இதய அடைப்பு நீங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதய அடைப்பு நீங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 06, 2021

உங்கள் இதயத்தை பற்றி நீங்கள் அறியாதது | 2000 years of Ayurvedic point o...


உங்கள் இதயத்தை பற்றி நீங்கள் அறியாதது  

2000 years of Ayurvedic point of view of  your Heart

ஆயுர்வேதம் சொல்லும் இதயம் .. 

இந்த ரகசியம்  நீங்கள் தெரிந்து கொள்வது உங்கள் உயிர் காக்கும் 

இது வரை நீங்கள் யோசிக்காத இதயம் காக்கும் முறை - 


ஓஜஸ் என்றால் என்ன ?

நாடிகளின் வகை என்ன ?

ஸ்ரோதஸ் என்ற chennels of Body என்பது என்ன ?

இதய நோய்க்கு கொழுப்பை தவிர என்ன காரணம் 

ஆயுர்வேதம் சொல்லும் இதயம் காக்கும் மருந்துகள் என்ன ?


2000 years of Ayurvedic point of view of  your Heart 


Get online consultation with our Ayurveda Drs of Al Shifa Ayush hospitals 8108108205



#இதயம் #knowyourheart #ojus #idapingalnadi #hrudyam #doshas #sadakapittam #vyanavatha #pranavatha #tridosha #sadakapitta #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

புதன், ஜூன் 02, 2021

ஆன்டாசிட், இன்ஹேலர், மல்டி விட்டமினுக்கு அவசியமே இல்லாத ஒரே ஆயுர்வேத மரு...



இதயத்தை பலமாக்கி சுவாச மண்டல நோய்களில் அற்புத ஆயுர்வேத மருந்து இந்த மருந்தை நீங்கள் பயன் படுத்தினால் உங்களுக்கு .. ஆன்டாசிட் தேவை படாது ..இருமல் மூச்சு வாங்குதலுக்கு இன்ஹேலர் அவசியம் இருக்காது .. சத்து மருந்துக்கும் மல்டி விட்டமின் மருந்துக்குமே அவசியம் இருக்காது .. இதயம் வலு பெறும் .. நுரையீரலின் எல்லா நோய்களும் போகும் வயிறு புண் ஆறும் .. வாயுக்கள் ஒழுங்குபெறும் உடலை வலுப்படுத்தும் இதய படபடப்பு நீங்கும் .. நடந்தால் மேல் மூச்சு வாங்குதல் சரியாகும் .. உடல் வலி தீரும் .. உடலின் வாத பித்த நோய்கள் சம நிலை பெறும் .. தொப்புளுக்கு மேல் உள்ள எல்லா நோய்களை குணபடுத்த உதவும் -விதார்யாதி கஷாயம் -ஆயுர்வேதம் വിദാര്യാദി കഷായം Hrudya (good for the heart) Bhrumhana (nourishes the tissues) Vata Pittaha (good in the vata and pitta predominant conditions) Shosha (wasting diseases) Gulma (abdominal tumors) Angamarda (body aches) Urdhwa Shwasa (variety of breathing difficulty) Kasa hara (cures cough) Uses of Vidaryadi Kashayam inflammatory conditions, bronchitis, asthma, cold and cough. It is a good cardiac tonic, after delivery, #hyperthyroidism all vata and Pitta diseases, #VidaryadiKashayam improves body weight rheumatic problems, digestive disorders, asthma and body pain, cure tuberculosis, tumors of stomach, weakness This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine .Thank you for watching this Ayurvedic and Ayush youtube channel. ---------Contact information with whatsapp number ------------- Dr Mohamad Saleem MD Ayurveda is working as Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @ Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell 9042225333 Chennai – Al shifa Ayush hospital cell 9043336000 Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999 Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888 Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577 --------------------------------------------Our Social medida connetion---------------------- Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Instagram link https://instagram.com/drsaleemayush?i... Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Twitter link https://twitter.com/AyushDrsaleem Facebook Group Link https://www.facebook.com/groups/22238... linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/ youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ----------------------------------------------------------------------------------------------------------------------- #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அலஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush #விதார்யாதிகஷாயம் #கஷாயம் #மேல்மூச்சு #இருமல் #இதயம்வலுபெற #உடலைதேற்ற #വിദാര്യാദികഷായം #VidaryadiKashaya

