ஞாயிறு, ஜூன் 26, 2011

இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்


இரத்தத்தை அதிகமாக்கும் -லேஹியம் -சிஞ்சாதி லேஹ்யம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - லேஹ்யப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பழைய புளி புராண சிஞ்சா பல       250 கிராம்
2.            தண்ணீர் ஜல                       1.00 லிட்டர்

                இவைகளைக் கொதிக்கவைத்துச் சிறிது கொதித்த பின்னர் ஆறவைத்துப் புளியைக் கசக்கிக் கலவையை வடிகட்டி அதில் பழைய வெல்லம் (புராண குட) 500 கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்கவைத்துப் பாகம் வந்தவுடன் அதில்

1.            வில்வவேர் பில்வமூல          25 கிராம்
2.            வாயுவிடங்கம் விடாங்க        25          
3.            வால்மிளகு கங்கோல           25          
4.            சுக்கு சுந்தீ                       25          
5.            மிளகு மரீச்ச                   25          
6.            திப்பிலி பிப்பலீ                    25          
7.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)-
           ஹரீதகீ பலத்வக்                25          
8.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது)-
          பிபீதகீ பலத்வக்                    25          
9.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்      25          
10.          சீரகம் ஜீரக                           25          
11.          கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக            25          
12.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்       25          
13.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி        25          
14.          ஏலக்காய் ஏலா                    25          
15.          அதிமதுரம் யஷ்டீ              25          
16.          சித்தரத்தை ராஸ்னா          25          
17.          ஜாதிக்காய் ஜாதீபல             25          
18.          ஜாதிபத்திரி ஜாதிபத்ரி         25          

               
இவைகளைப் பொடித்து சலித்த சூரணத்தைக் கலந்து பின்னர் மண்டூரபற்பம் (மண்டூரபஸ்ம) 100 கிராம், அயபற்பம் (லோஹபஸ்ம)- 100 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

                                                வெல்லத்தின்  அளவு குறைவாகவும், மேல் சரக்குகள் அதிகமாகவும் இருப்பதால் உதிரியாக, இருக்கும் இந்த லேஹ்யத்தில் யுக்தியை அனுசரித்து 175 கிராம் தேன் (மது) சேர்க்கப்படுகிறது.

குறிப்பு:     

(1)          வெல்லத்தைத் தண்ணீரில் பாகு வைத்து அதில் கோது முதலியவை நீக்கிய புளியின் விழுதுக் சூர்ணம் இவைகளைச் சேர்த்து சிலர் இதைத் தயாரிக்கின்றனர்.
                                 
(2)          நெருப்பின் சம்பந்தமில்லாது புளி விழுதையும், வெல்லத்தையும் இடித்துச் சூரண வகைகளைச் சேர்த்தும் லேஹ்யம்போல் செய்துகொள்வதும் உண்டு.
                               
(3)          மண்டூரபற்பம் (மண்டூர பஸ்ம) மட்டும் 200 கிராம் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.
                               

(4)          இதற்கு லகு சிஞ்சாதிய லேஹ்யஎன்றொரு பெயருண்டு


அளவும் அனுபானமும்:      

2 முதல் 5 கிராம் வரை இரு வேளைகள் தேன், மோர் இவைகளுடன் உட்கொள்ளவும்.

தீரும் நோய்கள்:       

 ஜீரணக் குறைவு (அக்னி மாந்த்ய), பசியின்மை (அரோசக), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ), உடலெரிச்சல் (தாஹ), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), புளித்த ஏப்பம் மற்றும் பலவிதமான ஜீரணக் கோளாறுகள்.

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. எவ்வளவு மோசமாக இரத்த சிவப்பணுக்கள் குறைந்து இருந்தாலும் -இரத்தம் ஏற்றியது போல் சீக்கிரம் -இரத்தத்தில் ஹீமோக்ளோபினை பெருக செய்கிறது
  2. இரத்த சோகைக்கு மிக சிறந்த மருந்து
  3. கர்ப்பிணிகள் உபயோகிப்பது நல்லது இல்லை
  4. இந்த லேஹியத்தை சாப்பிட்ட உடன் பல் துலக்குவது நல்லது -இல்லை லேஹியம் சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பல் கரை படிந்தது போல் தோன்றலாம் ..ஆனால் நிச்சயமாக பல்லை பாதிக்காது
  5. மோரில் கலக்கி குடிக்க -சிரமம் இன்றி உள்ளே செல்லும்
  6. சவால் -இரத்தத்தில் ஹீமோக்ளோபின் பத்துக்கு குறைவாக உள்ளவர்கள் -இந்த லேஹியத்துடன் தக்க துணை மருந்துகளை சாப்பிட இரு வாரத்திலே இரத்தத்தில்  ஹீமோக்ளோபின் பத்தை தாண்டி -உடல் வலு பெரும்



Post Comment

0 comments:

கருத்துரையிடுக