திங்கள், பிப்ரவரி 29, 2016

ஆண்மைக் குறைவுக்கு மருந்து என்ற அதி பயங்கர ஏமாற்று வேலை


விந்து முந்துதல் மருந்து மாத்திரைகளினால் தீருமா ?

திரும்பிய பக்கமெல்லாம் ஆண்மை குறைவு விளம்பரங்கள் ..

இரவு டிவி யை ஆன் செய்தால் -ஆண்மையை குறைவா என்ற பேட்டிகள் ...

ஆன்லைனில் ஏகப்பட்ட ஆண்மை அதிகரிக்கும் மருந்துகளின் விளம்பரங்கள் ..

எனது curesure4u@gmail.com வரும் கேள்விகளில் எண்பது சதவீதம் ஆண்மை பற்றிய கேள்விகள் ..

எனது இலவச மருத்துவ தொலைபேசியில் வரும் அழைப்பில் 80 % ஆண்மை குறைவு பற்றிய சந்தேகங்கள் ...

என்ன செய்தால் மக்களின் சந்தேகம் தீரும் ?

மருந்து மாத்திரைகளினால் விந்து முந்துதல் சரியாகி விடுமா ?இரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய் என்று வாழ்வியல் நோயினால் பாதிக்கபட்டு வயாகரா சாப்பிட்டால் பக்கவாதம் வருமோ -பக்க விளைவு வருமோ என்று பயந்தவர்களுக்கெல்லாம் மூலிகை மருந்து பாதுகாப்பானது என்று ஆயுர்வேதம் சித்த மருத்துவம் பார்க்கலாம் என்று திடீர் வைத்தியம் பார்பவர்களே மிக அதிகம் ...

அஸ்வகந்தா சாப்பிட்டால் குதிரை பலம் வரும் என்று தவறாக புரிந்து கொண்டு உலகளவில் செக்ஸ் வளர்க்கும் மூலிகைகளை பயன்பாட்டை அதிகரிக்கும் வணிகப்பார்வை -அதி பயங்கரமானது..

ஆயுர்வேதம் சொல்கிற வாஜீகரண சிகிச்சைகளை பேணாமல் ,சித்த மருத்துவம் சொல்கிற நோய் அணுகா விதியை பேணாமல் -வெறும் சமையல் மந்திரம் மட்டும் ஆண்மை அதிகரிக்கும் -விந்து முந்துதலுக்கு தீர்வை தர இயலுமா என்ன ?


எத்தனை மூலிகை கட்டு கதைகள் இந்த வலை தளங்களிலே ..வெறும் cut copy paste என்ற மந்திரத்தை கற்றுள்ள இங்குள்ள பல எழுத்தாளர்கள் எது வந்தாலும் உடனடியாக Forward செய்து விடுவார்கள் ..எது உண்மை ,எந்த மூலிகை எந்த விதத்தில் எப்படி எடுக்க வேண்டும் என்றே தெரியாமல் பாட்டி வைத்தியம் செய்யும் சில கூகிள் வைத்தியர்கள் ..

ஐந்தரை வருடம் ஆயுர்வேத மருத்துவ படிப்பு படித்து ,கிட்டதட்ட இருபது வருடங்கள் பிரைவேட் ப்ராக்டீஸ் என்னும் நிலையில் உள்ள என்னை போல் உள்ள அப்பாவிகளுக்கு மனிதம் கலந்த மருத்துவம் தெரியுமே தவிர ஏமாற்ற ,பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாது ..இதை விட்டுட்டு சப்ஜெக்டுக்கு வருவோம் ..

ஓரிதழ் தாமரை ,நிலபனங் கிழங்கு ,பூமி சர்க்கரை கிழங்கு ,பூனை காலி விதை ,ஜாதிக்காய் ,வெள்ளை முசலி என்னும் நிலப்பனையில் ஒரு வகை ,சாலமிசிரி ,நெருஞ்சில் முள் ,அஸ்வகந்தா ,நீர்முள்ளி விதை ,முருங்கை விதை இதை போன்ற மிக சிறந்த மூலிகைகள் ஆண்மையை அதிகரிக்கும் என்பதில் எள் அளவுக்கும் சந்தேகமே இல்லை..சில மூலிகைகள் வாத நோயாளிக்கு சிறந்தது ,சில மூலிகைகள் கப நோயாளிக்கு சிறந்தது ,பல மருந்துகள் முக்குற்றங்கள் சம படுத்தும் ..ஆனால்...இன்னும் பல பல ஆண்மை அதிகரிக்கும் மூலிகைகள் உங்களுக்கு வேலை செய்யும் என்பதற்கு என்ன ஆதாரம் ?..ஆயுர்வேதம் சொல்கிறது ஒவ்வொரு மனிதனும் தனி தன்மை வாய்ந்தவன் .ஒரு ப்ரக்ருதி (தேக வாக்கின் தன்மை ) நோயாளிக்கும் இன்னொரு பிரகிருதி நோயாளிக்கும் ஒரே நோய்க்கு மருந்து வெவ்வேறு ,சிகிச்சை அளிக்கும் முறையே வேறு வேறு ..இதை கூட நாம் கணக்கில் எடுத்து கொள்ளலாம் ..