Post Comment

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல - லீலாவிலாஸ ரஸ -LEELA VILASA RASA


எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல -
லீலாவிலாஸ ரஸ   -LEELA VILASA RASA                     
(Ref-பைஷஜ்யரத்னாவளி - அம்லபித்தாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக       10           “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
3.            தாமிரபற்பம் – தாம்ர பஸ்ம            10 கிராம்
4.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம         10           “
5.            அயபற்பம் – லோஹ பஸ்ம            10           “

இவைகளையும் சேர்த்தரைத்து,

6.            நெல்லிக்காய்ச்சாறு – ஆமலகீ ஸ்வரஸ  போதுமான அளவு
7.            தான்றிக்காய் கஷாயம் – பிபீதகீ கஷாய போதுமான அளவு கொண்டு மூன்று
                                                                               
நாட்கள் அரைத்துப் பின்னர்     
                                                                                         
8.            கரிசலாங்கண்ணி சாறு – ப்ருங்கராஜஸ்வரஸ கொண்டு ஒரு முறை பாவனை செய்து உலர்த்திப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. மாத்திரைகள் ஆக்கவும்.

அளவு:           

1 முதல் 4 மாத்திரைகள்.

தீரும் நோய்கள்:
 
வயிற்றில் புளிப்பு நீர் (அமிலம் அதிகமாக சுரத்தல் (அம்ல பித்தம்), வாந்தி (சர்தி), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாக).




தெரிந்து கொள்ள வேண்டியவை ..

1. அதிகமான வாய் புளிப்பு -புளிப்பு சுவைக்கு இந்த மருந்தை -காமதுக  ரச மற்றும் பாஸ்கர லவன சூரணத்துடன் கலந்து தந்து நல்ல பலனை பெறலாம் ..

2.கரிசாலை சாறு உள்ளதால் நிச்சயமாக எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது ..

3.வயிற்று  புண்ணை  ஏற்படுத்துவதாக கருதப்படும் எச் .பைலோரை என்னும் பாக்டீரியாவை அழிக்க  இந்த மருந்துக்கு சக்தி உள்ளது என்பது நிச்சயம் ..

4.நெஞ்சு வலி போல் தோன்றும் வயிறு புண்ணுக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும்

Post Comment

திங்கள், ஜனவரி 14, 2013

தச வாயுக்களை ஒழுங்கு செய்யும் -வாயு குளிகை என்னும் கஸ்தூர்யாதி குடிகா -Kasthuryadhi Gutika


தச வாயுக்களை ஒழுங்கு செய்யும் -வாயு குளிகை என்னும் கஸ்தூர்யாதி குடிகா -Kasthuryadhi Gutika                                                                                    
(ref-ஸஹஸ்ர யோகம் - குடிகாப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            நிலவேம்பு – பூநிம்ப                              10 கிராம்
2.            சித்தரத்தை – ராஸ்னா                            10           “
3.            ஜாதிக்காய் – ஜாதீபல                             10           “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 10           “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 10           “
7.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்                  10           “
8.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர                   10           “
9.            ஏலக்காய் (தோல் நீக்கிய அரிசி) – ஏலா பீஜ        10           “
10.          சுத்தி செய்த இருவி – ஷோதித ஹிர்வி            10           “
11.          சீரகம் – ஜீரக                                     10           “
12.          கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                      10           “
13.          ஓமம் – அஜமோதா                               10           “
14.          அக்ரகாரம் – அக்ரகரபா                            10           “
15.          சதகுப்பை – ஸதபுஷ்ப                            10           “
16.          அதிமதுரம் – யஷ்டீ                              10           “
17.          இலவங்கம் – லவங்க                             10           “
18.          குருவேர் – ஹ்ரிவேர                             10           “
19.          கண்டுபாரங்கி – பார்ங்கீ                          10           “
20.          பசுபாசி – கானஜாதீபத்ரீ                         10           “
21.          சந்தனம் – சந்தன                                10           “
22.          வசம்பு – வச்சா                                  10           “
23.          வால்மிளகு – கங்கோல                           10           “
24.          சுக்கு – சுந்தீ                                     10           “
25.          மிளகு – மரீச்ச                                   10           “
26.          திப்பிலி – பிப்பலீ                                 10           “
27.          ஆசாளி விதை – ஆசாளி பீஜ                      10           “

