சர்க்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்க்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 28, 2022

சர்க்கரை நோயை அதிகமாக்கிய ஆவாரம்பூ...

 சர்க்கரை நோயை அதிகமாக்கிய ஆவாரம்பூ...



அலட்சியமும்..
எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கும்..
அரை குறை அறிவும்..
மருந்துக்கு செலவழிப்பத்தில் கஞ்ச தனமும்..

உங்களை என்றும் நோயின் முற்றிய நிலைக்கு தள்ள வைக்கும்..
#avarampoo #avaraikudineer #tamilhealth #unavemarunthu #nalamvazha #sarkarainoi #diabetes #homeremedy #ignore #madhumeham #alshifaayush #ayurveda #siddha #siddhamedicine #ayurvedamedicine
Please share if this message is true

Post Comment

திங்கள், செப்டம்பர் 06, 2021

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய 11 உணவுகள் | Diabetic 11 food restr...



சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் சர்க்கரை நோய் வரக்கூடிய அபாயம் உள்ளவர்கள் அதாவது குடும்ப பாரம்பரியம் உள்ளவர்கள் இந்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது சர்க்கரை நோய் வர விடாமல் தடுக்கும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது நோயை நிலைநிறுத்திக் கொண்டு போகும். #நீரழிவு #Diabeticdiet #சர்க்கரைநோய் #உணவுகட்டுப்பாடு #ayurvedadiabetic #தவிர்க்க #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 26, 2021

உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா ? ஆயுர்வேத அறிவியல் சொல்வது என்ன? சிறந்த...


உங்களது நீரழிவுக்கு சிறந்த ஆயுர்வேத மருந்து வேண்டுமா ? உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? ஆயுர்வேத அறிவியல் செல்வது என்ன? சிறந்த மருந்துடன் 100 % அறியுங்கள் Know ur Diabetes with Best Ayurvedic Medicine தேற்றான் கொட்டை , சிறுகுறிஞ்சான் உள்ளடக்கிய டானிக் வடிவில் எளிதாக எடுத்து கொள்ள கூடிய மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா ? இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் எனபதை அறிய வேண்டுமா ? சிறுகன் பீளை என்ற மூலிகை இதில் உள்ளதால் இரத்த கசிவு - Bledding complication ஐ தடுக்கலாம் .. வெட்டிவேர் உள்ளமையால் பாத எரிக்கலுக்கும உதவ கூடும் .. சர்க்கரை நோயாளிகளின் கிட்னி பெயிலியர் வராமல் தடுக்க இந்த மருந்து பயன்படும் . தகுந்த ஆயுர்வேத மருத்துவரை அணுகி .. உங்கள் தேக பிரக்ருதி அறிந்து .. உங்களின் சர்க்கரை நோய் என்கிற மதுமேகம் வாத ப்ரமேஹமா, பித்த ப்ரமேஹமா, கப ப்ரமேஹமா என்று அறிந்து .. கால அளவு ,அனுபானம் தெரிந்து எடுத்து கொள்வதே மிக சிறந்தது.. சுய வைத்தியம் கூடாது #சர்க்கரைநோய் #மதுமேகம் #பிரமேகம் #நீரழிவு #knowurdiabetes #knowayurvedicmedicine #insulinresitancetamil #தேற்றான்கொட்டை #உடல்மெலிதல் #அதிக சர்க்கரை அளவு #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

ஞாயிறு, ஜூலை 04, 2021

உங்களது சர்க்கரை நோய் ஆயுர்வேதத்தின் படி எந்த வகை ? |மதுமேகம் | பிரமேகம்...



உங்களுக்கு உள்ள சர்க்கரை நோய் ஆயுர்வேதத்தின் படி எந்த வகை ? 20 வகை நீரழிவு நோயா ? சர்க்கரை நோய் வர ஆயுர்வேதம் சொல்லும் காரணம் என்ன ? நீரழிவில் இருந்து உங்களை எப்படி பாதுகாப்பது ? |மதுமேகம் | பிரமேகம் | நீரழிவு காரணம் & தீர்வு எளிமையான தீர்வை தெரிந்து கொள்ள வேண்டுமா ? #நீரழிவு #சர்க்கரைநோய்க்குஆயுர்வேதம் #மதுமேகம் #பிரமேகம் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #prmeha #madumeham #diabetesinayurveda #ayurvedicapproachfordiabetes

Post Comment

சனி, மே 06, 2017

நீரழிவு நோய்க்கான மெட்பார்மின் மருந்து மூலிகையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது

நீரழிவு நோய்க்கான மெட்பார்மின் மருந்து மூலிகையில் இருந்தே தயாரிக்கப்படுகிறது

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்தெல்லாம் கட்டுபடுத்தாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர் எழுதி தரும் மருந்து மெட்பார்மின் என்ற மருந்தின் மூலம் ஒரு இயற்கை தாவரமாகும்.


