சனி, அக்டோபர் 27, 2012

நில வேம்பு குடிநீர் -கஷாய சூர்ணம் இலவசம்

 தமிழ் நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவை தடுக்க ..தமிழக அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கி கொண்டு  வருகிறது ..
அக்டோபர் இருபத்து ஆறு அன்று தமிழக செய்தி குறிப்பு இது 

(இந்திய  மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட நிலவேம்புக் குடிநீர், தமிழகத்திலுள்ள, வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் தெரிவித்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், தமிழகத்தில் பரவி வரும் "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் நோக்கில், சித்த மருத்துவத்தில், "டெங்கு' காய்ச்சலை தடுக்கும் ஆற்றல் கொண்ட, நிலவேம்புக் குடிநீரை, சென்னை, அரும்பாக்கம், இந்திய அரசினர் இந்திய மருத்துவமனை புறநோயாளிகளுக்கு வழங்கும் விழா, நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர், இராமநாதன் சென்னை மாநகராட்சி மேயர், சைதை துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், தமிழக சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் விஜய் பங்கேற்று, நிலவேம்புக் குடிநீரை அருந்தி, பிறகு நோயாளிகளுக்கு வழங்கினார்.

விழாவில், அமைச்சர் விஜய் பேசியதாவது: "டெங்கு' காய்ச்சல் உள்ளிட்ட எந்த வைரஸ் காய்ச்சலுக்கும் தனியான சிகிச்சை கிடையாது. அவை தானாக சரியாகுபவை. "டெங்கு' காய்ச்சலை, நிலவேம்புக் குடிநீர் ஓரளவு குறைக்கும் ஆற்றல் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நிலவேம்பு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. எனவே நிலவேம்புக் குடிநீரை அருந்துவதன் மூலம், "டெங்கு'வை தடுக்கலாம். இந்நீரை அருந்துவதால் பக்க விளைவுகள் கிடையாது, ஆங்கில மருந்துகளோடு, இதனை அருந்தலாம். நிலவேம்புக் குடிநீர் தமிழகத்திலுள்ள வட்ட, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

நிலவேம்புக் குடிநீர் குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் இராமநாதன் மற்றும் இணை இயக்குனர் அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்ததாவது: நோய் கிருமியை எதிர்க்கும் குணம் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் நிலவேம்பு, காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி, நீர் பாரத்தை அகற்றக் கூடிய மிளகு, செரிமானப் பிரச்னையை சரி செய்யக் கூடிய சுக்கு, சிறுநீர் பிரச்னை சரி செய்யும் சந்தனம், வாய் கசப்பை போக்கி, நீர்ச்சத்தை அளிக்கும் வெட்டி வேர், உடல் வெப்பத்தை அகற்றி, குளிர்ச்சியை அளிக்கும் பற்படாகம், பேய்ப்புடல், விளாமிச்சை வேர், வயிற்று வலியை போக்கும் கோரைக் கிழங்கு ஆகிய, ஒன்பது மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான், நிலவேம்புக் குடிநீர். காய்ச்சல் உள்ளவர்களும், காய்ச்சல் இல்லாதவர்கள் என, அனைவரும் நிலவேம்புக் குடிநீரை அருந்தலாம். இந்த குடிநீரை அருந்தினால், "டெங்கு' காய்ச்சல் நம்மை நெருங்காது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.)


டெங்கு காய்ச்சல் பற்றிய -இந்திய மருத்துவம் கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

நில வேம்பு குடிநீரை நாமே எப்படி தயாரிப்பது எப்படி என்ற கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  ..

நிறைய நண்பர்கள் என்னிடம் நில வேம்பு குடிநீர் எங்கே தனியாக கிடைக்கும் என்று கேட்கிறார்கள் ...
இப்போது அரசே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்திய மருத்துவ பிரிவிலும் இலவசமாக கிடைக்கும் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்திதான் ..

 

தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் இலவசமாக அனுப்பி தர -இலவச சேவை செய்ய உள்ளோம்...


என்றாலும் ...என்னால் முடிந்த உதவியாக தமிழ் நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ..வராமல் தடுக்கவும்
நில வேம்பு குடிநீர் ( ஐம்பது கிராம் முதல் -நூறு கிராம் வரை ) இலவசமாக அனுப்பித்தர நினைத்துள்ளோம் ..

உங்களுக்கு நில வேம்பு குடிநீர் சூர்ணம் இலவசமாக வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இவைகள்
  1. உங்களுக்கு நில வேம்பு குடிநீர் வேண்டும் என்இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இட வேண்டும்
  2. உங்கள் விலாசம்  இ மெயில் முகவரி ,தொலை பேசி எண் போன்ற விவரங்களை எனது இ மெயில் முகவரி curesure4u@gmail.com -அனுப்ப வேண்டும்
  3. நில வேம்பு குடிநீர் கஷாய சூர்ணம் இலவசமாக பெறலாம்
      .போஸ்டல் செலவு -கூரியர் செலவு மற்றும் மருந்தை அனுப்பும் செலவுகள்  மட்டும் ரூபாய் இருபத்தைந்து மட்டும் எங்களது விலாசத்திற்கு அனுப்பி தந்தால் ( மணி ஆர்டர் அல்லது -இ மணி பரிமாற்றம் மூலம் ) எங்களால் அனுப்பி தர இயலும் ..
  4. மணி ஆர்டர் அனுப்ப நீங்கள் எனது விலாசம் அல்- ஷிபா ஆயுர்வேத ஹோமியோ கிளினிக் -36/22-பீர் முஹம்மது தைக்கா தெரு கடையநல்லூர் ,தென்காசி வட்டம் ,திருநெல்வேலி மாவட்டம் -627 751-
  5. இந்த சேவையில் பங்கேற்க விரும்பும் வசதி படைத்தவர்களும் என்னை தொடர்பு கொள்ளலாம் ..
  6. மேலும் இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் ,வலை தல நண்பர்களுக்கும் பகிர்ந்தும் சேவை புரியுங்கள்

Post Comment

3 comments:

கருத்துரையிடுக