வியாழன், ஜனவரி 27, 2011

கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை போக்கும் -ரோஹீதகாரிஷ்டம்-Rohitharishtam


கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை போக்கும் -ரோஹீதகாரிஷ்டம்-Rohitharishtam
(ref-பைஷஜ்யரத்னாவளி - ப்லீஹயக்ருதாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

                                                   ரோஹித மரத்தின் படம் 

1.            ரோஹிதகப்பட்டை ரோஹீதக த்வக்   - 5.000 கிலோகிராம்
2.            தண்ணீர் ஜல                         - 51.200 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட)  10.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்,  


1.            திப்பிலி பிப்பலீ                         - 50 கிராம்
2.            மோடி பிப்பலீமூல                      - 50       “
3.            செவ்வியம் சவ்ய                       - 50       “
4.            கொடிவேலி வேர் சித்ரக                 - 50       “
5.            சுக்கு சுந்தீ                              - 50       “
6.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்           - 50       “
7.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர              - 50       “
8.            ஏலக்காய் ஏலா                             - 50       “
9.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ     - 50       “
10.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ    - 50       “
11.          நெல்லிமுள்ளி ஆமலகீ                      - 50       “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   

   10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத் ப்லீகவ்ருத்தி), குன்மம் (குல்ம), பெருவயிறு (மஹோதர, உதர), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), மூலம் (அர்ஷ), காமாலை (காமால, காமில), வீக்கம் (அஷ்த்தீலா)
                கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தில், நோயின் கடுமைக்கு ஏற்பவும், நோயாளியின் நிலைமை மற்றும் வயதுக்கு ஏற்பவும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் இரண்டு மாதங்கள் வரை சித்ரகாதி வடி மற்றும் ஜஸத பஸ்மாவுடன் தரப்படுகிறது.

Post Comment

4 comments:

கருத்துரையிடுக