ஓஜஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓஜஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 06, 2021

உங்கள் இதயத்தை பற்றி நீங்கள் அறியாதது | 2000 years of Ayurvedic point o...


உங்கள் இதயத்தை பற்றி நீங்கள் அறியாதது  

2000 years of Ayurvedic point of view of  your Heart

ஆயுர்வேதம் சொல்லும் இதயம் .. 

இந்த ரகசியம்  நீங்கள் தெரிந்து கொள்வது உங்கள் உயிர் காக்கும் 

இது வரை நீங்கள் யோசிக்காத இதயம் காக்கும் முறை - 


ஓஜஸ் என்றால் என்ன ?

நாடிகளின் வகை என்ன ?

ஸ்ரோதஸ் என்ற chennels of Body என்பது என்ன ?

இதய நோய்க்கு கொழுப்பை தவிர என்ன காரணம் 

ஆயுர்வேதம் சொல்லும் இதயம் காக்கும் மருந்துகள் என்ன ?


2000 years of Ayurvedic point of view of  your Heart 


Get online consultation with our Ayurveda Drs of Al Shifa Ayush hospitals 8108108205



#இதயம் #knowyourheart #ojus #idapingalnadi #hrudyam #doshas #sadakapittam #vyanavatha #pranavatha #tridosha #sadakapitta #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, மே 16, 2021

ஒரே மருந்து | உடல் நோய் எதிர்ப்பு சக்தி தரும் | எல்லா வைரஸ்க்கும் எதிரி...


தினமும் எந்த வித பயமின்றி பருக வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?

 

எளிதில் வீட்டில் செய்யகூடிய ஓர் வீட்டு மருந்தில் வைரஸ்களை விரட்ட முடியுமா ?

தொடர்ந்து சாப்பிட்டாலும் பக்க விளைவுகள் இல்லாத ஒரு வேளை  மட்டும் பருக கூடிய மருந்து பற்றி  தெரிந்து கொள்ள வேண்டுமா ?

 

டாக்டர் கிரிஜா ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைத்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?

 

நோய் வருமுன் தடுக்கும் அற்புத மருந்து

அமிர்தம் என்கிற மருந்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ?

 

How to improve immune system of patients  through Easy home remedy  in Tamil

 

This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine

 

Dr Mohamad Saleem MD Ayurveda  is working as  Chief Medical Consultant , In order to fight against the current covid pandemic, the awareness given by him is very useful to many peoples.

 

 

 

The channel has the motto to bring more videos which is certainly in people’s interest  #howtoimmune

#immuneincrease

#homeremdytoimproveimmunitylevel

#kashyamimproveimmunity  #covidcareathome #covid19 #covid_19 #ayurvedatreatmentforcovid19

#waytoincreaseimunity

#coranaawarenessvideo #coranatamil #covid19tamil #tamilhealth #healthtips #covidupdatetoday #currentsituationinindia #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth

#subscribeourchannelalshifayush

 

Dr.A,Mohamad Saleem.,BAMS.,MD(Ayu) Snr.Gen.Med.Asst. Med officer

Al Shifa ayush hospital,

11 main road, Kadayanallur, Tenaksi District

Cell :9042225333 and

having consulation at Al shifa hospitals at Chennai,Tirunelveli, Rajaplayam, Theni

 

Chennai – Al shifa Ayush hospital cell  9043336000

Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999

Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888

Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577

 


Post Comment

சனி, மே 16, 2020

உடலின் மொழி அறிந்தால்...*


உடலின் மொழி அறிந்தால்...*



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்




நோய் என்று வந்துவிட்டால் நம் மனம் தேடுவது உடனே நோயை சரிசெய்திடும் மருந்தை தான்..



அத்தகைய மருந்திற்கு அந்நோயை சரிசெய்ய என்னென்ன தகுதிகள் உள்ளது.. என்னென்ன பாதகங்களை அது ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பதுமில்லை, நமக்கு பொறுமையும் இல்லை...



