வியாழன், ஜூன் 09, 2011

எல்லா விதமான மூலத்தையும் குணப்படுத்தும் -பாஹுசால குடம் லேஹியம்


எல்லா விதமான மூலத்தையும் குணப்படுத்தும் -பாஹுசால குடம் லேஹியம்
 (பைஷஜ்யரத்னாவளி - அர்சோரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:1.            சிவதை த்ரிவ்ருத்                    50 கிராம்
2.            வாலுளுவை ஜ்யோதிஸ்மதி                     50          
3.            நாகதந்திவேர் தந்திமூல                   50          
4.            கொடிவேலிவேர் சித்ரக                    50          
5.            நெருஞ்சில் கோக்ஷூர                     50          
6.            கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ                    50          
7.            ஆற்றுத்தும்மட்டி இந்த்ர வாருணி                50          
8.            கோரைக்கிழங்கு முஸ்தா                  50          
9.            சுக்கு சுந்தீ                     50          
10.          வாயுவிடங்கம் விடங்க                    50          
11.          கடுக்காய் ஹரீதகீ                   50          
12.          சுத்தி செய்த சேராங்கொட்டை ஷோதித பல்லாதக 400        
13.          விருத்தாரு முசலி?                                                       300        
14.          கருணைக்கிழங்கு சூர்ண                   800        
15.          தண்ணீர் ஜல                             25.400 “


                இவற்றைக் கொதிக்க வைத்து 6.350 லிட்டராக வற்ற வைத்து வடிகட்டிய கஷாயத்தில்

                19.050 கிலோ வெல்லத்தைக் (குட) கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன்,


1.            சிவதை த்ரிவ்ருத்                  100 கிராம்
2.            வாலுளுவை ஜ்யோதிஸ்மதீ       100    
3.            கருணைக்கிழங்கு சூரண          100    
4.            கொடிவேலி வேர் சித்ரக          100    
5.            ஏலக்காய் ஏலா                   300    
6.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்   100    
7.            மிளகு மரீச்ச                     300    
8.            யானைத்திப்பிலி கஜபிப்பலீ        300      
                இவைகளை பொடித்துச் சலித்த சூரணத்தைச் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:  

   5 முதல் 10  கிராம் வரை இரு வேளைகள்

தீரும் நோய்கள்: 


 மலச்சிக்கல் (மலபந்த), மூலம் (அர்ஷ), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), பெருவயிறு (மஹோதர), குன்மம் (குல்ம), வயிற்றுப் பூச்சிகள் (க்ருமி).

தெரிந்து கொள்ளவேண்டியவை -
  1. ரக்த மூலம் ,வெளி மூலம் ,ஆசனவாய் வெடிப்பு ,ஆசனவாய் எரிச்சல் போன்ற எல்லாவிதமான மூல பிரச்சனையையும்  இந்த மருந்து உறுதியாக சரிசெய்யும்
  2. இந்த மருந்துடன் நத்தை பற்பம் ,தேவை கருதி நாக பற்பம் மிக சிறிதளவு சேர்த்து கொடுத்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் ..
  3. கருணை கிழங்கு லேஹியத்தை விட இந்த மருந்து மிக வேகமாக வேலை செய்யும் ..
  4. சிர வில்வாதி கசாயம் என்ற மருந்துடன் சேர்த்து சாப்பிட மூலம் மருந்தே ஒடி விடும் ..
  5. ஆபரேசன் செய்து தான் தீர வேண்டும் என்ற மூல பிரச்சனைகள் எதுவானாலும் - சவால் விட்டு சரி செய்ய முடியும் ..
  6. போலி மருத்துவர்களை முக்கியமான ஊரெல்லாம் மஞ்சள் நோட்டிஸ் ஒட்டி திரியும் பிஸ்வாஸ்களை நம்பி யாரும் நம்பி வைத்தியம் செய்ய வேண்டாம்,மூலத்திற்கு வைத்தியம் என்ற பெயரில் புண்ணாகி போகவேண்டாம் -இந்த மருந்தை நாற்பது நாள் கோழி கறி ,பொரோட்டா ,பச்சை மிளகாய் தவிர்த்து சாப்பிட மூலம் -வேர் அறுந்து போகும் ..

Post Comment

2 comments:

கருத்துரையிடுக