கிட்னி பைலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிட்னி பைலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 16, 2014

கிட்னி பெயிலியருக்கு பூனை மீசை காய்ந்த சமூலம் விற்பனைக்கு ..

நாளுக்கு நாள் கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகள் அதிமாகி கொண்டு வருகிறார்கள் ..
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் ,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தம் ,உணவில் ஏற்படுகிற விஷத்தன்மை ,குடி நோய் ,செயற்கை உணவுகள் ,துரித உணவுகள் என்று காரணங்கள் பல இருந்தாலும் சிறுநீரக செயல் இழப்பிற்கு இது வரை மக்கள் பார்க்கிற சிகிச்சைகள் டயாலிசிஸ் ஆரம்பித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்று நீள்கிறது ...

எத்தனை சிறுநீரக நோயாளிகளால் டயாலிசிஸ் செலவை ஏற்க முடிகிறது ..
எத்தனை  சிறுநீரக நோயாளிகளால் மாற்று சிறுநீரகத்தை ஏற்பாடு செய்ய முடிகிறது ,தானமாக பெற முடிகிறது ?

இதற்க்கு முன் உள்ள எனது கட்டுரைகிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்பிற்கு  நல்ல மருந்து -பூனை மீசை என்ற தலைப்பை படித்து ( இப்போது படிக்க இங்கே கிளிக் செய்யவும் பல நபர்கள் என்னை பூனை மீசை செடிக்காக தொடர்பு கொண்டனர் ..எப்படியாவது உதவி செய்யுங்கள் ..கொஞ்சமாவது தாருங்கள் ,எங்கே கிடைக்கும் ..என்னை சிந்திக்க வைத்தது ...

எனது மானசீக குரு வைத்ய  உஸ்மான அலி அவர்கள் என்னை போன்ற மருத்துவர்களுக்கு சொல்லி பல சிறுநீரக நோயாளிகளை சரி வர பராமரிக்க ,டயாலிசிஸ் அளவை குறைக்க ,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தேவைப்படாமல் இருக்க இந்த பயன்படும் ஆராய்ச்சியில் ஈடு படுங்கள் என்று எங்களை தூண்டியவர் அவர்க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் ,மேலும் சித்த மருத்துவர் திருநாராயணன் அவர்களுக்கும் ,என்னை எப்போதும் வழிகாட்டும் எனது சகோதரர் மருத்துவர் சித்தீக் அலி அவர்களுக்கும் நான் நன்றி உளமார  கூற கடமைப்பட்டுள்ளேன் .. 




பூனை மீசை செடியை முதலில் 
வீட்டில் வைத்து வளர்த்து பார்த்தேன் பின்னர் எனது மருத்துவ மனையில் தொட்டியில் வளர்த்து பார்த்தேன் ,மக்களுக்கு அடையாளம் காட்ட உதவியதே தவிர நோயாளிக்கு கொடுக்கும் அளவுக்கு கிடக்கவில்லை ..பின்னர் யோசித்தேன் என்ன செய்யலாம் அதிக அளவில் பயிரிட வேண்டுமே ?

என்னிடம் நிலம் இல்லை ,நண்பர் ஒருவரின் தென்னை தோப்புக்குள் வளர்க்க ஏற்பாடு செய்தேன் ..பூச்சி மருந்துகள் இடாத ஒரு இயற்கை விவசாயி அவர் ,ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட இயற்கை எரு உரமிட்டு பன்படுத்தினோம்.இந்த இடம் மலை அடிவாரம் ..ஊர் வடகரை ..பின்னர் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பூனை மீசை செடிகளை மருத்துவர் மைக்கேல் ஜெயராஜு அய்யா அவர்களிடம் பெற்றேன் ..

பூனை மீசை செடி வளர்ந்து வரும் போது நிறைய விவசாயம் கற்றோம் .. ஆடு மேயாது என்று ஆனந்தபட்டால் நிறைய மயில்கள் வந்து செடிகள் நாசம் செய்தது ,நிற்காத தொடர் மழை வந்து களை பறிக்க முடியாது கஷ்டப்படுத்தியது ,செடிகளின் இலைகளை பூச்சிகள் அரித்தது ..கடைசியில் தோற்று நின்றேன் ..இரண்டு வருட விவசாய அனுபவம் என்னை ஏன் இதை செய்ய ஆரம்பித்தேன் என்று தோணுகிற அளவுக்கு வருத்தத்தை கொடுத்தது ...தோல்விகள் பாடம் புகட்டியது ,தோல்விகள் எனக்கு பல வழிகளை கற்று கொடுத்தது ...இப்போது நீங்கள் பூனை மீசை காய்ந்த சமூலம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிற அளவுக்கு என்னை உருவாக்கிருக்கிறது ...


உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ,நபர்கள் ,நோயாளிகள் சிறுநீரக நோயால் பாதிக்கபட்டால் சொல்லுங்கள் எங்களால் இப்போது பூனை மீசை காய்ந்த சமூலம் எங்களால் தர இயலும் ..

