கர்ப்பிணிகளின் நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்ப்பிணிகளின் நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 07, 2012

மகளிர் மற்றும் கருவுற்ற தாய்க்கு மருத்துவ நூல் -ஹோமியோபதி -இ புத்தகம் -5

மகளிர் ,கருவுற்ற தாய்க்கு ஹோமியோவிலும் மிக சிறந்த மருத்துகள் உள்ளது ..
சுக பிரசவம் ஆக ,
மாதா மாதம் குழந்தை வளர்சிகள் சீராக
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் நோய்களுக்கான தீர்வுகள்
இன்னும் பல செய்திகளை அள்ளி தரும் இந்த புத்தகம் ஒரு அறிவுக்களஞ்சியம் ..

எனது மனைவி ஹோமியோ மருத்துவராக இருப்பதால் -அவர்கள் பெண்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு பெரும்பாலும் ஹோமியோ மருந்தையே தந்து குணமாக்குகிறார்கள் ...அவர்கள் எந்த மருந்தை பொதுவாக தருவார்களோ அந்த மருந்துகளே இந்த புத்தகத்தில் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது  என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்


மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்



மற்றுமொரு புத்தகம் -மிக அருமையான விளக்கத்துடன் ..எல்லோரது புத்தக அலமாரியிலும் ,மனதிலும் இருக்க வேண்டிய ஒன்று


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக்   செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய











Post Comment

புதன், நவம்பர் 30, 2011

வலிகளை போக்கும் - தான்வந்த்ர தைலம்


வலிகளை போக்கும் - தான்வந்த்ர தைலம்
 (ஸர்வரோக சிகித்ஸாரத்னம் - வாதப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            குருந்தொட்டிவேர் – பலாமூல           1.200 கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல             19.200                   “

                இவைகளைக்  கொதிக்கவைத்து 4.800 லிட்டராகக் குறுக்கி வடிகட்டவும்.

1.            சம்பா கோதுமை – யவ                15.385 கிராம்
2.            இலந்தைக்கொட்டை – பாதரி                 15.385        “ 
3.            கொள்ளு – குலத்தா                         15.385        “ 
4.            வில்வவேர் – பில்வமூல                    15.385        “ 
5.            முன்னை வேர் – அக்னிமாந்த                 15.385        “ 
6.            பெருவாகைவேர் – ஸ்யோனாக               15.385        “ 
7.            குமிழ்வேர் – காஷ்மரீ                       15.385        “ 
8.            பாதிரிவேர் – பாட்டால                     15.385        “ 
9.            ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ                    15.385        “ 
10.          மூவிலை – சாலீபர்ணீ                       15.385        “ 
11.          கண்டங்கத்திரி – கண்டகாரீ                  15.385        “ 
12.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ                 15.385        “ 
13.          நெருஞ்சில் – கோக்ஷூர                     15.385        “ 
14.          தண்ணீர் – ஜல                        3.200 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 0.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டவும்.

இனி மேற் கூறிய

1.            குருந்தொட்டிக் கஷாயம்                     4.800 லிட்டர் (6 பங்கு)
2.            சம்பா கோதுமை முதலானவைகளின் கஷாயம்0.800 லிட்டர்(1பங்கு)

இவைகளுடன்
3.            பசுவின் பால் – கோக்ஷீர                     4.800 கிராம் (6 பங்கு)
4.            நல்லெண்ணெய் – திலாதைல                 0.800       “      (1 பங்கு)

                சேர்த்து அத்துடன்

1.            மேதா – மேதா                              6.500 கிராம்
2.            மஹாமேதா – மஹாமேதா                  6.500       “
3.            தேவதாரு – தேவதாரு                      6.500       “
4.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                6.500       “
5.            காகோலீ – காகோலீ                         6.500       “
6.            க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ           6.500       “
7.            சந்தனம் – சந்தன                      6.500       “
8.            நன்னாரி – ஸாரிவா                         6.500       “
9.            கோஷ்டம் – கோஷ்ட                        6.500       “
10.          கிரந்திதகரம் – தகரம்                        6.500       “
11.          ஜீவகம் – ஜீவக                        6.500       “
12.          ரிஷபகம் – ரிஷபக                          6.500       “
13.          இந்துப்பு – ஸைந்தவலவண                  6.500       “
14.          வெந்தயம் – மேதிக                         6.500       “
15.          கோமூத்திரசிலாஜது (சுத்தி செய்தது)
                                                – கோமூத்ரசிலாஜித் (சுத்தி)  6.500       “
16.          வசம்பு – வச்சா                             6.500       “
17.          அகில்கட்டை – அகரு                       6.500       “
18.          மூக்கிரட்டை – புனர்னவ                     6.500       “
19.          அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா            6.500       “
20.          தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ        6.500       “
21.          கீரைப்பாலை – ஜீவந்தி                 6.500       “
22.          அதிமதுரம் – யஷ்டீ                         6.500       “
23.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ           6.500       “
24.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ         6.500       “
25.          நெல்லிமுள்ளி – ஆமலகீ                    6.500       “
26.          நரும்பசை -                                6.500       “
27.          சதகுப்பை – சதபுஷ்ப                        6.500       “
28.          காட்டுளுந்துவேர் – மாஷபர்ணீ               6.500       “
29.          காட்டுப்பயறுவேர் – முட்கபர்ணீ              6.500       “
30.          ஏலக்காய் – ஏலா                      6.500       “
31.          இலவங்கப்பட்டை – லவங்கத்வக்             6.500       “
32.          இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி              6.500       “

                                இவைகளை கோமூத்திர சிலாஜது நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி கோமூத்திர சிலாஜதுவைப் பாகம் வருவதற்கு சிறிது நேரம் முன்பாகவே நன்கு தண்ணீரில் கரைத்து ஊற்றி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    
 1.            இதே கல்க, கஷாயங்களைக் கொண்டு ஆவர்த்தனம் எனப்படும் பலதடவைகள் மடக்கி மடக்கிக் காய்ச்சப்படும் செய்முறைக்கு உட்படுத்தப்படும்போது இது “ஆவர்தித தான்வந்த்ர தைலம்” எனப்படும்.

