வெள்ளி, ஜனவரி 07, 2011

அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறந்த டானிக் -கதிராரிஷ்டம்-kadira arishtam


அனைத்து தோல் வியாதிகளுக்கும் சிறந்த டானிக் -கதிராரிஷ்டம்-kadira arishtam
(ref-பைஷஜ்யரத்னாவளி - குஷ்டாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-


1.            கருங்காலி கதிர                     2.500 கிலோ கிராம்
2.            தேவதாரு தேவதாரு                 2.500     “
3.            கார்போகரிசி பாகுசீ                   0.600     “
4.            மரமஞ்சள் தாரு ஹரித்ரா            1.000     “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ 1.000     “
6.            தான்றிக்காய் பிபீதகீ                   1.000     “
7.            நெல்லிமுள்ளி ஆமலகீ               1.000     “
8.            தண்ணீர் ஜல                   102.400 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி,

சர்க்கரை (ஸர்க்கர) 5.000 கிலோ கிராம், தேன் (மது) 10.000 கிலோ கிராம் ஆகியவைகளை சேர்த்து அத்துடன்

1.            தக்கோலம் தக்கோல                    50 கிராம்
2.            சிறு நாகப்பூ நாககேஸர                    50           “
3.            ஜாதிக்காய் ஜாதீபல                       50           “
4.            இலவங்கம் லவங்க                       50           “
5.            ஏலக்காய் ஏலா                           50           “
6.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்             50           “
7.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர              50           “
8.            திப்பிலி பிப்பலீ                           200         “


ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 1.000 கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு:  
  (i) திரிபலா மூன்றும் சேர்ந்து 1.000 கிலோ கிராம் எடுத்துத் தயாரிப்பது சம்பிரதாயம்
      (ii) வால்மிளகு (கங்கோல) சேர்ப்பது சிலரது சம்பிரதாயம்


அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

  
தொழுநோய் (மஹாகுஷ்டம்), மற்ற தோல் நோய்கள் (குஷ்ட (அ) சர்மரோக), சோகை (பாண்டுரோக), குடற்புழுக்கள் (க்ருமி), இருமல் (காஸ), சுவாச மண்டலத்தில் தொற்று, மண்ணீரல் வீக்கம் (ப்லீஹோதர), குன்மம் (குல்ம), கிரந்தி (கிரந்தி), கழலை (அர்புத).


Post Comment

1 comments:

மச்சவல்லவன் சொன்னது…

தொடர்ந்து பயனுள்ள மருத்துவ தகவல்கள் எழுதிவரும் உங்களுக்கு மிக்க நன்றிகள்.அதோடு, தமிழகத்தில் என்கங்கு, நீங்கள் குருப்பிடும் மருந்துகள் வாங்கலாம் என்பதை ஒரு பதிவில் எழுதவும்சார்.இதை கேழ்க காரணம்,போலிகளை தவிர்க்கவும்,சில மருந்துகளை தபாலில் பெற முடியாத காரணத்தால்தான்.

கருத்துரையிடுக