உடல் நிலை அதன் நலனை எந்த அளவு நோயின் பிடியில் கொடுத்துள்ளது என்பதை எத்தனை பேரால் அறிந்துகொள்ள முடியும்... உடலில் நோயுற்றபோது அதன் மொழியில் சொல்வது நீர் வேண்டாம், உணவு வேண்டாம் கண்களை மூடி படுத்துக்கொள்ள என்பதுமட்டுமே..


ஆனால் உடலில் மொழி புரியாமல் நோயை சரிசெய்கிறோம் என்று மாத்திரைகளை விழுங்குவது, ஊசி போட்டுக்கொள்வது, ட்ரிப்ஸ் ஏற்றுவது, டானிக் எடுத்துக்கொள்வது போன்றவற்றை செய்து விடுகின்றோம்...



சற்றே சிந்தியுங்கள்... சோர்வுண்ட குழந்தையோ அல்லது துவண்டு இருக்கும் பறவையோ, வளர்க்கும் விலங்கோ குதூகலப்படுத்த என்ன செய்வோம்?... அதற்கு பிடித்தவற்றை பிடித்தவாறு அவர்களிடத்தில் செய்து உற்சாக படுத்துவோமா...? இல்லை உனக்கு பிடித்ததைதானே தருகிறேன் இந்தா பெற்றுக்கொள் என்று எரிந்துவிழுவோமா...?



முதலாவதை அனைவரும் ஆமோதிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்... காரணம்... அதிலிருந்துதான் முழுமையான, மகிழ்ச்சியான தீர்வு கிடைக்கும்...



அப்படியானால் உங்கள் உடலால் இயலாத நிலையில்... அதாவது செரிக்கும், உரிந்துகொள்ளும் சக்தி இல்லாத உடலை அதனை மேலும் வருத்தும் விதமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரிதானா?



மாத்திரைகளை செரித்து நலம்பெறு என்றும், ஊசிகளை போட்டுகொண்டு மீண்டேறு என்பதை மனம் நன்மைக்குத்தானே என்று ஏற்றுக்கொண்டாலும் உங்களின் உடல் இயல்பான நிலைக்கு திரும்பாது... அதனால் தான் காய்ச்சலோ, சளியோ, தலைவலியோ, வயிறுவலியோ நோய் தீர்ந்த அடுத்த இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு சோர்வாக, அசௌகரியமாக உணர்வு ஏற்படுகிறது.. பக்கவிளைவுகளாக அல்சர் போன்றவைகளும் உண்டாகிறது...



இயல்பான நிலைக்கு திருப்ப தேவை உடல் இழந்த செரிமான சக்தி, உரிந்துகொள்ளும் சக்தியை தாமாக பெறுவதே... மருந்து மனதிற்கு எளிதாக இருப்பதை விட உடல் எளிதாய் செரித்துக்கொள்ள ஏதுவான வகையில் இருத்தல் வேண்டும்..



*மருந்துகளில் கசாயத்திற்கு மட்டுமே அந்த தகுதி உள்ளது...*



உலகில் உள்ள எந்த நோய்க்கும் கஷாயம் கொடுக்கலாம்...ஒரு பகுதி மூலிகையுடன் எட்டு பகுதி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு நான்கில் ஒரு பங்காக வற்றிய பின் வடிகட்டி கிடைப்பது கஷாயம்..



கஷாயத்தை தனி சிறப்பு என்னவென்றால் ஒரு பொருள் உமிழ்நீரில் கலந்து, உணவுக்குழாய் வழி இரைப்பையை அடைந்து, பித்தம் மற்றும் அமிலத்துடன் கலந்து செரிக்க எடுத்துக்கொள்ளும் ஒன்னரை மணி நேர செயலை கோப்பையில் இருக்கும் கஷாயம் தம்மிடையே ரெடியாக வைத்திருப்பது தான்...சிறிது நேரம் 100° C கொதிநிலையில் இந்த தகுதியை கஷாயம் பெற்றுவிடுகிறது.



