திங்கள், ஜனவரி 14, 2013

தச வாயுக்களை ஒழுங்கு செய்யும் -வாயு குளிகை என்னும் கஸ்தூர்யாதி குடிகா -Kasthuryadhi Gutika


தச வாயுக்களை ஒழுங்கு செய்யும் -வாயு குளிகை என்னும் கஸ்தூர்யாதி குடிகா -Kasthuryadhi Gutika                                                                                    
(ref-ஸஹஸ்ர யோகம் - குடிகாப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            நிலவேம்பு பூநிம்ப                              10 கிராம்
2.            சித்தரத்தை ராஸ்னா                            10           “
3.            ஜாதிக்காய் ஜாதீபல                             10           “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 10           “
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10           “
7.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  10           “
8.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர                   10           “
9.            ஏலக்காய் (தோல் நீக்கிய அரிசி) ஏலா பீஜ        10           “
10.          சுத்தி செய்த இருவி ஷோதித ஹிர்வி            10           “
11.          சீரகம் ஜீரக                                     10           “
12.          கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக                      10           “
13.          ஓமம் அஜமோதா                               10           “
14.          அக்ரகாரம் அக்ரகரபா                            10           “
15.          சதகுப்பை ஸதபுஷ்ப                            10           “
16.          அதிமதுரம் யஷ்டீ                              10           “
17.          இலவங்கம் லவங்க                             10           “
18.          குருவேர் ஹ்ரிவேர                             10           “
19.          கண்டுபாரங்கி பார்ங்கீ                          10           “
20.          பசுபாசி கானஜாதீபத்ரீ                         10           “
21.          சந்தனம் சந்தன                                10           “
22.          வசம்பு வச்சா                                  10           “
23.          வால்மிளகு கங்கோல                           10           “
24.          சுக்கு சுந்தீ                                     10           “
25.          மிளகு மரீச்ச                                   10           “
26.          திப்பிலி பிப்பலீ                                 10           “
27.          ஆசாளி விதை ஆசாளி பீஜ                      10           “

இவைகளை நன்கு பொடித்துச் சலித்துக் கல்வத்தில் இட்டு அத்துடன் தனித்தனியே பொடித்த
1.            ஸர்க்ஷஜாரம் ஸர்ஜக்ஷார                    10 கிராம்
2.            யவக்ஷாரம் யவக்ஷார                        10           “
3.            காவிக்கல் கைரிக                            10           “
4.            நரும்பசை                                     10           “
5.            பொரித்த வெங்காரம் டங்கண பஸ்ம           10           “
6.            அஞ்சனக்கல் அஞ்ஜன                          10           “
7.            சுத்தி செய்த மனோசிலை ஷோதித மனசிலா     10           “
8.            சுத்தி செய்த லிங்கம் ஷோதித ஹிங்குள         10           “

தனியே சிறிது கரிசாலைச் சாறு விட்டரைத்து விழுதாக்கிய

9.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாபி     10 கிராம்
10.          காந்தபற்பம் காந்த பஸ்ம                  10           “

ஆகியவற்றைச் சேர்த்துக் கரிசாலைச்சாறு (ப்ருங்கராஜ ஸ்வரஸ) 
கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் அத்துடன்



1.     பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் கற்பூர              10 கிராம்
2.     ரோமம் நீக்கிச் சிறிது அரைத்த கஸ்தூரி கஸ்தூரி         10           “
3.      இளஞ்சூட்டில் உருக்கி வடிகட்டிய புனுகு கந்தமார்ஜர வீர்ய  10           “

இவைகளைத் தனியே அரைத்துச் சேர்த்து மீண்டும் ஒன்றுபட நன்கு அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்\

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இஞ்சிச்சாறு, தேன் அல்லது ஜீரகக் கஷாயத்துடன் 2 முதல் 4 வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 


இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), இதய இயக்கக் குறைபாட்டாலேற்படும் மூச்சுத் திணறல் போன்ற மூச்சு நோய்கள், காய்ச்சல் (ஜ்வர), வாதகப சுரம் (வாத கப ஜ்வர), வாத வைகுன்ய போன்ற வாயு உபத்திரவங்கள், பலவீனம். இதயத்தைத் தூண்டவல்லது.

