மசாஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மசாஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 13, 2022

உங்களது முதுகு வலிகளுக்கு சுயமாக தைலம் தேய்க்கும் 12 எளிய முறைகள்

 How to Do Self oil Massage application for ur back pain..


உங்களது முதுகு வலிகளுக்கு சுயமாக தைலம் தேய்க்கும் 12 எளிய முறைகள் பற்றிய எளிய காணொளி விளக்கமான வீடியோவுடன்

வலியில் இருக்கும் நபர்களுக்கு பகிர்ந்து உதவலாம்..





Know more WhatsApp 9042225333

#ayurveda #ayurvedalife #oilapplication

#backpain #lowbackpain #lowbackpainrelief #ayurvedaday #selfmassage #ayush

Post Comment

வியாழன், டிசம்பர் 15, 2011

தலை நோய்க்கும் ,வலிக்கும் மருந்தாகும் -நிர்குண்டீ தைலம்-Nirgundi thailam


தலை நோய்க்கும் ,வலிக்கும் மருந்தாகும் -நிர்குண்டீ தைலம்-Nirgundi thailam
 (ref-ஸர்வரோக சிகித்ஸாரத்னம் - தரணரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            நொச்சி இலைச்சாறு – நிர்குண்டீ ஸ்வரஸ          800 கிராம்
2.            எருக்கன் இலைச்சாறு – அர்கபத்ர ஸ்வரஸ         800         “
3.            முருங்கை இலைச்சாறு – சிக்ருபத்ர ஸ்வரஸ       800         “
4.            புளிய இலைச்சாறு – திந்திரிணிபத்ர ஸ்வரஸ       800         “
5.            துளசிஇலைச்சாறு – துளசிபத்ரஸ்வரஸ       800         “
6.            ஊமத்தன் இலைச்சாறு – தத்தூரபத்ர ஸ்வரஸ 800         “
7.            நிலப்பனைக்கிழங்குச்சாறு – முஸலீ ரஸ      800         “
8.            வாழைக்கிழங்குச்சாறு – ரம்பா ரஸ           800         “
9.            நாயுருவி இலைச்சாறு – அபமார்க ஸ்வரஸ        800         “
10.          மஞ்சள் கிழங்குச்சாறு – ஹரீத்ரா ரஸ             800         “
11.          கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ       800         “
12.          இஞ்சிச்சாறு – ஆர்த்ரக ஸ்வரஸ              800         “
13.          வெள்ளாட்டு மூத்திரம் – அஜமூத்ர            800         “
14.          நல்லெண்ணெய் – திலா தைல               800         “
இவைகளை ஒன்று கலந்து அத்துடன்
1.            மரமஞ்சள் – தாருஹரீத்ரா             25 கிராம்
2.            வசம்பு – வச்சா                        25           “
3.            பூண்டு – லசுன                        25           “
4.            கோஷ்டம் – கோஷ்ட                  25           “
5.            சுக்கு – சுந்தீ                           25           “
6.            இந்துப்பு – ஸைந்தவ லவண           25           “
7.            மிளகு – மரீச்ச                        25           “
8.            திப்பிலி – பிப்பலீ                 25           “
9.            கொடிவேலி வேர் – சித்ரகமூல          25           “

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

க்ஷெ எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் வெள்ளைக் குங்கிலியம் (ஸர்ஸரஸ) 25 கிராம் பொடித்துப் போட்டு அந்த சூட்டிலேயே கரையும் படி நன்கு கலக்கி பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:       

காதில் சொட்டு மருந்தாகவும் (கர்ணபிந்து), தலைக்குத் தேய்க்கவும் (சிரோப்யங்க) உபயோகிக்கவும்.

தீரும் நோய்கள்: 



 காதுவலி (கர்ண சூல), காதில் சீழ் வடிதல் (பூதி கர்ண (அ) கர்ண ஸ்ராவ) போன்ற காது நோய்கள் (கர்ண ரோக), பீனிசம் (பீனஸ) முதலியன. நாட்பட்ட புண்களில் (புராண வ்ரண) மேலே பூசப்படுகிறது. கீல்வாயு (சந்திகாதவாத), ஆமவாதம் (ஆமவாத) போன்றவற்றின் அழற்சி நிலைகளில் மேலே பூசி பிடித்துவிடப்படுகிறது. நாட்பட்ட பீனிசத்தில் தலைக்குத் தேய்க்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. நாள் பட்ட மண்டை பீனசதிர்க்கு -தலையில் தேய்த்து வர சீக்கிரம் குணமாகும்
  2. காது சார்ந்த நோய்க்கும் தலையில் தேய்க்கலாம்
  3. ஆமவாதம் -நீர் வாத வலிக்கு தக்க கவனத்துடன் தேய்க்க நல்ல பலன் தெரியும்
  4. இந்த மருந்தில் பல மூலிகைகள் சாறு எடுத்து தயாரிக்க பட வேண்டும்
  5. மண்டை கணம் ,தலை பாரத்திற்கு இந்த தைலம் ,பீனச தைலம் ,சுக்கு தைலம்  -போன்றவைகள் நல்ல பலன் தரும்

Post Comment

செவ்வாய், டிசம்பர் 06, 2011

நரம்புக்கு உரம் அளிக்கும் தைலம் -க்ஷீரபலா தைலம் (சாதாரணம்)


நரம்புக்கு உரம் அளிக்கும் தைலம் -க்ஷீரபலா தைலம் (சாதாரணம்)
 (ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பசுவின் பால் – கோக்ஷீர          3.200 கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல             3.200 லிட்டர்
3.            நல்லெண்ணெய் – திலதைல      800 கிராம்

இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன் குருந்தொட்டி வேர் (பலாமூல) 250 கிராம் அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:      

உட்கொள்ளவும், வெளி உபயோகத்திற்கும் பயனாகிறது. தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும், மூக்கிலிடவும் கூடப் பயன்படுகிறது.