பொதுவாக எந்த நோய்க்கு நாம் கஷாயம் எடுத்துக்கொண்டாலும் நோய் குணமாவதுடன் இலவச இணைப்பாக நாம் பெறுவது நோயெதிர்ப்பு ஆற்றல், போஷாக்கு, கழிவு வெளியேற்றம், பசி தூண்டுவிப்பு, செரிமானம் மேலும் கசாயத்தில் இருக்கும் antioxidant property வயதுமுதிர்வதை தடுப்பதாக பல ஆராய்ச்சிகளும் உள்ளது.



மேலும் நாமே வீட்டில் தயார் செய்துகொள்ளும் கசாயத்தில் contamination கிருமி ஒட்டிருக்கும் என்ற பயம் இருக்காது, மற்ற மருந்துகளில் சேர்க்கப்படும் preservatives பதப்படுத்தும் மருந்து சேர்க்கப்பட்டிருக்காது, காலாவதி பயம் இருக்காது, பக்க விளைவுகள் இருக்காது, கைதேர்ந்த மருத்துவரை போன்றொரு திருப்தி கிடைக்கும்.



கஷாயம் கசக்கும் என்ற மாயையை குழந்தைகள் மனதில் பதியவைக்காமல் கஷாயத்திற்கு கட்டுப்படாத நோயில்லை என்று கூறி வளர்த்தால் எதிர்காலத்தில் கொரோனா போன்று எந்த நோயும் அவர்களை அணுகமுடியாது..



சந்தேகங்களுக்கு அணுகவும்...


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000.

ஆயுர்வேதமும் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

இனி ஒளிந்துகொள்ள வேண்டாம்...


இனி ஒளிந்துகொள்ள வேண்டாம்...



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்



உடல் ஆரோக்கியம் அல்லது போஷாக்கிற்காக குழந்தை, பெண்கள், இளைஞர், வயோதிகர் என அனைவரும் ஒரு ஊட்டச்சத்து பானம் எடுத்துக்கொள்கிறோம்.



வளரும் குழந்தைகளுக்கு Complan, junior horlicks, பெண்கள், கர்பிணிகளுக்கு womens horlicks, இளைஞர்களுக்கு boost, maylo இன்னும் பலவகையான போஷாக்கிற்கான பானம், அதற்கான விளம்பரங்கள் மனதை மயக்கும் பிளேவர்களில் வந்தவண்ணமே உள்ளது. பழகிவிட்டால் இதுவும் ஒருவகை போதை அடிமையே...



அப்படி எடுத்துக்கொள்ளும் குழந்தைகளும், பெண்களும், இளம்வயதினரும், முதியோரும் எந்த நோயுமின்றி ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களா என்றால்...கண்டிப்பாக இல்லை.



குழந்தைகள்  நோயெதிர்ப்பு சக்தியின்றி, பெண்கள் எழுப்புகள் பலமின்றி, ஆண்கள் நரம்பு பலமின்றி, முதியோர்கள் தங்களது சுயவேலைகளை தானே செய்துகொள்ளும் உடல் ஆற்றல் கூட இல்லாம உள்ளனர்.


குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் போஷாக்கிற்காக, ஊட்டச்சத்திற்காக, நோயெதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளவேண்டியது அஸ்வகந்தா மட்டுமே...


அஸ்வகந்தா என்ற பெயர்வர காரணம் சுறுசுறுப்பு, பலம் இரண்டிற்கும் பெயர்பெற்றது குதிரை.. அஸ்வ என்றால் குதிரை... இம்மருந்தை உண்டால் குதிரைக்கு இணையான பலம் பெறலாம் என்றொரு குறிப்பு உள்ளது.


ஆராய்ட்சி ரீதியாக பார்ப்போம்...


அஸ்வகந்தா பற்றிய ஆராய்ட்சி கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அதன் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களே ஆச்சரியப்படும் வகையில் வந்துள்ளது.