ஆயுர்வேத ,சித்த ,யுனானி சாஸ்திர மருந்துகள் அனைத்தும் நன்றாக வேலை செய்யும் –இதை எப்போதும் மறுப்பதற்கே இல்லை ..ஆனால் இங்கே கம்பெனி பேட்டன்ட்  என்று ஆயுர்வேத ,சித்த மருந்துகள் என்ற பெயரிலே  மிக சிறந்த மூலிகைகளோடு ஆங்கில மருந்தை  Tadalfil ,sildenafil கலந்து கொடுத்து ஏமாற்றுகிறார்கள் 

ஏமாற்றி காசு பார்க்கும் சில தரம் பெரிய மருந்து கம்பெனிகளின் தரத்தை இங்கே பார்க்கலாம் ..

இந்த தளத்தை சென்று பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 


மேலும் பிரபலமாக விளம்பரம் செய்து வந்த முசலி பவர் எக்ஸ்ட்ரா என்னும் மருந்தை கேரளாவில் தடை செய்தார்கள் என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் ..மேலும் இந்த விவரம் படிக்க இங்கே கிளிக் செய்யவும் 
திரும்பிய பக்கம் எல்லாம் மூலிகை மருத்துவம் என்று ஆங்கில மருந்தான  Tadalfil ,sildenafil போன்ற பக்க விளைவுகள் அதிகம் உள்ள மருந்துகளை கலந்து மனசாட்சியை அடமானம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள் ..

இதை விட மோசம் ஒன்று உள்ளது ..இது உணவு பொருள் என்று FSSAI என்று லைசன்சை வாங்கி கொண்டு இது ஆண்மைக்கு உதவும் ,விந்து முந்துதலுக்கு உதவும் என்று பொய் சொல்லி கேப்ஸ்யூல்களை ஆங்கில மருந்து Tadalfil ,sildenafil கலந்து மூலிகை -உணவு என்று நா கூசாமால் டிவிகளில் பொய் விளம்பரங்கள் கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள் ..என்ன செய்வது ..

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் ..

பொய் ,போலிகள் ,போலி வைத்தியர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.லாட்ஜ் வைத்தியர்கள் ஊர் ஊராக சுற்றி மனிதனின் பலஹீனத்தை பயன்படுத்தி இந்த நிலை இல்லாத அற்ப வாழ்வுக்கு ஏமாற்றி தலை முறை தலைமுறைக்கு சேர்த்து வைக்கிறார்கள் ..அவர்கள் திருந்த போவதும் இல்லை ..ஆயுர்வேதம் ,சித்த மருத்துவம் என்று உண்மையான பாரம்பரிய மருத்துவத்தை கெடுத்து கொண்டு அலைகிறார்கள் .என்ன சொல்வது ?சிலர் curesure என்ற புனை பெயரில் எழுதிற www.ayurvedamaruthuvam.blogspot.com என்ற தளத்தையே காப்பி அடித்து தாங்கள் எழுதியது போல் நல்லவர்களாக காட்டி கொள்வார்கள் .


இதற்க்கு தீர்வு 
எந்த மருந்து யாருக்கு தேவை என்று தெரிய வேண்டும் 

எல்லா ஆண்மை குறைவுக்கும் ஒரே மருந்து இருக்கவே முடியாது ..
அதுவும் எல்லோருக்கும் ஒரே மருந்து வேலை செய்யும் என்று சொல்வதற்கு இல்லை  

நோய்க்கான தக்க காரணம் அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும் ..

விளம்பரங்களில் வருகிற மருந்தை பெரும்பாலும் நம்ப கூடாது ..

விந்து முந்துதல் போன்ற குறை உள்ளவர்கள் தக்க மருத்துவரை நாடி அவர்கள் சொல்கிற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தி தக்க ஆயுர்வேத சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை பெற வேண்டும் .

காசுக்கு அசைபடாத உண்மையான  பாரம்பரிய மருத்துவர்களை என்றுமே குறை சொல்லவில்லை ..மருத்துவ பின் புலமே இல்லாத திடீர் என்று பாரம்பரிய மருத்துவர்கள் என்ற போலி மருத்துவர்கள் மட்டும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் காலமாக ஒரே இடத்தில வைத்தியம் செய்கிற உண்மையில் மருத்துவ பின் புலம்  பாரம்பரியம இருக்கிற மருத்வர்களிடமும் சிகிச்சை பெறலாம். மருத்துவ படிப்புள்ளவர்களும் மருந்து கம்பெனி சொல்வதை உண்மை என்று கேட்டு தவறான மருந்தை எழுதவும் வாய்ப்புள்ளது எனபதை மறுப்பதற்கு இல்லை
என்னிடம் ஆலோசனை பெற கடையநல்லூரில் 90 4222 5333 என்ற எண்ணிலும்,சென்னையில் ஆலோசனை பெற  90 4333 6000 என்ற எண்ணிலும், திருநெல்வேலியில் ஆலோசனை பெற 90 4222 5999 என்ற எண்ணிலும், ராஜபாளையத்தில் ஆலோசனை பெற  90 4333 6888  என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம் .ஆண்மை குறைவு சம்மந்தமாக சந்தேகம் கேட்க இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் .ஆலோசனை முன் பதிவு appointment க்கு மட்டும் இந்த எண்களை தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் .

முடிந்த வரை கட்டுரைகளை படித்தாலே தெளிவு கிடைக்கும் என்கிற அளவில் ஏக இறைவன் நாடினால் தொடர்ந்து எழுத முயல்கிறேன் .Post Comment

0 comments:

கருத்துரையிடுக