பலஹீனம் ,மயக்கத்தை குணபடுத்தும் -திராக்ஷாரிஷ்டம் -Draksha arishtam
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகார)-
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. திராக்ஷை – திராக்ஷா 5.000 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 51.200 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்
சர்க்கரை 5.000 கிலோ கிராம், தேன் 5.000 கிலோ கிராம் இவைகளைக் கலந்து
1. ஜாதிக்காய் – ஜாதிபல 25 கிராம்
2. இலவங்கம் – லவங்க 25 “
3. தக்கோலம் – தக்கோலம் 25 “
4. பேரீச்சம்பழம் – கர்ஜூர பலம் 25 “
5. சந்தனக்கட்டை – சந்தன 25 “
6. திப்பிலி – பிப்பலீ 25 “
7. இலவங்கப்பட்டை – லவங்க த்வக் 25 “
8. இலவங்கப்பத்திரி – லவங்க பத்ர 25 “
9. ஏலக்காய் – ஏலா 25 “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ 350 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
பசிக்குறைவு (அக்னி மாந்த்ய), ருசியின்மை (அருசி), வாயுக்கட்டு எனும் உப்புசம் (ஆத்மான), மூலம் (அர்ஷ), க்ஷயம் (க்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), சோகை (பாண்டு), இரத்தபித்தம் (ரத்தப்போக்கு, ரத்தம் போதல், மூக்கில் ரத்தம் வடிதல், ரத்த மூத்திரம் போன்றன), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக).
இது சிறந்ததொரு உடல்தேற்றி, பசியுண்டாக்கி, செரிப்புண்டாக்கி, இதயத்திற்கு வலுவுண்டாக்கி, மிதமான மலமிளக்கி.
2 comments:
அருமையான பதிவு.சிலர் இந்த அரிஷ்டங்களின் மருந்துத் தன்மையை உணராமல் மதுக் கஷாயம் என்ற இவற்றுக்கு பெயரிட்டு உள்ள இவைகளை தடை செய்ய மதுரை ஹைகோர்ட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது எனக்கு ஏதேச்சையாக தெரிய வந்தது.இவர்களின் அறியாமையை என்ன செய்வது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
@சாமீ அழகப்பன்நன்றி நண்பரே ..பாராட்டுக்கள் ஊக்கபடுத்துகின்றது ..
நீங்கள் சொல்வது உண்மை ..அரிஷ்டம் மிக சிறந்த மருந்து ..போதை வரவே வராது ..மருந்தாய் மட்டும் தேவை கருதி அரசின் அனுமதி பெற்று உரிய லைசன்சுடன் தயாரிக்கபட்ட நல்ல மருந்து கம்பெனிகளிடம் வாங்கி உபயோகிக்கும் முறை தெரிந்து உபயோகித்தால் நன்று..நோய் தீரும்
கருத்துரையிடுக