கரை இந்த அளவுக்கு உடலுக்கு கேடு ?...

சரி இந்த சர்க்கரை எப்படி தயாரிக்கபடுகிறது ?...


கரும்பில் இருந்து பிழியப்பட்ட சாறுடன் எழு நிலைகளில் பல்வேறு வேதி பொருட்கள் ,அமிலங்கள் பயன்படுத்தப்பட்டு பின்னரே சர்க்கரை உருவாக்கபடுகிறது ...

அம்மோனியா  பை புளுயிடு பாக்டீரியா , பாஸ்போரிக் அமிலம் ,சுண்ணாம்பு நீர் , சல்பர் டை ஆக்சைட் ,பாலி எலக்ட்ரோலைட் ,காஸ்டிக் சோடா ,சலவை சோடா ,சோடியம் ஹைட்ரோ சல்பேட் ..இவ்வாறு எழு நிலைகளில் கரம்பு சாறுடன் வினி புரிகின்ற இந்த நச்சு பொருகள் யாவும் இறுதியில் கழிவாகி  போய் விடுமா ?...என்றால் இல்லவே இல்லை ...

சல்பர் டை ஆக்சைட் ஆர்சனிக் என்று பொருளும் சர்க்கரையுடன் தங்கி விடுகிறது ..அது மட்டுமல்ல வெள்ளை ஆக்க பயன்படுத்தபடும் ப்ளீசிங் வேளையில் சாக்பவுடர், கார்போனிக் வாயு, சல்பர் டையாக்சைட், ஸ்ட்ரோடையம், ஹைட்ராக் சைட், சல்ஃப்யூரிக் ஆசிட் போன்ற பல விதமான ரசாயன பொருட்களின் மீது சர்க்கரை திரவம் உரசிக் கொண்டு போகும் போதுதான், அது ‘பளிச்’சென வெண்மையாகிறது

பாஸ்போரிக் அமிலத்தின் பக்க விளைவு
பல்லின் எனாமல் அரித்தது விடும்'
எலும்பு சீக்கிரம் தேய்வு அடையும் ..
சீக்கிரம் முகத்தில் முதுமை வரும் ...தோல் சுருங்கும்
காஸ்டிக் சோடா பக்க விளைவு
துணி துவைக்கவும் பயன்படும் இந்த வேதிப்பொருள் ..கெமிக்கல் பர்ன் என்னும் எரிச்சலை கொடுக்கும் ...

 செரிமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வயிறில் புண்ணை அல்சரை ,ஜீரண சக்தியை கெடுக்கும் ..வாய்வை உண்டு செய்யும்
 மேலும் பொதுவாக வெள்ளையாக்க பயன்படும் வேதிபோருட்களும் ,சர்க்கரையில் பொதுவாக சேரும் வேதிபோருட்களும் ...


 செரிமான நொதி பொருட்களின் தன்மையை மாற்றி வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் .
இதனால் செரியாமை ஏற்படும் ..பசி மந்தபடும்

வயிறு பானை போல் வீங்கும்
உடல் தேவைக்கு அதிகமாக குண்டாகும்..
அடிக்கடி சர்க்கரை அளவில் மாறுபாடு உண்டாகி மயக்கம் உண்டாகும்..
வளர் சிதை மாற்றம் உண்டாகும் ..ஹார்மோன் கோளாறுகள் உண்டாகும் ..தைராய்ட் நோய் உண்டாகும் , குழந்தை இன்மைக்கும் காரணமாகும் ,சர்க்கரை நோய் வரும் ..சத்துக்களை உறிஞ்சும் குடல் உறிஞ்சுகள் செயல் இழக்கும் ..மொத்தத்தில் நடை பிணமாக வாழ நேரும்பல்வேறு  ஆராய்ச்சியாளர்கள் ..பல்வேறு ஆராய்ச்சியின் முடிவாக ..தெளிவாக எடுத்து கூறும் உண்மை இது ...இதை பற்றி ஆராய்ச்சிகள் பற்றி தேவை விவரங்கள் அறிய விரும்புவோர் ..என்னை தொடர்பு கொள்ளலாம் ..இ மெயிலில் தகவல்கள் அனுப்பி தரப்படும் ...

