குழந்தை பேறுக்கு பின் உடலை தேற்ற -ஜீரகாத்யரிஷ்டம்-Jeerkaadhyarishtam
(ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகசிகித்ஸா)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. ஜீரகம் – ஜீரக 10.000 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 51.200 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 12.000 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 15.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்
1. சுக்கு - சுந்தீ 100 கிராம்
2. ஜாதிக்காய் – ஜாதீபல 50 “
3. கோரைக்கிழங்கு – முஸ்தா 50 “
4. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 50 “
5. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 50 “
6. ஏலக்காய் – ஏலா 50 “
7. சிறு நாகப்பூ – நாககேஸர 50 “
8. ஓமம் – அஜமோதா 50 “
9. தக்கோலம் – தக்கோல 50 “
10. இலவங்கம் – லவங்க 50 “
ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: செரியாமை எனும் ஜீரணக் கோளாறுகள் (அக்னி மாந்த்ய), வயிற்றுப் போக்கு எனும் பேதி (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சூதக நோய்கள் எனப்படும் வீட்டு விலக்குக் கோளாறுகள் (சூதிகாரோக), சூதகக்கட்டு எனப்படும் திடீரென்று மாத விடாய் நின்று விட்ட நிலை (நஷ்டார்த்தவ), சூதகவலி (கஷ்டார்த்தவ (அ) சூதக சூல).
குழந்தையீன்ற பின்னேற்படும் பொதுவான கருப்பைக் (கர்பாஸய) கோளாறுகள் மற்றும் மகப்பேற்றுக்குப் பின்னேற்படும் நோய்களில் சூதிகாபரணரஸ மற்றும் வாதவித்வம்ஸினி ரஸத்துடன் சேர்த்துத் தரப்படுகிறது. பிரசவம் ஆன பின் பெண்களுக் கேற்படும் உடல் முழுதும் வலியெடுத்தல், கைகால் எரிதல் போன்றவற்றுடன் கூடிய காய்ச்சல்களில் இது பெரிதும் குணமளிக்க வல்லது.
0 comments:
கருத்துரையிடுக