திங்கள், ஜனவரி 14, 2013

பெயர் தெரியாத காய்ச்சலிலும் வேலை செய்யும் -ஜ்வராங்குஸ ரஸ (JWARANKUSA RASA)

பெயர் தெரியாத காய்ச்சலிலும் வேலை செய்யும் -ஜ்வராங்குஸ ரஸ  (JWARANKUSA RASA)                                                           
ref-பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு 
அத்துடன்

1.            சுக்கு (பொடித்துச் சலித்தது) சுந்தீ                    5 கிராம்
2.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) டங்கண பஸ்ம     5              “
3.            சுத்தி செய்த தாளகம் (பொடித்தது) ஷோதித ஹரிதாள  5              “
4.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்ஸநாபி              5              “

(சிறிது கரிசாலைச்சாறு விட்டுத் தனியே அரைத்து விழுதாக்கியது)
இவற்றைச் சேர்த்துக் கல்வத்திலிட்டுக் கரிசாலைச் சாறு (ப்ருங்கராஜ ஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

பெரியவர்களுக்கு ஒரு மாத்திரை வீதம் திப்பிலிச் சூர்ணம், தேன் சேர்த்து 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும். குழந்தைகளுக்குப் பாதி மாத்திரை கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

காய்ச்சல் (ஜ்வர) மற்றும் பலவித முறைக்காய்ச்சல்கள் (விஷம ஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. காய்ச்சல் என்பது உடல் நோய் எதிர்ப்பு சக்தியின் உச்ச கட்ட போராட்டம் -அந்த போராட்டத்தில் உடல் எதிர்ப்பு சக்தியை இந்த மருந்து நன்றாக கூட்டும் 
  2. பெயர் தெரியாத காய்ச்சலிலும் பெயர் சொல்லும் அளவுக்கு வேலை செய்யும் 


Post Comment

1 comments:

கருத்துரையிடுக