குறைந்தது நூறு கிராம முதல் -நூறு கிலோ வரை இப்போது தர இயலும் ..

பூனை மீசை -காய்ந்த செடியை எப்படி பயன்படுத்துவது ?

இருபது கிராம் காய்ந்த பூனை மீசை சமூலம் + நானூறு மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஐம்பது மிலியாக வற்ற வைத்து காலை வெறும் வயிற்றில் அதே போல் மாலையும் இருபது கிராம் பூனை மீசை செடியில் தயாரித்த குடிநீர் ஐம்பது மிலி வெறும் வயிற்றில் பருகுதல் பலன் தரும் ..

பூனை மீசை குடிநீரை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் ?

இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும் ..

அடிக்கடி டயாலிசிஸ் செய்கிற தேவை இருக்காது ..
டயாலிசிஸ் செய்த பின் நோயாளிக்கு ஏற்படுகிற நிம்மதி நிலைக்கும் ..
சிறுநீரகத்திற்கு  சக்தி கிடைக்கும் ..

பூனை மீசை குடிநீரால் கிட்னி பெயிலியர் பூரண குணம் கிடைக்குமா ? முற்றிலும் குணம் கிடைக்குமா ?

முற்றிலும் குணமாகுமா என்பதை போலி மருத்துவர்கள் போல் வாக்கு தர இயலாது ..ஆனால் பல ஆராய்ச்சிகள் இரத்தத்தில் உள்ள அதிக யூரியா ,க்ரியாடினின் அளவை குறைக்க உதவுகிறது என்பது சொல்கிறது ,நிச்சயமாக உப்பு சத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் ..நல்ல மாற்று மருந்தாக இது செயல்படும் ..நோயாளியின் மற்ற உடல்  தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் ,பலசாலியாக இருந்தால் நோய் முழுவதும் குணம் ஆக வாய்ப்புள்ளது ..

ஆங்கில மருந்தை பயன்படுத்தும் போது இந்த மருந்தை பயன்படுத்தலாமா ?
எந்த ஆங்கில மருந்தோடும் சேர்த்து பயன்படுத்தலாம் 

டயாலிசிஸ் செய்கிற போதும் பயன்படுத்தலாமா ?
பயன்படுத்தலாம் .

எவ்வளவு காலம் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் ?
மிக குறைந்த நாட்களிலே இந்த மருந்தின் பலன் தெரியும் ..இரத்தத்தில் உள்ள உப்பு சத்தின் அளவை பொருத்து எவ்வளவு நாட்கள் தொடர வேண்டும் என்பது முடிவு செய்யலாம் 

இந்த மருந்துக்கு அதிகம் செலவாகுமா ?
மருந்தின் விலை அதிகம் இல்லை 

மருந்து எந்த அளவுகளில் கிடைக்கும் ?
ஒரு வேலை சாப்பிடுகிற அளவான இருபது கிராம் தனி தனி பாக்கெட்டுகளில் கிடைக்கும் 

மருந்தை எப்படி வாங்குவது ?
பேங்கில் பணம் டெபாசிட் செய்தால் கூரியரில் மருந்தை பெற்று கொள்ளலாம்.

பேங்க் விவரம் ?

NAME- AL-SHIFA AYUSH AGENCY
CURRENT ACCOUNT NO 267109000171971
BANK -CITY UNION BANK
BRANCK .KADYANALLUR
IFSC CODE   CIUB0000267

தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9688778640 


Post Comment

திங்கள், ஜனவரி 14, 2013

வாத நோய்களில் -காலாக்னிருத்ர ரஸ _KALAGNIRUDRA RASA


வாத நோய்களில் -காலாக்னிருத்ர ரஸ  _KALAGNIRUDRA RASA                                                                                            
(ref-பஸவராஜீயம் – வாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக        10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            ஓமம் – அஜமோதா                                      10 கிராம்
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10           “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                     10           “
7.            கொடிவேலிவேர் – சித்ரக                             10           “
8.            சீரகம் – ஜீரக                                        10           “
9.            வாயுவிடங்கம் – விடங்க                             10           “
10.          சுக்கு – சுந்தீ                                         10           “
11.          மிளகு – மரீச்ச                                      10           “
12.          திப்பிலி – பிப்பலீ                                    10           “

இவைகளை பொடித்துச் சலித்த சூரணத்தையும், பொடித்த

13.          ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார                       10           “
14.          யவக்ஷாரம் – யவக்ஷார                           10           “
15.          வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) – டங்கண பஸ்ம 10           “
16.          இந்துப்பு – ஸைந்தவ லவண                      10           “
17.          கல்லுப்பு – ஸ்வர்ச்ச லவண                       10           “

ஆகியவற்றையும் எலுமிச்சம் பழச்சாற்றில் வைத்துத் தனித்தனியே அரைத்து நுண்ணிய விழுதாக்கிய

18.          சுத்தி செய்த நாபி – ஷோதித வத்ஸநாபி                 10           “
19.          சுத்தி செய்த எட்டிக்கொட்டை – ஷோதித விஷமுஷ்டி    180         “

இவைகளையும் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள்  2 முதல் 3 வேளைகளுக்கு சிறிது நெய்யும், மிளகுச் சூரணமும் சேர்த்துக் கொடுக்கவும்.