GALEGA OFFICINALIS என்ற மூலிகை மருத்துவ தாவரத்தில் இருந்துதான் டைப் இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கு பயன்படுகிற இந்த மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்து தயாரிக்கபடுகிறது.


இந்த மூலிகை தாவரத்திற்கு Goat’s rue, French iliac, Italian fitch or professor-weed என்ற வேறு பெயர்களும் உண்டு இந்த தாவரம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது, ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது.


இந்த மெட்பார்மின் metformin – மருந்து கடைகளில் Glucophage, Glumetza, Riomet என்ற எண்ணற்ற பெயர்களில் கிடைக்கிறது.


இந்த தகவலை மக்களுக்கு எடுத்து கூறிய சித்த மருத்துவ களஞ்சியம் சித்த மருத்துவர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.


சர்க்கரை நோயும் –மக்களின் மன நிலையும்

ஆவாரம் பூ சர்க்கரையை கட்டுபடுத்தும் என்று ஆவாரையை பொடியை மட்டும் எடுத்து கொள்ளும் மக்களை நினைத்தால் –அரை குறை அறிவு எவ்வளவு ஆபத்து என்று தெரிந்து கொள்ளுங்கள் –ஆவாரை குடிநீர் என்ற சிறந்த சித்த மருத்துவத்தில் கிடைக்கும் குடிநீரில் ஆவாரம் பூ என்பது ஒரு அங்கமே ..தனி ஆவாரம்பூ எல்லோருக்கும் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை .


வெண்டக்காயை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபடுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை –மூலிகை கதைகள் பல ..


சர்க்கரை நோயை குணப்படுத்த ஒட்டகப்பால் குடிக்க வடக்கே  சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க்    என்ற இடத்திற்கு சென்று ஏமாந்து வந்தவர்களில் அறுபது சதம் நமது தமிழர்கள் –எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் மனிதர்களை வழி கெடுக்கும் பல கதைகள் –இங்கே பல உண்டு .

எல்லா சர்க்கரை நோய் உள்ள மனிதருக்கும் ஒரே மருந்து என்பது இருக்க முடியாது ..நோயாளியின்  உடல் வாகு –தேக பிரகிருதி –நோயின் வாத பித்த கப தன்மை –காலம் ,இன்னும் பல பல காரணிகளை கொண்டு ஆயுர்வேத சித்த மருந்துகள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.


எனவே சர்க்கரை கொல்லி என்ற லேபிளின் ஒரு சொல்லில் கவர்ந்து கடைகளில் உள்ள கண்ட கண்ட பொடிகளை வாங்கி சர்க்கரை நோய் கட்டுப்படும் என்று ஏமாறாதீர்கள்.


அக்குபஞ்சர் சிகிச்சை எடுக்கிறேன் என்று சர்க்கரை நோய்க்கான ஆங்கில மருந்தை உடனடியாக முற்றிலும் நிறுத்தி விடாதீர்கள்.


தக்க மருத்துவரை அணுகி –உங்களுக்கு எந்த ஆயுர்வேத ,சித்த ,யுனானி ,ஹோமியோபதி மருந்து சரியாக பொருந்தும் என்பதை உணர்ந்து –அறிவியில் பூர்வமாக அணுகி –சர்க்கரை நோயைக்கு தக்க சிகிச்சை பெறுங்கள் .

நீரழிவு நோய்க்கு தக்க சிகிச்சை ஆயுஷ் மருத்துவத்தில் அருமையாக உள்ளது. அறிவியல் பூர்வ அணுகு முறை –பாரம்பரிய சிகிச்சை கொண்ட ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000( ஹெர்ப்ஸ் ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )

Post Comment

ஞாயிறு, மார்ச் 09, 2014

சர்க்கரை நோய்க்கு -மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்தும் -மூலிகை செடியில் இருந்து உருவானதே ..

சர்க்கரை நோய்க்கு மூலிகை  மருந்தெல்லாம் கட்டுபடுத்தாது  என்று சொல்லும் ஆங்கில மருத்துவர் எழுதி தரும் மருந்து மெட்பார்மின் என்ற மருந்தின் மூலம் ஒரு இயற்கை  தாவரமாகும் ..

GALEGA OFFICINALIS என்ற மூலிகை மருத்துவ தாவரத்தில் இருந்து தான் டைப் இரண்டாம வகை சர்க்கரை நோய்க்கு பயன்படுகிற இந்த மெட்பார்மின் என்ற ஆங்கில மருந்து தயாரிக்கபடுகிறது .

