வெள்ளி, ஜனவரி 28, 2011

சூட்டு கட்டிகளை குணமாக்கும் - ஸாரிபாத்யாஸவம்-Saribadyasavam


சூட்டு கட்டிகளை குணமாக்கும்,சர்க்கரை நோயினால் ஏற்படும் கட்டிகளுக்கும் ,சூட்டை குறைக்கவும் -- ஸாரிபாத்யாஸவம்-Saribadyasavam

(பைஷஜ்யரத்னாவளி - பிரமேஹபிடஹாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல  - 25.600 லிட்டர்
2.            வெல்லம் குட                         - 15.000 கிலோகிராம்

இவைகளை நன்கு கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 3.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்,


1.            நன்னாரி ஸாரிவா                    - 200 கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா             - 200    “
3.            பச்சோத்திப்பட்டை லோத்ரா           - 200    “
4.            ஆலம்பட்டை நியாகுரோத            - 200    “
5.            அரசம்பட்டை அஸ்வத்தா             - 200    “
6.            கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ               - 200    “
7.            நன்னாரி (கருப்பு) அனந்தமூல         - 200    “
8.            பதிமுகம் பத்மகம்                   - 200    “
9.            குருவேர் ஹ்ரிவேர்                   - 200    “
10.          பாடக்கிழங்கு பாட்டா                 - 200    “
11.          நெல்லுமுள்ளி ஆமலகீ               - 200    “
12.          சீந்தில்கொடி குடுசீ                   - 200    “
13.          விளாமிச்சவேர் உஸீர                - 200    “
14.          சந்தனம் ஸ்வேதசந்தன              - 200    “
15.          செஞ்சந்தனம் ரக்தசந்தன             - 200    “
16.          ஓமம் அஜமோதா                    - 200    “
17.          கடுகரோஹீணீ கடுகீ                - 200    “
18.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         - 200    “
19.          சிற்றேலம் ஏலா                     - 200    “
20.          பேரேலம் ப்ருஹத் ஏலா              - 200    “
21.          கோஷ்டம் கோஷ்டம்               - 200    “
22.          சூரத்துநிலாவாரை ஸ்வர்ணபத்ர       - 200    “
23.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ     - 200    “


                இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 500 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 பிரமேகம் (ப்ரமேஹ), பிரமேகக்கட்டிகள் (ப்ரமேஹ பிடக), பரங்கிப்புண் (உபதம்ஷ), தோல் நோய்கள் (குஷ்ட (அ) சர்மரோக) கீல்வாதம் (சந்திவாத), குதிகால் வாதம் (வாதரக்த) போன்ற வாதநோய்கள் (வாதரோக) மற்றும் ஆசனவாய் வெடிப்பு (பகந்தர).
ரத்தத்தை சுத்தி செய்யவல்லது. இது பரங்கிப் புண்ணில் (அ) பரங்கி நோயில் தேவகுஸும ரஸாயனத்துடனோ ஷட்குண ஸிந்தூரத்துடனோ தரப்படுகிறது.

Post Comment

3 comments:

கருத்துரையிடுக