மிளகு, சீரகக் கஷாயத்துடனோ, சித்தரத்தைக் கஷாயத்துடனோ இதனைக் கொடுப்பது வழக்கம். 

தீரும் நோய்கள்: 

பசியின்மை (அக்னிமாந்த்ய), குன்மம் (குல்ம), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), ஜீரணக்கோளாறுகள், மற்றும் பொதுவான வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் பாரிசவாயு (பக்ஷாகாதவாத) போன்ற வாத நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. வாத நோய்களில் -பக்க வாதத்தில் -ஏகாங்க வீர ரச மாத்திரையுடன் பயன்படும் 

                

Post Comment

புதன், ஜனவரி 26, 2011

கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்-Punarnavasavam


கிட்னி பைலியர்,சொரியாசிஸ்  நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்-Punarnavasavam
(ref-பைஷஜ்ய ரத்னாவளி - சோபாதிகாரம்)


 
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் – ஜல - 25.600 லிட்டர்
2.            சர்க்கரை – ஸர்க்கர                    - 5.000 கிலோகிராம்
3.            தேன் – மது                           - 2.500                 “


இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்


1.            சுக்கு – சுந்தீ                               - 50 கிராம்
2.            மிளகு – மரீச்ச                             - 50       “
3.            திப்பிலி – பிப்பலீ                            - 50       “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ     - 50       “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ    - 50       “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ                    - 50       “
7.            மரமஞ்சள் – தாருஹரித்ரா                 - 50       “
8.            நெருஞ்சில் – கோக்ஷூர                   - 50       “
9.            முள்ளுக்கத்திரி வேர் – ப்ருஹத்தீ          - 50       “
10.          கண்டங்கத்தரி – கண்டகாரீ               - 50       “
11.          ஆடாதொடை வேர் – வாஸாமூல       - 50       “
12.          ஆமணக்கு வேர் – ஏரண்டமூல          - 50       “
13.          கடுகரோஹிணீ – கடுகீ                 - 50       “
14.          யானைத்திப்பிலி – கஜ பிப்பலீ          - 50       “
15.          மூக்கரட்டை வேர் – புனர்னவ            - 50       “
16.          வேப்பம்பட்டை – நிம்பத்வக்            - 50       “
17.          சீந்தில் கொடி – குடூசீ                  - 50       “
18.          உலர்ந்த முள்ளங்கி – சுஷ்கமூலக       - 50       “
19.          சிறுகாஞ்சூரி வேர் – துராலபா           - 50       “
20.          பேய்ப்புடல் – பட்டோல           - 50       “


ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீ புஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு:    சர்க்கரை, திராக்ஷை ஆகியவற்றை வகைக்கு 75 சதவிகிதமும், தேன் 87 ½ சதவிகிதமும் அதிகம் சேர்ப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:     15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  

வீக்கம் (அ) நீர்க்கோவை (ஸோத) ஷோப), பெருவயிறு (மஹோதர, உதர), சோகை (பாண்டு), (காமால, காமில), நீர்க்கட்டு (மூத்திராசங்க); கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீக வ்ருத்தி).
வீக்கம், பெருவயிறு, சோகை, காமாலை போன்ற நோய்களில் புனர்னவ மண்டூரத்துடன் இது கலந்துதரப்படுகிறது. கோக்ஷூராதி சூர்ணத்துடனும் இது கொடுக்கப்படுகிறது.

இது ஒரு நல்ல சிறுநீர் பெருக்கியாகும்.

கிட்னி பைலியர் நோயாளிகள்-
 புனர்ணவாஸவத்தில்  இனிப்பு உள்ளது -பெரும்பான்மையான கிட்னி பைலியர் நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் உள்ளதால் -மிக மிக கவனத்துடன் தருவது நல்லது ..கிட்னி பைலியர் நோயாளிகள் இந்த மருந்தை தக்க படித்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி தான் இந்த மருந்தை எடுக்க வேண்டும் ..
தனியாக சாப்பிட கூடாது ..

(கிட்னி பைலியர் நோயாளிகள் பூனை மீசை என்ற மூலிகையை கொடுத்து ஓரளவுக்கு அவர்களின் உப்பு சத்தை டயாலிசிஸ் இல்லாமல் சரிசெய்ய முடிகிறது ..
இந்த மூலிகையின் முழு விவரம் விரைவில் எழுதுகிறேன் ..)





எனது அனுபவத்தில் இந்த புனர்ணவாஸவத்தை அடிக்கடி தோல் நோய் குறைக்க பயன்படும் ஆயுர்வேத  மாத்திரையுடன் சாப்பிட்டு வர மிக கொடுமையான சொரியாசிஸ் நோய் குணமாவதை கண் கூடாக பார்த்திருக்கிறேன் ..

Post Comment