இந்த மூலிகை தாவரத்திற்கு  Goat's rue, French iliac, Italian fitch  or professor-weed  என்ற வேறு பெயர்களும் உண்டு -இந்த தாவரம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது ,ஐரோப்பா ,மேற்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது ..


இந்த மெட்பார்மின்  metformin - மருந்து கடைகளில்  Glucophage,Glumetza,Riomet என்ற எண்ணற்ற பெயர்களில் கிடைக்கிறது ..

இந்த தகவலை மக்களுக்கு எடுத்து கூறிய  சித்த மருத்தவ களஞ்சியம் சித்த மருத்துவர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி ..

Post Comment

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

சர்க்கரை என்னும் இனிப்பு -வெள்ளை விஷம் ..

சர்க்கரை இல்லாமல் இப்போது எந்த உணவுமே இல்லை ...சர்க்கரை சேராமல் பல மருந்துகளில் சிரப்புகள் செய்ய முடியாது ..மருந்துகள் கூட இல்லை என்ற நிலை உள்ளது ...
இந்த சர்க்கரை உடலுக்கு நல்லது தானா ?
வெள்ளை சர்க்கரை இந்த அளவுக்கு உடலுக்கு கேடு ?...

சரி இந்த சர்க்கரை எப்படி தயாரிக்கபடுகிறது ?...


கரும்பில் இருந்து பிழியப்பட்ட சாறுடன் எழு நிலைகளில் பல்வேறு வேதி பொருட்கள் ,அமிலங்கள் பயன்படுத்தப்பட்டு பின்னரே சர்க்கரை உருவாக்கபடுகிறது ...

அம்மோனியா  பை புளுயிடு பாக்டீரியா , பாஸ்போரிக் அமிலம் ,சுண்ணாம்பு நீர் , சல்பர் டை ஆக்சைட் ,பாலி எலக்ட்ரோலைட் ,காஸ்டிக் சோடா ,சலவை சோடா ,சோடியம் ஹைட்ரோ சல்பேட் ..இவ்வாறு எழு நிலைகளில் கரம்பு சாறுடன் வினி புரிகின்ற இந்த நச்சு பொருகள் யாவும் இறுதியில் கழிவாகி  போய் விடுமா ?...என்றால் இல்லவே இல்லை ...

சல்பர் டை ஆக்சைட் ஆர்சனிக் என்று பொருளும் சர்க்கரையுடன் தங்கி விடுகிறது ..அது மட்டுமல்ல வெள்ளை ஆக்க பயன்படுத்தபடும் ப்ளீசிங் வேளையில் சாக்பவுடர், கார்போனிக் வாயு, சல்பர் டையாக்சைட், ஸ்ட்ரோடையம், ஹைட்ராக் சைட், சல்ஃப்யூரிக் ஆசிட் போன்ற பல விதமான ரசாயன பொருட்களின் மீது சர்க்கரை திரவம் உரசிக் கொண்டு போகும் போதுதான், அது ‘பளிச்’சென வெண்மையாகிறது





பாஸ்போரிக் அமிலத்தின் பக்க விளைவு
பல்லின் எனாமல் அரித்தது விடும்'
எலும்பு சீக்கிரம் தேய்வு அடையும் ..
சீக்கிரம் முகத்தில் முதுமை வரும் ...தோல் சுருங்கும்
காஸ்டிக் சோடா பக்க விளைவு
துணி துவைக்கவும் பயன்படும் இந்த வேதிப்பொருள் ..கெமிக்கல் பர்ன் என்னும் எரிச்சலை கொடுக்கும் ...

 செரிமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வயிறில் புண்ணை அல்சரை ,ஜீரண சக்தியை கெடுக்கும் ..வாய்வை உண்டு செய்யும்
 மேலும் பொதுவாக வெள்ளையாக்க பயன்படும் வேதிபோருட்களும் ,சர்க்கரையில் பொதுவாக சேரும் வேதிபோருட்களும் ...


 செரிமான நொதி பொருட்களின் தன்மையை மாற்றி வளர் சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் .
இதனால் செரியாமை ஏற்படும் ..பசி மந்தபடும்

வயிறு பானை போல் வீங்கும்
உடல் தேவைக்கு அதிகமாக குண்டாகும்..
அடிக்கடி சர்க்கரை அளவில் மாறுபாடு உண்டாகி மயக்கம் உண்டாகும்..
வளர் சிதை மாற்றம் உண்டாகும் ..ஹார்மோன் கோளாறுகள் உண்டாகும் ..தைராய்ட் நோய் உண்டாகும் , குழந்தை இன்மைக்கும் காரணமாகும் ,சர்க்கரை நோய் வரும் ..சத்துக்களை உறிஞ்சும் குடல் உறிஞ்சுகள் செயல் இழக்கும் ..மொத்தத்தில் நடை பிணமாக வாழ நேரும்



பல்வேறு  ஆராய்ச்சியாளர்கள் ..பல்வேறு ஆராய்ச்சியின் முடிவாக ..தெளிவாக எடுத்து கூறும் உண்மை இது ...இதை பற்றி ஆராய்ச்சிகள் பற்றி தேவை விவரங்கள் அறிய விரும்புவோர் ..என்னை தொடர்பு கொள்ளலாம் ..இ மெயிலில் தகவல்கள் அனுப்பி தரப்படும் ...

