லேஹியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லேஹியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 27, 2011

மூல நோய்க்கு பயன்படும் -சளியை போக்கும் -பாரங்கீ குடம்


மூல நோய்க்கு பயன்படும் -சளியை போக்கும் -பாரங்கீ குடம்
 (ref-பைஷஜ்யரத்னாவளி - அர்சோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கண்டு பாரங்கீ – பாரங்கீ          6 கிலோ
2.            தசமூலம் – தசமூல
                    (வகைக்கு 500 கிராம் வீதம்)       5              “
3.            கடுக்காய் – ஹரிதகீ         100  எண்ணிக்கைகள்


இவைகளை 60 லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து ¼ பங்கு ஆகக் குறுக்கி வடிகட்டிய கஷாயத்துடன் வெல்லம் (குட) 5 கிலோ சேர்த்து வெந்த கடுக்காய்களையும் கொட்டை நரம்புகள் நீக்கிப் பதத்தில்

1.            திரிகடு (வகைக்கு 50 கிராம் வீதம்)      150 கிராம்
2.            திரிஸுகந்தம்           “                                    150         “
3.            யவக்ஷாரம் – யவக்ஷார                25           “

இவைகளைப் பொடித்துச் சலித்துச் சேர்த்து ஆறியபின் தேன் (மது) 300 கிராம் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:   
25 கிராம்

தீரும் நோய்கள்:      


  இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), குரல் கம்முதல் (ஸ்வர பேத).

Post Comment

ஞாயிறு, ஜூன் 26, 2011

இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்


இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - லேஹ்யப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பழைய புளி – புராண சிஞ்சா பல       250 கிராம்
2.            தண்ணீர் – ஜல                       1.00 லிட்டர்

                இவைகளைக் கொதிக்கவைத்துச் சிறிது கொதித்த பின்னர் ஆறவைத்துப் புளியைக் கசக்கிக் கலவையை வடிகட்டி அதில் பழைய வெல்லம் (புராண குட) 500 கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்கவைத்துப் பாகம் வந்தவுடன் அதில்

1.            வில்வவேர் – பில்வமூல          25 கிராம்
2.            வாயுவிடங்கம் – விடாங்க        25           “
3.            வால்மிளகு – கங்கோல           25           “
4.            சுக்கு – சுந்தீ                       25           “
5.            மிளகு – மரீச்ச                   25           “
6.            திப்பிலி – பிப்பலீ                    25           “
7.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)-
           ஹரீதகீ பலத்வக்                25           “
8.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது)-
          பிபீதகீ பலத்வக்                    25           “
9.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்      25           “
10.          சீரகம் – ஜீரக                           25           “
11.          கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக            25           “
12.          இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       25           “
13.          இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி        25           “
14.          ஏலக்காய் – ஏலா                    25           “
15.          அதிமதுரம் – யஷ்டீ              25           “
16.          சித்தரத்தை – ராஸ்னா          25           “
17.          ஜாதிக்காய் – ஜாதீபல             25           “
18.          ஜாதிபத்திரி – ஜாதிபத்ரி         25           “

               
இவைகளைப் பொடித்து சலித்த சூரணத்தைக் கலந்து பின்னர் மண்டூரபற்பம் (மண்டூரபஸ்ம) 100 கிராம், அயபற்பம் (லோஹபஸ்ம)- 100 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

                                                வெல்லத்தின்  அளவு குறைவாகவும், மேல் சரக்குகள் அதிகமாகவும் இருப்பதால் உதிரியாக, இருக்கும் இந்த லேஹ்யத்தில் யுக்தியை அனுசரித்து 175 கிராம் தேன் (மது) சேர்க்கப்படுகிறது.

குறிப்பு:     

(1)          வெல்லத்தைத் தண்ணீரில் பாகு வைத்து அதில் கோது முதலியவை நீக்கிய புளியின் விழுதுக் சூர்ணம் இவைகளைச் சேர்த்து சிலர் இதைத் தயாரிக்கின்றனர்.
                                 
(2)          நெருப்பின் சம்பந்தமில்லாது புளி விழுதையும், வெல்லத்தையும் இடித்துச் சூரண வகைகளைச் சேர்த்தும் லேஹ்யம்போல் செய்துகொள்வதும் உண்டு.
                               
(3)          மண்டூரபற்பம் (மண்டூர பஸ்ம) மட்டும் 200 கிராம் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
                               

(4)          இதற்கு “லகு சிஞ்சாதிய லேஹ்ய” என்றொரு பெயருண்டு


அளவும் அனுபானமும்:      

2 முதல் 5 கிராம் வரை இரு வேளைகள் தேன், மோர் இவைகளுடன் உட்கொள்ளவும்.

தீரும் நோய்கள்:       

 ஜீரணக் குறைவு (அக்னி மாந்த்ய), பசியின்மை (அரோசக), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ), உடலெரிச்சல் (தாஹ), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), புளித்த ஏப்பம் மற்றும் பலவிதமான ஜீரணக் கோளாறுகள்.

