மசக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மசக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 23, 2011

பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )-செய்வது எப்படி ?


பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )
 (ref-வைத்யசிந்தாமணி - அருசிப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

வெல்லம் – குட                         2.725 கிராம்
 
            
இதைப் பாகு செய்து வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகத்தில்

பசுவின் நெய் (க்ருத) 454 கிராம் சேர்த்து அத்துடன்

1.            தோல் நீக்கித் துண்டாக்கிய பின் பச்சையாக 2.520 கிலோ கிராம் அளவுக்கு எடை நின்றதும், பின்னர் வெய்யிலில் காயவைத்து நெய்யில் வறுக்கப்பட்டதுமான இஞ்சி

2.            மிளகு – மரீச்ச                  - 150 கிராம்
3.            திப்பிலி – பிப்பலீ                    - 106    “
4.            மோடி – பிப்பலிமூல              - 106    “
5.            சுக்கு – சுந்தீ                        - 66       “
6.            ஜாதிக்காய் – ஜாதீபல             - 66       “
7.            ஏலக்காய் – ஏலா                 - 66       “
8.            கொடிவேலி வேர் – சித்ரக         - 66       “
9.            மூங்கிலுப்பு – வம்ஸலோசன      - 66       “

                இவைகளைப் பொடித்துச் சலித்துச் சூரணத்தைக் கலந்து தேன் (மது) 360 கிராம் சேர்த்து பத்திரப் படுத்தவும்.

அளவு:         
 2 முதல் 5 கிராம் வரை இரண்டு வேளைகள்.

தீரும் நோய்கள்:           

செரியாமை (அக்னி மாந்த்ய) (அ) அஜீர்ண), ருசியின்மை (அருசி), உணவில் விருப்பமின்மை (அரோசக); அதிகரித்த பித்தக் கோளாறுகள் (அமலபித்த), மகவீன்ற பெண் மணிகள் (ப்ரஸித்த ஸ்திரீகள்) தொடர்ந்து உண்ணும் லேகியமாக இதனை உபயோகிக்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிவை
  1. இது சித்த மருத்துவத்தில் தயாரிக்கபடும் இஞ்சி லேஹியத்திர்க்கு ஒப்பானதே தவிர -சித்த மருத்துவத்தில் செய்யப்படும் இஞ்சி லேஹியத்தின் பார்முலா வேறு (அதை சித்த மருத்துவ தயாரிப்பில் சொல்கிறேன் )
  2. தீபாவளி லேஹியம் என்று -இதற்க்கு வேறு பெயர் சூட்டி -மார்க்கெட்டில் கடை வைப்பவர்கள் ஏராளம் ..நீங்களும் செய்து விற்கலாம்
  3. இந்த மருந்தை தயாரிக்கும் கம்பெனிகள் குறைவு
  4. நாமே எளிதாக தயாரிக்கலாம்

Post Comment

செவ்வாய், மே 24, 2011

மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்


மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்

(மாதீபல ரஸாயனம்)
                                                                                                    
தேவையான மருந்துகள்:

1.            துருஞ்சிப்பழச் சாறு – மாதுலங்க ரஸ   - 500 கிராம்
2.            எலுமிச்சம் பழச்சாறு – ஜம்பீர ரஸ - 500    “
3.            இஞ்சிச் சாறு – ஆர்த்ரக ரஸ      - 125    “
4.            இந்துப்பு – ஸைந்தவலவண       - 50       “
5.            சர்க்கரை – ஸர்க்கர               - 1250  “

செய்முறை:      

சாறு வகைகளை தனித்தனியே வடிகட்டிக் கலந்து சர்க்கரை சேர்த்துச்சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பானகபாகத்தில் இறக்கி ஆறிய பின்னர் பொடித்து சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்.


தீரும் நோய்கள்:  

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக).

தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. தயாரிப்பது மிக எளிது
  2. கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல் ,வாந்தி ,பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும் -பக்க விளைவுகள் இல்லாத மருந்து
  3. கர்ப்பிணிகள் எந்த விதமான ஆங்கில மருந்தை -போலிக் ஆசிட் மாத்திரைகள் ,கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதை பயம் இல்லாமல் சாப்பிடலாம்
  4. எனக்கு தெரிந்த பல ஆங்கில மகப்பேறு மருத்துவர்கள் -தனக்காகவும் ,தன்னுடைய மகள் ,பேத்திகளுக்காகவும் -எங்களிடம் வாங்கி உபயோகித்ததுண்டு ..(ஆனால் அவர்கள் அவர்களுடைய நோயாளிகளுக்கு ஆங்கில மருந்தை தான் வாந்தி நிற்க பயன் படுத்துகிறார்கள் )

Post Comment