வெள்ளி, ஜனவரி 11, 2013

அழற்சி ஏற்படக்கூடிய நோய்களிலும் -குழந்தை நோய்களிலும் மிக சிறந்த மருந்து -கோரோசனாதி குடிகா -GOROCHANADHI GUTIKA


அழற்சி  ஏற்படக்கூடிய நோய்களிலும் -குழந்தை நோய்களிலும் மிக சிறந்த மருந்து -கோரோசனாதி குடிகா -GOROCHANADHI GUTIKA 
 (ref-ஸர்வரோக சிகித்ஸா ரத்னம் – ஸன்னிபாத சிகித்ஸா ப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            கலைமான் கொம்பு பற்பம் – ஸ்ருங்க பஸ்ம             10 கிராம்
2.            ருத்ராக்ஷம் – ருத்ராக்ஷ                                10           “
3.            சந்தனம் – சந்தன                                   10           “
4.            வசம்பு – வச்சா                                     10           “
5.            கடல் தேங்காய் – அக்லாரி                           10           “
6.            விளாமிச்சவேர் – உசீர                               10           “
7.            கோரைக்கிழங்கு – முஸ்தா                           10           “
8.            பூனாகம் (சுத்தி செய்து உலர்த்தியது) – பூனாக சுத்தி      10           “
9.            யானைக்கொம்பு – ஹஸ்தி தந்த                      10           “
10.          வெள்ளாட்டுக் கொம்பு – அஜ ஸ்ருங்க                 10           “
11.          மான் கொம்பு (வெள்ளை) – ம்ருக ஸ்ருங்க               10           “
12.          மான் கொம்பு (கருப்பு) – க்ருஷ்ண ம்ருக ஸ்ருங்க         10           “
13.          காண்டாமிருகக் கொம்பு – காண்டாம்ருக ஸ்ருங்க         10           “
14.          நிலவேம்பு – பூநிம்ப                                     10           “
15.          அஞ்சனக்கல் – அஞ்ஜன                              10           “
16.          சீரகம் – ஜீரக                                         10           “
17.          தும்பைப்பூ – துரோண புஷ்பி                           10           “
18.          பருத்திக்கொட்டை பருப்பு – ரக்தகார்ப்பாஸ பீஜ      10           “
19.          நாயுருவி வேர் – அபமார்கமூல                    10           “
20.          பீனாரிக்கட்டை – பூதிகந்தா                        10           “
21.          சுக்கு – சுந்தீ                                     10           “
22.          மிளகு – மரீச்ச                                   10           “
23.          திப்பிலி – பிப்பலீ                                    10           “
24.          முன்னை – அக்னிமாந்தமூல                      10           “
25.          மல்லி வேர் – மாலதி                               10           “
26.          பாடக் கிழங்கு – பாட்டா                             10           “
27.          காக்கட்டான் வேர் – அபராஜிதமூல                    10           “
28.          அவுரிவேர் – நீலமூல                                  10           “
29.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்       10           “
30.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     10           “
31.          நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                    10           “
32.          ஜாதிக்காய் – ஜாதீபல                                 10           “
33.          மாசிக்காய் – மாயக்கு                                10           “
34.          சதகுப்பை – ஸதபுஷ்ப                               10           “
35.          ஆசாளி – அதஸிபீஜ                                10           “
36.          நீர்க் கோரைக் கிழங்கு – முஸ்தா                   10           “
37.          கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                       10           “

இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தைக் கல்வத்திலிட்டுச் சிறிது இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) விட்டரைத்துப் பின்னர் அத்துடன்

1.            கோரோஜனை (பொடித்தது) – கோரோசன               10 கிராம்

2.            அம்பர் (பொடித்தது) – அம்பர்                           10           “
3.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) – டங்கண பஸ்ம     10           “
4.            பூண்டு (தோல் நீக்கிய பருப்பு) லசுன                    10           “
5.            தங்கபற்பம் – ஸ்வர்ண பஸ்ம                          10           “
6.            பவழபற்பம் – ப்ரவாள பஸ்ம                          10           “

