திங்கள், ஜூன் 27, 2011

மூல நோய்க்கு பயன்படும் -சளியை போக்கும் -பாரங்கீ குடம்


மூல நோய்க்கு பயன்படும் -சளியை போக்கும் -பாரங்கீ குடம்
 (ref-பைஷஜ்யரத்னாவளி - அர்சோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கண்டு பாரங்கீ பாரங்கீ          6 கிலோ
2.            தசமூலம் தசமூல
                    (வகைக்கு 500 கிராம் வீதம்)       5             
3.            கடுக்காய் ஹரிதகீ         100  எண்ணிக்கைகள்


இவைகளை 60 லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து ¼ பங்கு ஆகக் குறுக்கி வடிகட்டிய கஷாயத்துடன் வெல்லம் (குட) 5 கிலோ சேர்த்து வெந்த கடுக்காய்களையும் கொட்டை நரம்புகள் நீக்கிப் பதத்தில்

1.            திரிகடு (வகைக்கு 50 கிராம் வீதம்)      150 கிராம்
2.            திரிஸுகந்தம்                                               150        
3.            யவக்ஷாரம் யவக்ஷார                25          

இவைகளைப் பொடித்துச் சலித்துச் சேர்த்து ஆறியபின் தேன் (மது) 300 கிராம் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:   
25 கிராம்

தீரும் நோய்கள்:      


  இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), குரல் கம்முதல் (ஸ்வர பேத).

Post Comment

0 comments:

கருத்துரையிடுக