நரம்புக்கு உரம் அளிக்கும் தைலம் -க்ஷீரபலா தைலம்
(சாதாரணம்)
(ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
2. தண்ணீர் – ஜல 3.200 லிட்டர்
3. நல்லெண்ணெய் – திலதைல 800 கிராம்
இவைகளை ஒன்றாகக்
கலந்து அத்துடன் குருந்தொட்டி வேர் (பலாமூல) 250 கிராம் அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம
பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.
பயன்படுத்தும்
முறை:
உட்கொள்ளவும், வெளி உபயோகத்திற்கும் பயனாகிறது. தலைக்குத்
தேய்த்துக் குளிக்கவும், மூக்கிலிடவும்
கூடப் பயன்படுகிறது.
தீரும் நோய்கள்:
வாதநோய்கள் (வாத ரோக), நரம்புத்
தளர்ச்சி (நாடீ தௌர்பல்ய) மற்றும் சாதாரண பலவீனம் (தௌர்பல்ய).
தெரிந்து கொள்ள வேண்டியவை
தெரிந்து கொள்ள வேண்டியவை
- இந்த க்ஷீர பலா தைலம் -பொதுவாக மசாஜ் செய்ய உதவும்
- நரம்பு சார்,வாத நோய்களுக்கு இந்த மருந்து நல்ல பலன் தரும்
- குருந்தொட்டி மூலிகை சிறந்த நரம்பு உரமாக்கி என்பது மூலிகை மருத்துவத்தில் எல்லோருக்கும் தெரியும்
- மூட்டு தேய்மானத்திற்கு -இந்த தைலம் +மகா நாராயண தைலம் + தான்வந்தரம்
தைலம் மூன்றையும் கலந்து தேய்த்தால் மூட்டு பசை உண்டாகி மூட்டு வலி
குணமாகும் என்பது எனது அனுபவம்
0 comments:
கருத்துரையிடுக