வியாழன், ஜூன் 23, 2011

பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )-செய்வது எப்படி ?


பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )
 (ref-வைத்யசிந்தாமணி - அருசிப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

வெல்லம் குட                         2.725 கிராம்
 
            
இதைப் பாகு செய்து வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகத்தில்

பசுவின் நெய் (க்ருத) 454 கிராம் சேர்த்து அத்துடன்

1.            தோல் நீக்கித் துண்டாக்கிய பின் பச்சையாக 2.520 கிலோ கிராம் அளவுக்கு எடை நின்றதும், பின்னர் வெய்யிலில் காயவைத்து நெய்யில் வறுக்கப்பட்டதுமான இஞ்சி

2.            மிளகு மரீச்ச                  - 150 கிராம்
3.            திப்பிலி பிப்பலீ                    - 106   
4.            மோடி பிப்பலிமூல              - 106   
5.            சுக்கு சுந்தீ                        - 66      
6.            ஜாதிக்காய் ஜாதீபல             - 66      
7.            ஏலக்காய் ஏலா                 - 66      
8.            கொடிவேலி வேர் சித்ரக         - 66      
9.            மூங்கிலுப்பு வம்ஸலோசன      - 66      

                இவைகளைப் பொடித்துச் சலித்துச் சூரணத்தைக் கலந்து தேன் (மது) 360 கிராம் சேர்த்து பத்திரப் படுத்தவும்.

அளவு:         
 2 முதல் 5 கிராம் வரை இரண்டு வேளைகள்.

தீரும் நோய்கள்:           

செரியாமை (அக்னி மாந்த்ய) (அ) அஜீர்ண), ருசியின்மை (அருசி), உணவில் விருப்பமின்மை (அரோசக); அதிகரித்த பித்தக் கோளாறுகள் (அமலபித்த), மகவீன்ற பெண் மணிகள் (ப்ரஸித்த ஸ்திரீகள்) தொடர்ந்து உண்ணும் லேகியமாக இதனை உபயோகிக்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிவை
  1. இது சித்த மருத்துவத்தில் தயாரிக்கபடும் இஞ்சி லேஹியத்திர்க்கு ஒப்பானதே தவிர -சித்த மருத்துவத்தில் செய்யப்படும் இஞ்சி லேஹியத்தின் பார்முலா வேறு (அதை சித்த மருத்துவ தயாரிப்பில் சொல்கிறேன் )
  2. தீபாவளி லேஹியம் என்று -இதற்க்கு வேறு பெயர் சூட்டி -மார்க்கெட்டில் கடை வைப்பவர்கள் ஏராளம் ..நீங்களும் செய்து விற்கலாம்
  3. இந்த மருந்தை தயாரிக்கும் கம்பெனிகள் குறைவு
  4. நாமே எளிதாக தயாரிக்கலாம்

Post Comment

1 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நாமே எளிதாக தயாரிக்கலாம் அருமையான பகிர்வுக்கு நன்றி.

கருத்துரையிடுக