ஞாயிறு, ஜூன் 12, 2011

குழந்தையின்மைக்கு மருந்தாகும் -சுகுமாரம் ரசாயனம் லேஹியம்


குழந்தையின்மைக்கு மருந்தாகும் - ஸுகுமார ரஸாயனம்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் வித்ரதி விருத்தி சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மூக்கிரட்டைவேர் புனர்னவ                 9         கிலோ
2.            தசமூலம் தசமூல                         900         கிராம்
3.            கீரைப்பாலை ஜீவந்தி                       900        
4.            ஆமணக்குவேர் எரண்டமூல                900        
5.            அமுக்கராக் கிழங்கு அஸ்வகந்தா           900        
6.            தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ        900        
7.            தர்பை தர்பா                                900        
8.            ஆற்று தர்பை வம்ஸமூல?                                         900        
9.            அமவேர் கான இக்க்ஷமூல                 900        
10.          குசவேர் குஸ                             900        
11.          கரும்புவேர் இக்க்ஷூமூல                  900        
12.          கொட்டைக்கரந்தை ஹப்புஸ               900        

                இவைகளை 10 ½ மடங்கு தண்ணீருடன் கொதிக்க வைத்துத் தண்ணீர் 1/8 பங்காக வற்றியவுடன் வடிகட்டிய கஷாயத்தில்

13.          வெல்லம் குட                          9         கிலோ
                சேர்த்துக் கரைத்து வடிகட்டி பால் (க்ஷுர) 6 கிலோ சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பாகு பக்குவமான நிலையில் அத்துடன்

14.          நெய் க்ருத                                6              கிலோ
15.          ஆமணக்கு எண்ணெய் எரண்டதைல        6         கிலோ

சேர்த்துப் பிறகு

16.          திப்பிலி பிப்பலீ                          150 கிராம்
17.          திப்பிலி மூலம் பிப்பலீமூல                150        
18.          இந்துப்பு ஸைந்தவ லவண                 150        
19.          அதிமதுரம் யஷ்டீ                         150        
20.          திராக்ஷை த்ராக்ஷா                        150        
21.          ஓமம் அஜமோதா                         150        
22.          சுக்கு சுந்தீ                                150        

                இவைகளின் சலித்த நுண்ணிய சூரணத்தையும் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும்  அனுபானமும்:   

  2 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 




 வயிற்றுவலி (உதரசூல), குன்மம் (குல்ம), பிறப்பிறுப்பு சார்ந்த நோய்கள் (ஜன்னேந்திரிய ரோக), நீடித்த மலச்சிக்கல் (வர்கோவிபந்த) (அ) புராணமலபந்த). கருவுற்றிருக்கும் போது தொடர்ந்து சாப்பிட சிக்கலற்ற பிரஸவத்திற்கு உதவுகிறது. பிறப்புறுப்பு மண்டலத்தைத் தூண்டவல்லது. நீர் பெருக்கி, மிதமான மலமிளக்கி.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. அடி வயிறு  சார்ந்த நோய்கள் ,அபான வாயுவின் தடை போன்றவற்றிக்கு இந்த மருந்து நல்ல மருந்து
  3. அடி வயிற்றில் ஏற்படும் கட்டிகள் -பொதுவாக பெண்களின் கருப்பையில் ஏற்படும் கட்டிகளுக்கு ,பைப்ராய்ட்  கட்டிகள் ,சதைக்கட்டிகள் ,நீர்க்கட்டிகள் ,பாலி சிஸ்டிக் ஓவரி போன்ற பிரச்சனைகளுக்கு -தனியாகவோ ,த்ர்யாயந்த்யாதி கஷாய்த்துடனோ சேர்த்து பருக விரைவில் கரைந்து -அறுவை சிகிச்சை வேண்டாம் என்று ஆங்கில மருத்துவர்களே சொல்வார்கள் என்பது உறுதி
  4. சூட்டு வலி ,சூதக வலி -மாத விடாய் வலிகளுக்கு -தக்க துணை மருந்துகளோடு தர -சூலம்  என்னும் வலிகள் மாயமாய் மறைந்து போகும்
  5. இந்த ஒரு மருந்தை வைத்தே -பல குழந்தையின்மை தம்பதிகளுக்கு ஏக இறைவனின் துணை கொண்டு குழந்தை பாக்கியம் பெற்று தர உதவியது ,உதவுகிறது ..
  6. இந்த சுகுமாரம் மருந்து -லேஹியமாக ,சுகுமாரம் கஷாயமாக  ,சுகுமாரம் கிருதம் என்னும் நெய் மருந்தாக ,சுகுமாரம் அரிஷ்டமாக -பல வடிவங்களில் ,பல நிலைகளில் ,பல விதமாக கிடைக்கிறது -

Post Comment

1 comments:

வானவன் யோகி சொன்னது…

அற்புதமான மருந்து...

பன்னிரண்டுகளுக்கு முன்பே சுகுமார கிருதம் சீரகக் கசாயத்தில் கொடுத்து அதன் குணத்தைப் பற்றி இப்போதும் பலரிடம் சொல்வதுண்டு...

அதன் மகத்துவம் பாவித்தவர் மட்டுமே அனுபவித்து வியந்து போவார் என்றால் மிகையில்லை....

இதை மிகச் சிறப்பாகப் பதிவிட்டமைக்குப் பாராட்டுக்கள்....

கருத்துரையிடுக