இவைகளையும் சேர்த்து இஞ்சிச்சாறு கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத் தக்க பதத்தில் அத்துடன் பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் (கற்பூர) 10 கிராம்இளஞ்சூட்டில் உருக்கி வடிக்கட்டிய புனுகு (கந்தமார்ஜர வீர்ய) 10 கிராம் இவற்றையும் சேர்த்து நன்கு கலங்க அரைத்து 50 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

நாக என்பதற்கும்கரேளகம் என்பதற்கும் முறையே பூனாகம்மல்லிவேர் என்பதாகப் பொருள் கொண்டு அவைகளை உபயோகிப்பது ஸம்பிரதாயம்.
                 
நாக பஸ்மமும்கரளையம் என்ற சரக்குமே அவற்றின் பொருள் எனவும் சிலர் கூறுவர்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது தாய்ப்பாலுடன் இரண்டு முதல் நான்கு வேளைகள் வரை கொடுக்கவும்

               
சிலர் வெற்றிலைக் காம்புச்சாறுஇஞ்சிச்சாறுசுரசா பத்ர சாறு அல்லது தசமூல கடுத்ரயாதி கஷாயம் ஆகியவற்றுடனும் தருவதுண்டு.

தீரும் நோய்கள்: 

காய்ச்சல் (ஜ்வர)ஜன்னி (ஸ்வாஸநக ஜ்வர)இருமல் (இருமல்)இழைப்பு (ஸ்வாஸ)தொண்டை நோய்கள் (காந்த ரோக)மூச்சை (மூர்ச்சா)வலிப்பு மற்றும் மூளைக் கோளாறுகள்.
                குழந்தைகளுக்கு உண்டாகும் மேற்கூறிய வியாதிகளில் விசேஷமாக உபயோகிக்கப்படுகிறது.
 
தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. சித்த மருத்துவத்தில் உள்ள கோரோசனை மாத்திரையும் -ஆயுர்வேத மருத்துவ கோரோசனை மாத்திரையும் செய்முறைகளில் பல வித்தியாசங்கள்  உள்ளது ..வெகு விரைவில் சித்த மருத்துவத்தில் சொல்கிற கோரோசனை மாத்திரை செய்யும் முறைகள்  பற்றி சொல்கிறேன் 
  2. சாஸ்திரங்கள் சொல்வது போல் இப்போது எந்த கம்பெனியும் மான் கொம்பு பஸ்மம் ,யானை தந்த பஸ்மம் ,புனுகு ,அம்பர் எதையும் சேர்க்க இயலாது எபன்து தான் உண்மை ..
  3. விதி முறைகளில் சிலவற்றை தளர்த்தி மற்ற கிடைக்க கூடிய பொருகளை கொண்டு செய்யப்படும் கோரோசனை மாத்திரைகளும்  வேலை செய்கிறது என்பது தான் உண்மை ..(என்னுடைய எனது தனிப்பட்ட கருத்து -இந்த ஒரேயொரு மருத்துக்கு மட்டும் தான் பொருத்தும் )
  4. குழந்தைகளின் நாள்பட்ட சளி தொல்லைகளுக்கும் ,குழந்தைகளின் பல பிரச்சனைகளுக்கும் நான் கொடுக்கிற மருந்து இது ( கோரோசனை மெழுகு )..
  5. சோரியாசிஸ்  என்ற நோய்க்கு இந்த மருந்தில் நல்ல தீர்வு உள்ளது என்பது எனது ஆசான் சொன்ன தனிப்பட்ட விஷயம் ..தோல் வியாதிகளுக்கும்  இதை பெரியவர் முதல் சிறியவர் வரை பயன்படுத்தி நல்ல குணம் காணுகிறேன் .
             

Post Comment

5 comments:

கருத்துரையிடுக