                
குழந்தைகளுக்கு உண்டாகும் மேற்கூறிய வியாதிகளில் இது விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது.

குறிப்பு:   

1.          இதற்கு வாயுகுளிகாஎன்று மற்றொரு பெயரும் உண்டு.
2.            தான்வந்தரவடியைப் போன்று இதை உபயோகிக்கலாம்.
3.            ஜீரகக் கஷாயத்தைக் கொண்டு அரைத்து இதைச் சிலர் தயாரிக்கின்றனர்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இப்போது கிடைக்கும் கஸ்தூரி குளிகையில் நூற்றுக்கு நூறு கஸ்தூரி இருப்பதில்லை என்பது உண்மை 
  2. ஒரு கிராம் கஸ்தூரியின் உண்மை விலை ஒரு லட்சத்திற்கும் மேல் ..பலர் போலிகளையே  உண்மை என்று நம்பி வாங்கி ஏமாறுகிறார்கள் ..உண்மையான கஸ்தூரி வாசனை கொண்டும் கண்டு பிடிக்க முடியாது -கலப்படம் -பொய் நிறைய உண்டு கஸ்தூரியை பொறுத்தவரை ..
  3. கஸ்தூரி மாத்திரையில் கஸ்தூரி இருக்க முடியவே முடியாது ..
  4. உண்மையான கஸ்தூரி சேர்ந்த கஸ்தூரி மாத்திரை இதய அடைப்பை கூட உறுதியாக நீக்கும் 
  5. பல உண்மைகளை எழுதும் போது  மனது வலிக்கிறது ..என்ன செய்ய ..எனது கட்டுரைகளை படித்து திடீர் வைத்தியர்கள் இன்னமும் பல பொய் சொல்ல நானும் காரணம் ஆவேனா ? (  எனது பழைய கட்டுரை தான்வன்தரம் குளிகை புனுகு சேர்ப்பதில்லை என்று யதார்த்தம் எழுதினேன் ..எனது கட்டுரை மூலம்     தெரிந்து கொண்டு புனுகு சேர்ந்த தான்வன்தரம் குளிகை என்று ஒரு மாத்திரையை ரூபாய நானூறு ரூபாய்க்கு  விற்றதாக அதாரபூர்வமாக ஒரு நண்பர் கூற கேட்டு அதிர்ச்சி  அடைந்தேன் )-- போல் உண்மையான கஸ்தூரி சேர்த்தது என்று எவ்வளவு ஏமாற்ற போகிறார்களோ   தெரியவில்லையே !!!
  6. கஸ்தூரி குளிகையில் கஸ்தூரி சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் கூட போதுமானது தான் 
  7. இந்த வாயு குளிகை -தச வாயுக்களை ஒழுங்கு செய்யும் 
  8. சர்வ நோய்க்கும் நிவாரணம் தரும் 
  9. குழந்தைகளின் நோய்களில் சிறந்த நிவாரணம் தருகிறது ..
  10. கஸ்தூரி சேர்க்காத கஸ்தூரி மாத்திரை வேலை நூற்றுக்கு பத்து சதவீதம் 
      கூட வேலை செய்து செய்யாது ..அந்த பத்து சத வீத வேலை கூட நம்மை பிரமிக்க வைக்கிறது எனபது தான் உண்மை 




Post Comment

1 comments:

sakthi சொன்னது…

இப்படியும் கூட ஏமாற்றி வியாபாரம் செய்கிறார்களா ? நாம் உண்மையான விஷயம் அறிந்து கொண்டால் போதுமானது .விளக்க பதிவுக்கு,தைரியமான பகிர்வுக்கு மிக்க நன்றிங்க சார் .

கருத்துரையிடுக