இவைகளை நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்தில் இட்டு அத்துடன் தனித்தனியே பொடித்த
1.            ஸர்க்ஷஜாரம் – ஸர்ஜக்ஷார                    10 கிராம்
2.            யவக்ஷாரம் – யவக்ஷார                        10           “
3.            காவிக்கல் – கைரிக                            10           “
4.            நரும்பசை                                     10           “
5.            பொரித்த வெங்காரம் – டங்கண பஸ்ம           10           “
6.            அஞ்சனக்கல் – அஞ்ஜன                          10           “
7.            சுத்தி செய்த மனோசிலை – ஷோதித மனசிலா     10           “
8.            சுத்தி செய்த லிங்கம் – ஷோதித ஹிங்குள         10           “

தனியே சிறிது கரிசாலைச் சாறு விட்டரைத்து விழுதாக்கிய

9.            சுத்தி செய்த நாபி – ஷோதித வத்ஸநாபி     10 கிராம்
10.          காந்தபற்பம் – காந்த பஸ்ம                  10           “

ஆகியவற்றைச் சேர்த்துக் கரிசாலைச்சாறு (ப்ருங்கராஜ ஸ்வரஸ) 
கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் அத்துடன்



1.     பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் – கற்பூர              10 கிராம்
2.     ரோமம் நீக்கிச் சிறிது அரைத்த கஸ்தூரி – கஸ்தூரி         10           “
3.      இளஞ்சூட்டில் உருக்கி வடிகட்டிய புனுகு – கந்தமார்ஜர வீர்ய  10           “

இவைகளைத் தனியே அரைத்துச் சேர்த்து மீண்டும் ஒன்றுபட நன்கு அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்\

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இஞ்சிச்சாறு, தேன் அல்லது ஜீரகக் கஷாயத்துடன் 2 முதல் 4 வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 


இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), இதய இயக்கக் குறைபாட்டாலேற்படும் மூச்சுத் திணறல் போன்ற மூச்சு நோய்கள், காய்ச்சல் (ஜ்வர), வாதகப சுரம் (வாத கப ஜ்வர), வாத வைகுன்ய போன்ற வாயு உபத்திரவங்கள், பலவீனம். இதயத்தைத் தூண்டவல்லது.

                
குழந்தைகளுக்கு உண்டாகும் மேற்கூறிய வியாதிகளில் இது விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது.

குறிப்பு:   

