ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் -ஸாரஸ்வதாரிஷ்டம்-Sarasvatharishtam
(ref-பைஷஜ்யரத்னாவளி - ரஸாயனாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. வல்லாரை – ப்ராஹ்மீ - 1.000 கிலோகிராம்
2. தண்ணிர் விட்டான் கிழங்கு – ஸதாவரீ - 0.250 “
3. முதுக்கன் கிழங்கு – விடாரீ - 0.250 “
4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ - 0.250 “
5. விளாமிச்சவேர் – உஸீர - 0.250 “
6. இஞ்சி – ஆர்த்ரக - 0.250 “
7. சதகுப்பை – ஸதபுஷ்ப - 0.250 “
8. தண்ணீர் – ஜல - 12.800 லிட்டர்
இவைகளை நன்கு கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆக்க் குறுக்கி வடிகட்டி அதில்
1. சர்க்கரை – ஸர்க்கர - 1.250 கிலோகிராம்
2. தேன் – மது - 0.500 “
இவைகளைக் கலந்து மற்றும்
1. அரேணுகம் – அரேணுக - 12.500 கிராம்
2. சிவதை (கருப்பு) – த்ரிவ்ருத் - 12.500 “
3. திப்பிலி – பிப்பலீ - 12.500 “
4. இலவங்கம் – லவங்க - 12.500 “
5. வசம்பு – வாச்சா - 12.500 “
6. கோஷ்டம் – கோஷ்ட - 12.500 “
7. அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா - 12.500 “
8. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ - 12.500 “
9. சீந்தில்கொடி – குடூசீ - 12.500 “
10. ஏலக்காய் – ஏலா - 12.500 “
11. வாயுவிடங்கம் – விடங்க - 12.500 “
12. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் - 12.500 “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 250 கிராம் சேர்த்துத் தங்க்க் குடத்தில் ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு: தங்கக் குடம் இல்லாவிடில் மற்ற கலங்களை உபயோகித்தும் தயாரிக்கலாம். அவ்விதம் உபயோகிக்கும் போது தங்கத்தின் குணம் கிடைக்க மேற்கூறிய மருந்தில் தங்கரேகத்தைச் சேர்க்க வேண்டும். 125.00 கிராம் எடையுள்ள தங்கரேக்கை வடிகட்டிய அரிஷ்டம் சிறிது சேர்த்து நன்கு கல்வத்திலிட்டரை குப்பியிலடைக்கும் தருணத்தில் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
மூர்ச்சை (மூர்ச்சா), கால்கைவலி எனும் காக்கை வலிப்பு (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), மூளைக்கோளாறுகள் (அ) மனக் கோளாறுகள் (மானஸதோஷ), திக்குவாய் போன்ற உச்சரிப்புக் கோளாறுகள், ஞாபகமறதி (ஸ்மிருதிக்ஷய), குற்றமுள்ள விந்து (சுக்ரதோஷ), தொடர்ந்து உட்கொள்ள ஞாபகசக்தியை அதிகப் படுத்துவதுடன், உடலுக்கு வலுவையும்,
சாந்தியையும் அளித்து மூளை நரம்பு மண்டலத்தை பலமாக்குகிறது. சிறந்த உடல் தேற்றி.
குறிப்பு
சாரஸ்வதா அரிஷ்டம் -பொதுவாக -தங்க பற்பம் சேர்ந்து தான் தயாரிக்கப்பட்ட வேண்டும் ..ஆனால் மார்கெட்டில் தங்கம் சேர்க்காமலும் சாரஸ்வதா அரிஷ்டம் கிடைக்கிறது ..
குறிப்பு தங்க பஸ்பம் தங்க நிறத்திலே இருக்காது ,அடர் சிவப்பு நிறம் தான் நல்ல தங்க பஸ்பம் ..தங்கம் போல் மினு மினு மினுக்கும் ஒரு பஸ்பம் ஒன்று உள்ளது ..அதை வைத்து போலி வைத்தியர்கள் தங்க பஸ்பம் என்று ஏமாற்றி வருகிறார்கள் ..அந்த தங்கம் போல் மினு மினுக்கும் பஸ்பதிலே ஒரு இம்மியேனும் தங்கம் சேராது ஆனால் அதற்க்கு பெயர் ஸ்வர்ண வங்கம்
தங்க பற்பம் சேர்ந்த சாரஸ்வதா அரிஷ்டம் தான் அறிவை வளர்க்கும் -அறிவு திறன் கூட வைக்கும் ..
தங்க பஸ்பம் மிக மிக குறைவான அளவிலே சேருவதாலும் பக்க விளைவுகள் இல்லவே இல்லை ..தாராளமாக மூன்று வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் ,வயது மூத்தவர்களுக்கும் பயமின்றி தொடர்ந்து கொடுக்கலாம் ..
எனக்கு தெரிந்த வகையில் இது சிறந்து அறிவு பெருக்கி ..குழந்தைகளுக்கு தேவை கருதி கொடுக்கலாம் ..பொதுவாக கொடுக்கலாம் ..
கால அளவு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் -பசி ,தேக பிரகிருதி ,உடல் வன்மை ,மன வலிமை பொறுத்து அளவுகளை கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும்
டாபர் கம்பெனி சாரஸ்வதா அரிஷ்டம் தயாரிப்பில் -தங்கம் சேருவதில்லை என்று அறிகிறோம் ..
5 comments:
நல்ல பதிவு சார்.இதை போன்ற டானிக் சாதர்ணமக்கள் வாங்கும்படி விலைகள் இருக்குமா சார்.
ஐநூறு மிலி -இருநூறு ரூபாய்க்குள் தான் இருக்கும் ..
நன்றி சார்.
neenga nalla irukanunga.... romba nandri ungal sevaikku...
satish
@மச்சவல்லவன்
கருத்துரையிடுக