கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்-Punarnavasavam
(ref-பைஷஜ்ய ரத்னாவளி - சோபாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் – ஜல - 25.600 லிட்டர்
2. சர்க்கரை – ஸர்க்கர - 5.000 கிலோகிராம்
3. தேன் – மது - 2.500 “
இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்
1. சுக்கு – சுந்தீ - 50 கிராம்
2. மிளகு – மரீச்ச - 50 “
3. திப்பிலி – பிப்பலீ - 50 “
4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ - 50 “
5. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ - 50 “
6. நெல்லிமுள்ளி – ஆமலகீ - 50 “
7. மரமஞ்சள் – தாருஹரித்ரா - 50 “
8. நெருஞ்சில் – கோக்ஷூர - 50 “
9. முள்ளுக்கத்திரி வேர் – ப்ருஹத்தீ - 50 “
10. கண்டங்கத்தரி – கண்டகாரீ - 50 “
11. ஆடாதொடை வேர் – வாஸாமூல - 50 “
12. ஆமணக்கு வேர் – ஏரண்டமூல - 50 “
13. கடுகரோஹிணீ – கடுகீ - 50 “
14. யானைத்திப்பிலி – கஜ பிப்பலீ - 50 “
15. மூக்கரட்டை வேர் – புனர்னவ - 50 “
16. வேப்பம்பட்டை – நிம்பத்வக் - 50 “
17. சீந்தில் கொடி – குடூசீ - 50 “
18. உலர்ந்த முள்ளங்கி – சுஷ்கமூலக - 50 “
19. சிறுகாஞ்சூரி வேர் – துராலபா - 50 “
20. பேய்ப்புடல் – பட்டோல - 50 “
ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீ புஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு: சர்க்கரை, திராக்ஷை ஆகியவற்றை வகைக்கு 75 சதவிகிதமும், தேன் 87 ½ சதவிகிதமும் அதிகம் சேர்ப்பது சம்பிரதாயம்.
அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
வீக்கம் (அ) நீர்க்கோவை (ஸோத) ஷோப), பெருவயிறு (மஹோதர, உதர), சோகை (பாண்டு), (காமால, காமில), நீர்க்கட்டு (மூத்திராசங்க); கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீக வ்ருத்தி).
வீக்கம், பெருவயிறு, சோகை, காமாலை போன்ற நோய்களில் புனர்னவ மண்டூரத்துடன் இது கலந்துதரப்படுகிறது. கோக்ஷூராதி சூர்ணத்துடனும் இது கொடுக்கப்படுகிறது.
இது ஒரு நல்ல சிறுநீர் பெருக்கியாகும்.
தனியாக சாப்பிட கூடாது ..
(கிட்னி பைலியர் நோயாளிகள் பூனை மீசை என்ற மூலிகையை கொடுத்து ஓரளவுக்கு அவர்களின் உப்பு சத்தை டயாலிசிஸ் இல்லாமல் சரிசெய்ய முடிகிறது ..
இந்த மூலிகையின் முழு விவரம் விரைவில் எழுதுகிறேன் ..)
எனது அனுபவத்தில் இந்த புனர்ணவாஸவத்தை அடிக்கடி தோல் நோய் குறைக்க பயன்படும் ஆயுர்வேத மாத்திரையுடன் சாப்பிட்டு வர மிக கொடுமையான சொரியாசிஸ் நோய் குணமாவதை கண் கூடாக பார்த்திருக்கிறேன் ..
கிட்னி பைலியர் நோயாளிகள்-
புனர்ணவாஸவத்தில் இனிப்பு உள்ளது -பெரும்பான்மையான கிட்னி பைலியர் நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் உள்ளதால் -மிக மிக கவனத்துடன் தருவது நல்லது ..கிட்னி பைலியர் நோயாளிகள் இந்த மருந்தை தக்க படித்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி தான் இந்த மருந்தை எடுக்க வேண்டும் ..தனியாக சாப்பிட கூடாது ..
(கிட்னி பைலியர் நோயாளிகள் பூனை மீசை என்ற மூலிகையை கொடுத்து ஓரளவுக்கு அவர்களின் உப்பு சத்தை டயாலிசிஸ் இல்லாமல் சரிசெய்ய முடிகிறது ..
இந்த மூலிகையின் முழு விவரம் விரைவில் எழுதுகிறேன் ..)
எனது அனுபவத்தில் இந்த புனர்ணவாஸவத்தை அடிக்கடி தோல் நோய் குறைக்க பயன்படும் ஆயுர்வேத மாத்திரையுடன் சாப்பிட்டு வர மிக கொடுமையான சொரியாசிஸ் நோய் குணமாவதை கண் கூடாக பார்த்திருக்கிறேன் ..
0 comments:
கருத்துரையிடுக