1.          இதற்கு “ வாயுகுளிகா” என்று மற்றொரு பெயரும் உண்டு.
2.            தான்வந்தரவடியைப் போன்று இதை உபயோகிக்கலாம்.
3.            ஜீரகக் கஷாயத்தைக் கொண்டு அரைத்து இதைச் சிலர் தயாரிக்கின்றனர்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இப்போது கிடைக்கும் கஸ்தூரி குளிகையில் நூற்றுக்கு நூறு கஸ்தூரி இருப்பதில்லை என்பது உண்மை 
  2. ஒரு கிராம் கஸ்தூரியின் உண்மை விலை ஒரு லட்சத்திற்கும் மேல் ..பலர் போலிகளையே  உண்மை என்று நம்பி வாங்கி ஏமாறுகிறார்கள் ..உண்மையான கஸ்தூரி வாசனை கொண்டும் கண்டு பிடிக்க முடியாது -கலப்படம் -பொய் நிறைய உண்டு கஸ்தூரியை பொறுத்தவரை ..
  3. கஸ்தூரி மாத்திரையில் கஸ்தூரி இருக்க முடியவே முடியாது ..
  4. உண்மையான கஸ்தூரி சேர்ந்த கஸ்தூரி மாத்திரை இதய அடைப்பை கூட உறுதியாக நீக்கும் 
  5. பல உண்மைகளை எழுதும் போது  மனது வலிக்கிறது ..என்ன செய்ய ..எனது கட்டுரைகளை படித்து திடீர் வைத்தியர்கள் இன்னமும் பல பொய் சொல்ல நானும் காரணம் ஆவேனா ? (  எனது பழைய கட்டுரை தான்வன்தரம் குளிகை புனுகு சேர்ப்பதில்லை என்று யதார்த்தம் எழுதினேன் ..எனது கட்டுரை மூலம்     தெரிந்து கொண்டு புனுகு சேர்ந்த தான்வன்தரம் குளிகை என்று ஒரு மாத்திரையை ரூபாய நானூறு ரூபாய்க்கு  விற்றதாக அதாரபூர்வமாக ஒரு நண்பர் கூற கேட்டு அதிர்ச்சி  அடைந்தேன் )-- போல் உண்மையான கஸ்தூரி சேர்த்தது என்று எவ்வளவு ஏமாற்ற போகிறார்களோ   தெரியவில்லையே !!!
  6. கஸ்தூரி குளிகையில் கஸ்தூரி சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் கூட போதுமானது தான் 
  7. இந்த வாயு குளிகை -தச வாயுக்களை ஒழுங்கு செய்யும் 
  8. சர்வ நோய்க்கும் நிவாரணம் தரும் 
  9. குழந்தைகளின் நோய்களில் சிறந்த நிவாரணம் தருகிறது ..
  10. கஸ்தூரி சேர்க்காத கஸ்தூரி மாத்திரை வேலை நூற்றுக்கு பத்து சதவீதம் 
      கூட வேலை செய்து செய்யாது ..அந்த பத்து சத வீத வேலை கூட நம்மை பிரமிக்க வைக்கிறது எனபது தான் உண்மை 




Post Comment

செவ்வாய், அக்டோபர் 02, 2012

சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-Dhanwantaram Gutika


வாயுக்களை ஒழுங்கு செய்யும் சர்வ ரோக நிவாரணி -தான்வந்தரம் குடிகா-
தான்வந்த்ர குடிகா-Dhanwantaram Gutika
(ref-ஸர்வரோக சிகித்ஸாரத்னம் – சுவாஸ, ஹித்மாப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            ஏலக்காய் (தோல் நீக்கிய அரிசி) – ஏல               10 கிராம்
2.            சுக்கு – சுந்தீ                                         10           “
3.            கடுக்காய் (தோல் நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்      10           “
4.            ஜாதிக்காய் – ஜாதீபல                               10           “
5.            முள்ளுக்கத்திரி வேர் – ப்ருஹத்தீ                    10           “
6.            ஆசாளி விதை – அதஸீபீஜ                         10           “
7.            சீரகம் – ஜீரக                                      10           “
8.            வால் மிளகு – கங்கோல                           10           “
9.            நிலவேம்பு – பூநிம்ப                               10           “
10.          ருத்ராக்ஷம் – ருத்ராக்ஷ                           10           “
11.          தேவதாரு – தேவதாரு                            10           “

இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம்

12.          கண்டி வெண்ணெய் (பொடித்த்து) – கண்டிவெண்ண
இவற்றைக் கல்வத்திலிட்டு ஜீரகக் கஷாயம் விட்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில்

13.          பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் –     கற்பூர       10 கிராம்
14.          இளஞ்சூட்டில் உருக்கி வடிக்கட்டிய  
புனுகு – கந்தமார்ஜர வீர்ய                                  10           “


                இவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர வைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    

 கண்டி வெண்ணெய்யைப்பற்றி பலவிதமான அபிப்பிராய பேதங்கள் நிலவுவதால் ருமிமஸ்தகி என்ற பூனைக்கண் குங்கிலியம் சேர்ப்பது சம்பிரதாயம்
                 
அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது ஜீரக கஷாயத்துடன் இரண்டு முதல் நான்கு வேளைகள். சிலர் பலாச பத்ரம், பூநிம்பம், ஜீரக கஷாயத்துடன் தருவர்.

தீரும் நோய்கள்:  




இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), வாந்தி (சர்தி), மார்வலி (ஹ்ருச் சூல), காய்ச்சல் (ஜ்வர), இருதய பலவீனம் (ஹ்ருத்தௌர்பல்ய), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக) வாயு உபத்திரவங்கள், இதயத்திற்கு வலுவூட்டக் கூடியது
.
                குழந்தைகளுக்கு உண்டாகும், மேற்கூறிய வியாதிகளில் இது விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வர பிரஸவம் எளிதாகும்.


தெரிந்து கொள்ள வேண்டியது ..
  1. எனது கிளினிக்கில் அதிகம் நான் உபயோகிக்கும் மருந்துகளில் மிக மிக முக்கியமானது இந்த மருந்து என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் ..
  2. ஆயுர்வேதத்தில் பொதுவாக தான்வந்தரம் என்று தன்வந்தரியின் பெயர் தாங்கும் அனைத்து மருந்துகளும் மிக மிக முக்கியமானவை ..
  3. உடம்பில் உள்ள தச வாயுக்களில் (ஆயுர்வேத சாஸ்திரங்கள் பஞ்ச வாயுக்கள் என்று சொல்கின்றன ) எந்த தடையை நீக்க வேண்டுமானாலும் ,ஒழுங்கு படுத்த வேண்டுமானாலும் இந்த மருந்தை மிக மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் ..
  4. இந்த மருந்து ஒரு அற்புத மருந்து ...
  5. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மருந்து ...
  6. ஹார்ட் அட்டாக்கின் போது பயன்படுத்தப்படும் ஆங்கில மருத்துவத்தில் நாக்குக்கு அடியில் வைக்கப்படும் சார்பிட்ரெட் ,நைட்ரோ கிளிசரின் -போன்ற மருந்துக்கு இணையாக இதயத்தில் ஏற்படும் வலியை நீக்கும் ..இதயத்தை வலுவாக்கும் ..இதயத்திற்குள் இருக்கும் வாயுவை ஒழுங்கு செய்யும் (இதய அடைப்பை நீக்க துணை மருந்தாக வேலை செய்யும் )
  7. சாதாரண வயிறு உப்புசம் ,செரியாமை ..வயிறு ஏற்றம் முதல் அனைத்து ஜீரண மண்டல நோயை நீக்கும் ..குணப்படுத்தும்.
  8. புனுகு சேர்க்க வில்லை என்றால் இந்த மருந்து வேலை செய்யவே செய்யாது ...பல கம்பெனிகள் புனுகு என்ற மருந்தை சேர்ப்பதில்லை ...புனுகில் போலியானதை சேர்த்தாலும் இந்த மருந்து வேலை செய்யாது ...
  9. சுவாசம் -இளைப்பு ..மூச்சு வாங்குதல் ..நடந்தால் மூச்சு வாங்குதல் போன்றவற்றில் நல்ல பலன் அளிக்கும் ..
  10. எழு மாதத்திற்கு பின் தொடந்து சாப்பிட சுக பிரசவம் ஆகும் ..
  11. இரண்டு மாத்திரைகளை -காலை மாலை ஆகாரத்திற்கு முன் வெந்நீரில் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் ..
  12. தினமும் எல்லோரும் பயன்படுத்தலாம் ..

Post Comment