                               
2.            ஸ்நேக திரவியமாக 800 மி.லி. நல்லெண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், நெய் ஆகியவற்றை சம அளவாக மொத்தம் 800 மி.லி அளவுக்கு எடுத்து இதே கல்க கஷாய சரக்குகளுடன் காய்ச்சும்போது இதற்கு “த்ரிவ்ருத் தான்வந்த்ர தைல” என்று பெயர் பெருகிறது.

                                 
3.            இதற்கு “டலாதைல” என்றொரு பெயருமுண்டு.


பயன்படுத்தும் முறை:    
  10 முதல் 60 சொட்டுகள் வரை சூடான பாலுடன் உள்ளுக்குக் கொடுக்கவும்.(தான்வந்தரம் ஆவர்த்தி -உள்ளுக்கு பயன்படுத்துவது நல்லது )

                 
நஸ்யம், பஸ்தி, தாரா, அப்யங்கம் போன்ற உள் மற்றும் வெளி உபயோகங்களுக்குப் பயன்படுகிறது.

வெளிப்ரயோகமாகவும் பயனபடுத்தலாம்


               
தீரும் நோய்கள்:  
பாரிசவாயு (பக்ஷவாத), முகவாதம் (அர்தித), முற்றுடல் வலி (சர்வாங்கவாத), நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய) போன்ற வாதநோய்கள் (வாதரோக), இளைப்பு எனும் தாதுக்ஷயம், உரஃக்ஷதம் எனும் ரத்தம் துப்புதல், யோனி நோய்கள் (யோனிரோக), பிரஸவத்திற்கு பின்வரும் நோய்கள் (சூதிகா ரோக) ஆகியன.




 தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. தான்வன்தரம் தைலம் -பொதுவாக எல்லாவிதாமான வலிகளுக்கு வெளிபிரயோகமாக பயன்படுத்த படுகிறது
  2. ஆயுர்வேதத்தின் முக்கிய விஷயமான -பஞ்சகர்மாவில் -இந்த தைலம் பெரும்பான்மையாக -வஸ்தி,பிழிச்சல் .தாரை ,அபயங்க மாசாஜ் போன்றவற்றில் பயன்படுத்தபடுகிறது
  3. முக்கியமாக வாத வலிகளை போக்கும் ,உடலுக்கு தெம்பை அளிக்கும்
  4. பலஹீனத்தை போக்கும் -உடலுக்கு ஆற்றலை தரும்
  5. கேரளாவில் இந்த தைலத்தை -பிரசவத்திற்கு பின் வயிறு பகுதியில் தேய்த்து குளிப்பார்கள் -அதனால் -பிரசவத்திற்கு பின் வயிற்றில் ஏற்படுகிற கோட்டை -அதாவது ஸ்ட்ரெச் மார்க்கை நன்றாக குறைக்கும் ,தளந்த வயிறை இறுக செய்யவும் செய்யும் என்பது உண்மை ..சிலர் பிரசவத்திற்கு முன் -கடைசி இரண்டு -மூன்று மாதங்கள் -வயிறில் மிதமாக தேய்ப்பதும் உண்டு
  6. மிக முக்கியமான மருந்துக்கு தான் தான்வன்தரம் என்று பெயர் வைப்பார்கள்
  7. இந்த மருந்திலே -கோமூத்திர சிலாஜித்தை பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும் -பெரும்பானையான மருந்து கம்பெனிகள் -கோமூத்திர சிலாஜிதுக்கு பதில் கற்பூர சிலாஜிதை பயன்படுத்துகிறார்கள் .

Post Comment

செவ்வாய், மே 24, 2011

மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்


மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்

(மாதீபல ரஸாயனம்)
                                                                                                    
தேவையான மருந்துகள்:

1.            துருஞ்சிப்பழச் சாறு – மாதுலங்க ரஸ   - 500 கிராம்
2.            எலுமிச்சம் பழச்சாறு – ஜம்பீர ரஸ - 500    “
3.            இஞ்சிச் சாறு – ஆர்த்ரக ரஸ      - 125    “
4.            இந்துப்பு – ஸைந்தவலவண       - 50       “
5.            சர்க்கரை – ஸர்க்கர               - 1250  “

செய்முறை:      

சாறு வகைகளை தனித்தனியே வடிகட்டிக் கலந்து சர்க்கரை சேர்த்துச்சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பானகபாகத்தில் இறக்கி ஆறிய பின்னர் பொடித்து சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்.


தீரும் நோய்கள்:  

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக).

தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. தயாரிப்பது மிக எளிது
  2. கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல் ,வாந்தி ,பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும் -பக்க விளைவுகள் இல்லாத மருந்து
  3. கர்ப்பிணிகள் எந்த விதமான ஆங்கில மருந்தை -போலிக் ஆசிட் மாத்திரைகள் ,கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதை பயம் இல்லாமல் சாப்பிடலாம்
  4. எனக்கு தெரிந்த பல ஆங்கில மகப்பேறு மருத்துவர்கள் -தனக்காகவும் ,தன்னுடைய மகள் ,பேத்திகளுக்காகவும் -எங்களிடம் வாங்கி உபயோகித்ததுண்டு ..(ஆனால் அவர்கள் அவர்களுடைய நோயாளிகளுக்கு ஆங்கில மருந்தை தான் வாந்தி நிற்க பயன் படுத்துகிறார்கள் )

Post Comment