நாம் செய்யவேண்டியவை ....
 1. குழந்தைகளுக்கு சாக்லேட் என்ற பெயரில் இந்த விஷத்தையும் வாங்கி தர வேண்டாம் ..
 2. அரு சுவை உணவில் மற்ற சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...
 3. வெள்ளை சர்க்கரைக்கு பதில் ..பனை வெல்லம் ,கருப்பட்டி ,கரும்பு வெல்லம் ,பனங்கற்கண்டு பயன்படுத்துவது நல்லது ..
 4. தேநீரால் நாம் வெள்ளையனுக்கு அடிமையானோம் ...வெள்ளை சர்க்கரையால் இப்போது வெள்ளையன் மருத்துவத்துக்கு அடிமையாவோம் என்பதை மனதில் கொண்டு ...நோயில்லாமல் காப்பதே இந்திய மருத்துவத்தின் கடமை என்பதை சொல்லும் விதமாக ..சர்க்கரை தவிர் ...நோயின்றி வாழ் என்று சொல்வோம் ..
 5. நான் எனது வீட்டில் இப்போது சுத்தமான தேனை இனிப்புக்காக சேர்க்கிறோம் என்பதை தெரிவித்தவனாக ...

Post Comment

செவ்வாய், அக்டோபர் 02, 2012

சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-Dhanwantaram Gutika


வாயுக்களை ஒழுங்கு செய்யும் சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-
தான்வந்த்ர குடிகா-Dhanwantaram Gutika
(ref-ஸர்வரோக சிகித்ஸாரத்னம் சுவாஸ, ஹித்மாப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:1.            ஏலக்காய் (தோல் நீக்கிய அரிசி) ஏல               10 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                         10          
3.            கடுக்காய் (தோல் நீக்கியது) ஹரீதகீ பலத்வக்      10          
4.            ஜாதிக்காய் ஜாதீபல                               10          
5.            முள்ளுக்கத்திரி வேர் ப்ருஹத்தீ                    10          
6.            ஆசாளி விதை அதஸீபீஜ                         10          
7.            சீரகம் ஜீரக                                      10          
8.            வால் மிளகு கங்கோல                           10          
9.            நிலவேம்பு பூநிம்ப                               10          
10.          ருத்ராக்ஷம் ருத்ராக்ஷ                           10          
11.          தேவதாரு தேவதாரு                            10          

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம்

12.          கண்டி வெண்ணெய் (பொடித்த்து) கண்டிவெண்ண
இவற்றைக் கல்வத்திலிட்டு ஜீரகக் கஷாயம் விட்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில்

13.          பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் –     கற்பூர       10 கிராம்
14.          இளஞ்சூட்டில் உருக்கி வடிக்கட்டிய  
புனுகு கந்தமார்ஜர வீர்ய                                  10          


                இவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர வைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    

 கண்டி வெண்ணெய்யைப்பற்றி பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவுவதால் ருமிமஸ்தகி என்ற பூனைக்கண் குங்கிலியம் சேர்ப்பது சம்பிரதாயம்
                 
அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது ஜீரக கஷாயத்துடன் இரண்டு முதல் நான்கு வேளைகள். சிலர் பலாச பத்ரம், பூநிம்பம், ஜீரக கஷாயத்துடன் தருவர்.

தீரும் நோய்கள்:  
இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), வாந்தி (சர்தி), மார்வலி (ஹ்ருச் சூல), காய்ச்சல் (ஜ்வர), இருதய பலவீனம் (ஹ்ருத்தௌர்பல்ய), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக) வாயு உபத்திரவங்கள், இதயத்திற்கு வலுவூட்டக் கூடியது
.
                குழந்தைகளுக்கு உண்டாகும், மேற்கூறிய வியாதிகளில் இது விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வர பிரஸவம் எளிதாகும்.


