மலேரியா காய்ச்சலை குணமாக்கும் -ஜ்வர முராரி (JWARA MURARI )
தேவையான
மருந்துகள்:
1. சுக்கு – சுந்தீ 10 கிராம்
2. மிளகு – மரீச்ச 10 “
3. திப்பிலி – பிப்பலீ 10 “
4. நிலவேம்பு – பூநிம்ப 10 “
5. கடுகரோஹிணீ – கடுகீ 10 “
6. ஏலக்காய் (தோல் நீக்கியது) – ஏலாபீஜ 10 “
இவற்றைப்
பொடித்துச் சலித்த சூர்ணம் மற்றும்
7. பொடித்துப் பொரித்த வெங்காரம் – டங்கண பஸ்ம 10 கிராம்
8. சலித்த சிங்கோனாத்தூள் – சிங்கோனா (Chinchona) 30 “
செய்முறை:
இவற்றைக் கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாறு
(ஜம்பீரஸ்வரஸ) விட்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவும்
அனுபானமும்:
ஒரு மாத்திரை தேன் அல்லது
இஞ்சிச் சாற்றுடன் 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும்.
எளிய சுரம் (ஸ்வரம்), முதல் குளிர் ஜ்வரம், முறைக் காய்ச்சல் (மலேரியா) போன்ற பலவிதமான காய்ச்சல்கள் (விஷமஜ்வர / சதுர்த்திகா விஷமஜ்வர), பசியின்மைக்கு (அக்னிமாந்த்ய) இஞ்சிச்சாறு, தேன், மிளகுக் கிழாயத்துடன் கொடுக்க நலம் பயக்கும்.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- மலேரியா காய்ச்சலை குணமாக்க இந்த மருந்து நன்றாக உதவும்
- வாத நீர் காய்ச்சலுக்கும் இந்த மருந்தை கொடுக்கலாம்
- குளிர் காய்ச்சலுக்கும் இந்த மருந்தை கொடுக்கலாம்
- ஆங்கில மருந்தென்று சொல்லப்படும் க்லோரோ குயின் மருந்து போல் இது வேலை செய்யும்
1 comments:
மலேரியா காய்ச்சலுக்கு சிறப்பான மருந்த அறிமுகத்திற்கு மிக்க நன்றிங்க !
கருத்துரையிடுக