புதன், ஜனவரி 12, 2011

உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்-Kumaryasavam


உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்-Kumaryasavam
(ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            சோற்றுக் கற்றாழைச் சாறு குமாரீரஸ - 12.800 லிட்டர்
2.            வெல்லம் குட                         - 5.000 கிலோ கிராம்
3.            தேன் மது                            - 2.500                 “

இவைகளை நன்கு கலந்து அதில் 2.500 கிலோ கிராம் சுத்தி செய்த இரும்பு அரப் பொடியை (லோஹபஸ்ம) அக்கலவையையே சிறிது விட்டு நன்கு அரைத்துக் கலந்து பின்னர்

1.            சுக்கு சுந்தீ                                - 25 கிராம்
2.            மிளகு மரீச்ச                             - 25       “
3.            திப்பிலி பிப்பலீ                           - 25       “
4.            கிராம்பு லவங்க                          - 25       “
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்             - 25       “
6.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர              - 25       “
7.            ஏலக்காய் ஏலா                           - 25       “
8.            சிறுநாகப்பூ நாககேஸர                     - 25       “
9.            கொடிவேலி வேர் சித்ரக                   - 25       “
10.          மோடி பிப்பலீமூல                         - 25       “
11.          வாயுவிடங்கம் விடங்க                    - 25       “
12.          யானைத் திப்பலி கஜபிப்பலீ                - 25       “
13.          செவ்வியம் சவ்ய                          - 25       “
14.          கொட்டைக்கரந்தை ஹப்புஸா              - 25       “
15.          கொத்தமல்லி விதை தான்யக              - 25       “
16.          கொட்டைப்பாக்கு க்ரமுக                   - 25       “
17.          கடுக ரோஹிணீ கடுரோஹிணீ             - 25       “
18.          கோரைக்கிழங்கு முஸ்தா                  - 25       “
19.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ       - 25       “
20.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ     - 25       “
21.          நெல்லிமுள்ளி ஆமலகீ                    - 25       “
22.          சித்தரத்தை ராஸ்னா                       - 25       “
23.          தேவதாரு தேவதாரு                      - 25       “
24.          மஞ்சள் ஹரித்ரா                          - 25       “
25.          மரமஞ்சள் தாருஹரித்ரா                   - 25       “
26.          பெருங்குரும்பை மூர்வா                   - 25       “
27.          திராக்ஷை த்ராக்ஷா                        - 25       “
28.          நாகதந்தி வேர் தந்தி மூல (நேர்வாள வேர்)   - 25       “
29.          புஷ்கர மூலம் குஷ்த்த                     - 25       “
30.          சித்தாமுட்டி வேர் பலாமூல                  - 25       “
31.          பேராமுட்டி வேர் அதீபலாமூல             - 25       “
32.          பூனைக்காலி வேர் துராலபாமூல            - 25       “
33.          நெருஞ்சில் கோக்ஷூர                     - 25       “
34.          சதகுப்பை ஸதபுஷ்ப                       - 25       “
35.          ஹிங்குபத்ரி ஹிங்குபத்ரி                  - 25       “
36.          அக்கராகாரம் அகார கரபா                  - 25       “
37.          உடங்கன் விதை உட்டிங்கணபீஜ            - 25       “
38.          வெள்ளை மூக்கிரட்டை ஸ்வேதபுனர்னவ    - 25       “
39.          சிகப்பு மூக்கிரட்டை ரத்த புனர்னவ           - 25       “
40.          பாச்சோத்திப்பட்டை லோத்ரா               - 25       “
41.          பொன்நிமிள பற்பம் ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம - 25       “

இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 400 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:    

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

ருசியின்மை (அருசி), பசியின்மை (அக்னிமாந்த்ய), இளைப்பு (கார்ஸ்ய), பக்கசூலை (பக்டிசூல), இரைப்பைப் புண்கள் மற்றும் முன்சிறுகுடற் புண்கள் (பரிணாமசூல), பெருவயிறு (மஹாதரம்), மலம், மூத்திரம், அபானவாயு ஆகியவற்றின் பந்தனத்தால் ஏற்படும் மூச்சு முட்டலும், குமட்டலும் (உதாவர்த்த), மூத்திரச் சுருக்கு (மூத்திர கிரிச்சர), பிரமேகம் (ப்ரமேஹ), கல்லடைப்பு (அஷ்பரீ), குடற்பூச்சிகள் (க்ருமி கோஷ்ட), ரத்தம் துப்புதல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல் மற்றும் பலவித ரத்தப் போக்குகள், ரத்த பித்தம், சீர்கேடடைந்த விந்து (சுக்ர தோஷ). மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட சூதக சூலை (ஆர்த்தவசூல) தீரும்.

மார்கெட்டில் கிடைக்கும் தனியான சோற்று கற்றாழை மருந்துகள் ,உணவுகள் ,சோற்று கற்றாழை சார்ந்த பொருட்களை எல்லாம் விட இந்த மருந்து பல நூறு மடங்கு சிறந்தது
 
குறிப்பு  -கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது

Post Comment

0 comments:

கருத்துரையிடுக