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. எவ்வளவு மோசமாக இரத்த சிவப்பணுக்கள் குறைந்து இருந்தாலும் -இரத்தம் ஏற்றியது போல் சீக்கிரம் -இரத்தத்தில் ஹீமோக்ளோபினை பெருக செய்கிறது
  2. இரத்த சோகைக்கு மிக சிறந்த மருந்து
  3. கர்ப்பிணிகள் உபயோகிப்பது நல்லது இல்லை
  4. இந்த லேஹியத்தை சாப்பிட்ட உடன் பல் துலக்குவது நல்லது -இல்லை லேஹியம் சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பல் கரை படிந்தது போல் தோன்றலாம் ..ஆனால் நிச்சயமாக பல்லை பாதிக்காது
  5. மோரில் கலக்கி குடிக்க -சிரமம் இன்றி உள்ளே செல்லும்
  6. சவால் -இரத்தத்தில் ஹீமோக்ளோபின் பத்துக்கு குறைவாக உள்ளவர்கள் -இந்த லேஹியத்துடன் தக்க துணை மருந்துகளை சாப்பிட இரு வாரத்திலே இரத்தத்தில்  ஹீமோக்ளோபின் பத்தை தாண்டி -உடல் வலு பெரும்



Post Comment

வெள்ளி, ஜூன் 24, 2011

கிருமிகளை விரட்டும் -மாணிபத்ர லேஹ்யம்


கிருமிகளை அழித்து-மலமிளக்கி -தோல் நோய் -குணப்படுத்தும் -மாணிபத்ர லேஹ்யம்
 (ref-அஷ்டாங்க ஹ்ருதய - குஷ்டசிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
 வெல்லம் – புராணகுட            480 கிராம்
                 
இதைப் போதுமான அளவு தண்ணீரி விட்டுச் சிறிது சூடாக்கி வடிகட்டி கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன் அதில்,

1.            வாயுவிடங்கம் – விடங்க                    40 கிராம்
2.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்           40           “
3.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  40           “
4.            சிவதை வேர் – த்ரிவ்ருத்                    120         “

                இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைக் கலந்து பத்திரப்படுத்தவும்.

- மாறாக பாகு எடுக்காமல் பொடியைச் சேர்த்து இடித்து லேஹ்யம் தயாரிப்பதும் உண்டு.

அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான தண்ணீருடன் இரவு படுக்கும் போது.

தீரும் நோய்கள்: 


பெருவயிறு (மஹோதர (அ) உதர), மண்ணீரல் நோய்கள் (ப்லீஹரோக), வயிற்றுப்பூச்சிகள் (க்ருமி), நாட்பட்ட மலச்சிக்கல் (புராண மலபந்த), நாட்பட்ட மூலம் (புராண அர்ஸஸ் (அ) அர்ஷ), நெறி கட்டும்போதேற்படும் வலி (க்ரந்திருக்), வெண்குட்டம் (ஸ்வித்ர) மற்றும் நாட்பட்ட தோல் நோய்கள் (புராண குஷ்ட), இது நல்லதொரு மலமிளக்கி, பூச்சிக்கொல்லி, ரத்த சுத்திகரிப்பி.

குறிப்பு:     
இதற்கு “மாணிபத்ர யோக”, “மாணிபத்ரகுட” என்றும் பெயர்கள் உண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. வயிற்றில் உள்ள பூச்சிகள் எதுவானாலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  2. இந்த மருந்தை தொடர்ந்து எடுத்த பின் -பேதிக்கும் மருந்து சாப்பிடுவது நல்லது
  3. இரத்தம் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
  4. தோல் நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது மற்ற மருந்துகளுடன் இந்த மருந்தை சேர்த்து சாப்பிட -விரைவில் பலன் தெரியும்
  5. இந்த மருந்து மிக எளிதாக செய்ய கூடிய மருந்து
  6. அல்பெண்டாசொல்,மேபெண்டாசொல்  போன்ற ஆங்கில கிருமி வேலை செய்யாத இடத்திலும் இந்த மருந்தை கொடுத்து -குழந்தைகளின் வயிற்றில் உள்ள பெரிய பெரிய பூச்சிகளையும் வெளியே தள்ளலாம்
  7. அதிகம் சாப்பிட்டால் பேதியாகும் வாய்ப்புள்ளது .
  8. கை பக்குவமாக -ஒரு மூலிகை -எல்லா விதமான கிருமிகளை வெளியேற்ற பயன்படுத்தமுடியும் -அந்த மருந்தை பின்னூட்டத்தில் சரியாக யார் எழுதுவார்கள் என்று பார்போம் ( கிருமிக்கு மிக சிறந்த -எளிமையான -நல்ல மூலிகை பெயர் ஒன்றை சொல்லுங்கள் -பார்போம்? -பின் குறிப்பு வேப்பிலை ,பாகற்காய் இல்லை அது )

Post Comment