Isopelletierine, Anaterine, Cuseohygrine, Anahygrine, withanolides, withaferins, Saponils ஆகிய வேதிப்பொருட்கள் அஸ்வகந்தாவில் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக sitoindosides, Acylserylglucosides (மனஅழுத்தத்தை குறைக்கும் வேதிபொருள்கள்) இருப்பதையும் கொண்டு முதற்கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டது.



ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா ரசாயனம் மருத்துவத்தில் முதலிடம் பிடித்துள்ளதின் பேரில் அதன் மீதான ஆராய்ச்சிகள் முதலில் வயதுமுதிர்வை தடுக்க, நரம்பு தளர்ச்சி சரிசெய்ய, மனஅழுத்தத்திற்கு என மூன்று பிரிவுகளில் முறையாக மக்களிடம் கொடுத்து கண்காணிக்கபட்டது...


விளைவாக கிடைத்த ஆபாரமான சாதகமுடிவுகள் மேலும் ஆராய்ச்சியாளர்களை வியப்பூட்ட இன்னும் ஆர்வமாக பல கோணங்களில் மக்களுக்கு கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி வலுவுற்றது... இந்த முறை குழந்தைகளுக்கான மூளை திறன், பெண்களுக்கான கருப்பை கோளாறுகள், புற்றுநோய், கிருமிதொற்று, விஷமுறிவு என பல பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சிறிதும் தோல்வியின்றி நூறு சதவீத வெற்றியில் முடிவுற்றது.



வியக்கத்தக்க இம்மருந்தை சரியாக தேர்வுசெய்து ஆயுர்வேதத்தில் பயன்படுத்திருக்கும் ஞானத்தை கட்டுரை வடிவில் வெளியீடு செய்தனர்.


மேலும் ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அஸ்வகந்தா எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு இருந்த வயிற்று புண், சருமநோய்கள், மலசிக்கல், தூக்கமின்மை, தைராய்டு பாதிப்புகள் போன்ற நாள்பட்ட நோய்களோடு, காய்ச்சல், வீக்கம், வயிற்றுப்போக்கு, முகப்பரு, குடல்புழு போன்றவைகளும் தாமாக குணமடைந்தன.


பெரும்பாலும் முதுவயதினரை தாக்கும் எலும்பு, மூட்டு தேய்வுகளும், parkinson's, Huntington's, Alzeimer's ( மூளை செல்கள், நரம்புகள் சிதைவால் உண்டாகும் ஞாபக மறதி ) எனப்படும் நோய்களுக்கும் சிறந்த தீர்வாக அமைந்தது. சர்க்கரை வியாதி, இரத்தஅழுத்தமும் கட்டுக்குள் வரச்செய்தன.
சிறுநீரக தொற்று உட்பட கொரோனா போன்ற நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இம்மருந்திற்கு உண்டு.


அஸ்வகந்தா முதியோர்களுக்கு ஏற்ற மாத்திரை வடிவில், சூர்ண வடிவில், குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினருக்கு ஏற்ற டானிக் வடிவில், லேகியம் வடிவில் என பயன்படுத்த எளிய வகைகளில் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கிறது.

சுவைக்காக கார்பொரேட்களின் தேவையற்றவைகளை உண்பதை தவிர்த்து ஆரோக்கியம் தரும் பக்கவிளைவற்ற இந்திய மூலிகைகளை மருந்தாகவோ, உணவாகவோ உண்பதினால் கொரோனாவிற்கு மட்டுமல்ல எந்த நோய்க்கும் பயந்து ஒளியாமல் வாழலாம்.


குறிப்பு ..தலைப்பின் சாராம்சம் வேறு...
நிச்சயமாக அரசு சொல்கிற சமூக இடைவேளையை பின்பற்றிட நிச்சயம் வேண்டும்..கொரோனாவுக்கு அரசு சொல்கிற எந்த விதிமுறையையும் மீற சொல்லவில்லை..

பொதுநலன் கருதி வெளியிடுவோர்...

*AL SHIFA AYUSH HOSPITAL*

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 904727 7577
சென்னை 9043336000.

ஆயுர்வேத அகிலம் அறிய பகிரலாமே

Post Comment