                 
தீரும் நோய்கள்: 


 வாதநோய்கள் (வாத ரோக), நரம்புத் தளர்ச்சி (நாடீ தௌர்பல்ய) மற்றும் சாதாரண பலவீனம் (தௌர்பல்ய).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. இந்த க்ஷீர பலா தைலம் -பொதுவாக மசாஜ் செய்ய உதவும்
  2. நரம்பு சார்,வாத நோய்களுக்கு இந்த மருந்து நல்ல பலன் தரும்
  3. குருந்தொட்டி மூலிகை சிறந்த நரம்பு உரமாக்கி என்பது மூலிகை மருத்துவத்தில் எல்லோருக்கும் தெரியும்
  4. மூட்டு தேய்மானத்திற்கு -இந்த தைலம் +மகா நாராயண தைலம் + தான்வந்தரம் தைலம் மூன்றையும் கலந்து தேய்த்தால் மூட்டு பசை உண்டாகி மூட்டு வலி குணமாகும் என்பது எனது அனுபவம்

Post Comment

சனி, நவம்பர் 05, 2011

மசாஜ் தைலங்களில் ராஜா -பலா அஸ்வகந்தாதி தைலம்


மசாஜ் தைலங்களில் ராஜா -பலா அஸ்வகந்தாதி தைலம்
  (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            குருந்தொட்டிவேர் – பலாமூல                270 கிராம்
2.            அமுக்கிராக் கிழங்கு – அஸ்வகந்தா           270         “
3.            கொம்பரக்கு – லாக்ஷா            270         “

(தனியே துணியில் மூட்டைகட்டி இட்டது)

4.            தண்ணீர் – ஜல                   12.800 லிட்டர்
                இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டி அத்துடன்

1.            நல்லெண்ணெய் – திலதைல      800 கிராம்
2.            தயிர் தெளிவு – ததிமஸ்து        3.200 கிலோ கிராம்
சேர்த்து அதில்
1.            சித்தரத்தை – ராஸ்னா            12.500 கிராம்
2.            சந்தனம் – சந்தன           12.500        “
3.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா      12.500        “
4.            அருகம்புல் – தூர்வா              12.500        “
5.            அதிமதுரம் – யஷ்டீ              12.500        “
6.            கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ         12.500        “
7.            நன்னாரி – ஸாரிவா              12.500        “
8.            விளாமிச்சவேர் – உஸீர           12.500        “
9.            கோரைக்கிழங்கு – முஸ்தா        12.500        “
10.          கோஷ்டம் – கோஷ்ட             12.500        “
11.          அகில்கட்டை – அகரு             12.500        “
12.          தேவதாரு – தேவதாரு            12.500        “
13.          மஞ்சள் – ஹரீத்ரா               12.500        “
14.          ஆம்பல் கிழங்கு – உத்பல கந்த    12.500        “
15.          அரேணுகம் – அரேணுக      12.500        “
16.          சதகுப்பை – ஸதபுஷ்ப            12.500        “
17.          தாமரைக்கேஸரம் – பத்மகேஸர   12.500        “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.



குறிப்பு:    

 (1) சம்பிரதாயத்தில் குருந்தொட்டி வேரையும், அமுக்கிராக் கிழங்கையும் முறைப்படி கஷாயம் செய்தும், கொம்பரக்கிலிருந்து பாண்டகஷாய முறைப்படி லாக்ஷா ரஸம் தயாரித்தும் உபயோகப்படுத்தப்படுகிறது.

                                 
(2) யோகரத்னாகரம் ஜ்வரப்ரகரணத்தில் கூறியுள்ள அச்வ கந்தாதிதைலம் சற்றேரக்குறைய இது போன்றதே. ஆனால் அங்கு கஷாய சாமான்கள் வகைக்கு 800 கிராம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

                                 
(3) இதற்கு “பலாஸ்வகந்தலாக்ஷாதி தைல” என்றொரு பெயருமுண்டு.


உபயோகிக்கும் முறையும், அளவும்:

                வெளி உபயோகத்திற்கும், உட்கொள்வதற்கும், உள்ளுக்கு 1 முதல் 4 மி.லிட்டர் வரை சூடான பாலுடன் 2-3 வேளைகள்.

தீரும் நோய்கள்:  

பல விதமான வாத நோய்கள் (வாத ரோக), காய்ச்சல் (ஜ்வர), பைத்தியம் (உன்மாத), பலவீனம் (அ) க்ஷயம் (க்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), இருமல் (காஸ).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. இந்த தைலம் -வலிகளை குறைக்கவும் ,எலும்பு சதை அமைப்புகளுக்கு வலு சேர்க்கவும் பயன்படுகிறது
  2. உடலுக்கு இந்த எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் உடல் வலி போவதுடன் ,உடல் ஆற்றல் பெருகும்
  3. எண்ணெய் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் எண்ணைகளில் அரக்கு தைலம் சிறந்து ,லாக்ஷா என்னும் அரக்கும் சேரக்கூடிய தைலமாக இந்த தைலங்கள் விளங்குவதால் எண்ணெய் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் தைலங்களில் இந்த பலா அஸ்வகந்தா தைலமே ..செல்லமாக மசாஜ் தைலங்களில் ராஜா என்று அழைக்கலாம் ..
  4. ஆற்றல் சேரும் ,என்றும் இளமையாக இருக்கலாம் ,தோலில் சுருக்கங்கள் வர விடாது ,மூட்டுகளுக்கு பலம் தரும் ..



Post Comment