நாம் செய்யவேண்டியவை ....
  1. குழந்தைகளுக்கு சாக்லேட் என்ற பெயரில் இந்த விஷத்தையும் வாங்கி தர வேண்டாம் ..
  2. அரு சுவை உணவில் மற்ற சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...
  3. வெள்ளை சர்க்கரைக்கு பதில் ..பனை வெல்லம் ,கருப்பட்டி ,கரும்பு வெல்லம் ,பனங்கற்கண்டு பயன்படுத்துவது நல்லது ..
  4. தேநீரால் நாம் வெள்ளையனுக்கு அடிமையானோம் ...வெள்ளை சர்க்கரையால் இப்போது வெள்ளையன் மருத்துவத்துக்கு அடிமையாவோம் என்பதை மனதில் கொண்டு ...நோயில்லாமல் காப்பதே இந்திய மருத்துவத்தின் கடமை என்பதை சொல்லும் விதமாக ..சர்க்கரை தவிர் ...நோயின்றி வாழ் என்று சொல்வோம் ..
  5. நான் எனது வீட்டில் இப்போது சுத்தமான தேனை இனிப்புக்காக சேர்க்கிறோம் என்பதை தெரிவித்தவனாக ...

Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

நீரழிவு என்னும் சர்க்கரை நோயை ஓட விரட்டும் யோகாசனங்கள்


அர்த  மத்சேயேந்த்திற  ஆசனம்
மயூராசனம்





புஜங்காசனம்


மத்சியாசனம்



தனுராசனம்





யோகா முத்திரை ,மகா முத்திரை







மன்டூகாசானம்






ஜானு சிரசாசனம்
பவன முக்தாசனம்

சவாசனம் 





Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

நீரழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு அக்குபஞ்சர் புள்ளிகள்

நீரழிவு என்னும் சர்க்கரை நோயை சிறந்த முறையில் கட்டுக்குள் வைக்கும் அக்குபஞ்சர் புள்ளிகள் ...

நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பின் பலஹீனம் , அதிக சக்தி என்பதை தெரிந்து கொண்டு சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்வது  முக்கியம் ...

ஆனாலும் கீழே கண்ட புள்ளிகள் நல்ல பலனை தரும்

மூன்று யின் மேரிடியன்களும் சந்திக்கும் ஸ்ப்லீன் -மண்ணீரல் சக்தி நாளத்தின் ஆறாவது புள்ளி ..உடனடியாக சர்க்கரை அளவை குறைக்கும்
spleen -6 






மூன்று யாங் மெரிடியன் புள்ளிகளும் சந்திக்கும் ..மூவெப்ப கட்டுப்பாட்டு உறுப்பு புள்ளி 8 -triple warmer 8
 




நாளமில்லா சுரப்பிகளில் சக்தி ஓட்டத்தை சரி செய்யும் ..(endocrine points)

gall bladder -GB -21 (பித்தப்பை சக்தி நாளம் 21)


large intestine LI -18 (பெருங்குடல் சக்தி நாளம் -18)


Ren -15(ரென் -15)

large intestine LI -11 (பெருங்குடல் சக்தி நாளம் -11)


பிட்யூட்டரி புள்ளிகளான கீழ் கண்ட புள்ளிகள் Pitutary points
triple warmer -3 ( மூவெப்ப கட்டுப்பாட்டு -3)

 
Ren 15 (ரென் -15)

large intestine Li 20 (பெருங்குடல் சக்தி நாளம்-20)

Small intestine Si 15 (சிறுகுடல் சக்தி நாளம் -15)

 triple warmer -22 ( மூவெப்ப கட்டுப்பாட்டு நாளம் -22)


வளர் சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைக்கும் கீழ் கண்ட புள்ளிகள்
 Slpeen -4மண்ணீரல் சக்தி நாளத்தின் நான்காவது புள்ளி
 
Liver 8கல்லீரல் சக்தி நாளத்தின் எட்டாவது புள்ளி

Ren -12(ரென் -12)

மேலே கண்ட புள்ளிகளை சரியாக தூண்ட சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் தரும் என்பது திண்ணம் ..


நாளை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க யோகாசனங்கள்


 



 




Post Comment