. இரத்தசோகை நோயை குணப்படுத்தும் -தாத்ரீ அஷ்ரிடம்-Daathree arishtam
(ref-சரகஸம்ஹிதா - பாண்டுசிகித்ஸா)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. நெல்லிக்கனி – ஆமலகீ 2000 எண்ணிக்கைகள்
2. சர்க்கரை – ஸர்க்கர 2.5 கி.கிராம்
3. தேன் – மது 312.5 கிராம்
4. திப்பிலி – பிப்பலீ 100 கிராம்
நெல்லிக்கனிகளை நன்றாக இடித்துப் பிழிந்து வடிகட்டிக் கிடைத்த சாற்றில்சர்க்கரை, சாற்றின் அளவில் எட்டில் ஒரு பங்கு அளவுக்கு (312.500 கிராம்) தேன் இவைகளைக் கலந்து திப்பிலியை பொடித்துச் சேர்த்து இரண்டு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:-
இரத்தசோகை (பாண்டு), காமாலை (காமால (அ) காமிலா), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), வயிற்று உப்புசம் எனும் வயிற்றுப் பெருமல் (ஆத்மான), விட்டு விட்டு வரும் காய்ச்சல்கள் (விஷமஜ்வர), விக்கல் (ஹிக்க), சர்க்கரை நோய் (மது மேஹ).
பசியுண்டாக்கி, செரிப்புண்டாக்கி மற்றும் மிதமான மலமிளக்கி.
எனக்கு தெரிந்த வகையில் மார்கெட்டில் கிடைக்கும் அத்தனை இரத்த விருத்தி டானிக்குகளை விட சிறந்த ஒன்று இந்த தாத்யாரிஷ்டம் என்னும் இந்த நெல்லிக்காய் டானிக் என்பதே உண்மை ..
2 comments:
அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!
நன்றி அருமையான மற்றும் பயனுள்ள தகவல்
www.puthiyatamil.net
கருத்துரையிடுக