தெரிந்து கொள்ள வேண்டியது ..
 1. எனது கிளினிக்கில் அதிகம் நான் உபயோகிக்கும் மருந்துகளில் மிக மிக முக்கியமானது இந்த மருந்து என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் ..
 2. ஆயுர்வேதத்தில் பொதுவாக தான்வந்தரம் என்று தன்வந்தரியின் பெயர் தாங்கும் அனைத்து மருந்துகளும் மிக மிக முக்கியமானவை ..
 3. உடம்பில் உள்ள தச வாயுக்களில் (ஆயுர்வேத சாஸ்திரங்கள் பஞ்ச வாயுக்கள் என்று சொல்கின்றன ) எந்த தடையை நீக்க வேண்டுமானாலும் ,ஒழுங்கு படுத்த வேண்டுமானாலும் இந்த மருந்தை மிக மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் ..
 4. இந்த மருந்து ஒரு அற்புத மருந்து ...
 5. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து ...
 6. ஹார்ட் அட்டாக்கின் போது பயன்படுத்தப்படும் ஆங்கில மருத்துவத்தில் நாக்குக்கு அடியில் வைக்கப்படும் சார்பிட்ரெட் ,நைட்ரோ கிளிசரின் -போன்ற மருந்துக்கு இணையாக இதயத்தில் ஏற்படும் வலியை நீக்கும் ..இதயத்தை வலுவாக்கும் ..இதயத்திற்குள் இருக்கும் வாயுவை ஒழுங்கு செய்யும் (இதய அடைப்பை நீக்க துணை மருந்தாக வேலை செய்யும் )
 7. சாதாரண வயிறு உப்புசம் ,செரியாமை ..வயிறு ஏற்றம் முதல் அனைத்து ஜீரண மண்டல நோயை நீக்கும் ..குணப்படுத்தும்.
 8. புனுகு சேர்க்க வில்லை என்றால் இந்த மருந்து வேலை செய்யவே செய்யாது ...பல கம்பெனிகள் புனுகு என்ற மருந்தை சேர்ப்பதில்லை ...புனுகில் போலியானதை சேர்த்தாலும் இந்த மருந்து வேலை செய்யாது ...
 9. சுவாசம் -இளைப்பு ..மூச்சு வாங்குதல் ..நடந்தால் மூச்சு வாங்குதல் போன்றவற்றில் நல்ல பலன் அளிக்கும் ..
 10. எழு மாதத்திற்கு பின் தொடந்து சாப்பிட சுக பிரசவம் ஆகும் ..
 11. இரண்டு மாத்திரைகளை -காலை மாலை ஆகாரத்திற்கு முன் வெந்நீரில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் ..
 12. தினமும் எல்லோரும் பயன்படுத்தலாம் ..

Post Comment

மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் - தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam


மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் -
தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam
(ref-வைத்யகஸப்தஸிந்து - ரஸகற்பூரவிதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸகற்பூரம் ஷோதித ரஸகற்பூர     10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக             10          

இவைகளைத் தனியே பொடித்துப் பிறகு இரண்டையும் சேர்த்தரைத்து அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த1.            சந்தனம் சந்தன          10 கிராம்
2.            இலவங்கம் லவங்க       10          

இவைகளைச் சேர்த்து அவற்றை 

1.            வேப்பம்பட்டைக் கஷாயம் நிம்பத்வக் கஷாய
2.            புங்கம்வேர்க் கஷாயம் கரஞ்ஜத்வக் கஷாய
3.            கீழாநெல்லிச்சாறு பூஆமலகீ ஸ்வரஸ
4.            முருக்கன் பட்டை கஷாயம் பலாசத்வக் கஷாய

இவற்றால் அரைத்து அத்துடன் மேலே கூறிய சாறுகளில் ஏதாவதொன்று விட்டுத் தனியே அரைத்தெடுத்து குங்குமப்பூ (குங்கும) 10 கிராம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றுபட நன்கு அறைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் கஸ்தூரி (கஸ்தூரி) 2.500 கிராம் சேர்த்தரைத்து 50 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை ஒன்று முதல் மூன்று வேளைகள் தேன், பால் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

 பரங்கிப் புண்ணின் (பிரங்கரோக உபதம்ஸ), பலவித நிலைகள், நாட்பட்ட பலவித தோல் நோய்கள் (புராணத்வக் ரோக), குதிகால் வாதம் (வாத ரக்த), கீல்வாயு (சந்திகாதவாத) போன்ற வாத நோய்கள் (வாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. பால் வினை நோய்களிலும் -இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
 2. நாள்பட்ட ஆறாத புண்களிலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
 3. மறைவிடங்களில் வரும் புண்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்Post Comment