செவ்வாய், டிசம்பர் 06, 2011

சதைக்கு வலுவேற்றும் -கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்


சதைக்கு வலுவேற்றும் -கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்
  (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)   

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            பருத்திக்கொட்டை கார்ப்பாஸ பீஜ           200 கிராம்
2.            சித்தாமுட்டி வேர் பலாமூல                200         “

இவற்றை 6.400 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.


1.            உளுந்து மாஷ பீஜ                   200 கிராம்
2.            கொள்ளு குலத்தா                    200         “

இவற்றை 6.400 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.

இனி இவ்விரண்டு கஷாயங்களையும் ஒன்று சேர்த்து அத்துடன்

நல்லெண்ணெய் திலதைல            800 கிராம்
வெள்ளாட்டுப்பால் அஜக்ஷீர          800         “

ஆகியவைகளையும் சேர்த்துக் கொண்டு
1.            தேவதாரு தேவதாரு                 12.500 கிராம்
2.            சித்தாமுட்டிவேர் பலாமூல           12.500        “
3.            சித்தரத்தை ராஸ்னா                 12.500        “
4.            கோஷ்டம் கோஷ்ட                  12.500        “
5.            கடுகு ஸர்ஸப                  12.500        “
6.            சுக்கு சுந்தீ                           12.500        “
7.            சதகுப்பை ஸதபுஷ்ப                 12.500        “
8.            மோடி பிப்பலீ மூல                  12.500        “
9.            செவ்வியம் சவ்ய                    12.500        “
10.          முருங்கப்பட்டை சிக்ருத்வக்                12.500        “
11.          மூக்கரட்டை வேர் புனர்னவ                12.500        “

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

பயன்படுத்தும் முறை:- 

 பெரும்பாலும் நஸ்யம், பஸ்தி, அப்யங்க போன்ற புறவுபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் 10-15 மி.லி. அளவில் சூடான தண்ணீர் அல்லது பாலுடன் உள்ளுக்கும் தரப்படுகிறது.
தீரும் நோய்கள்: 

 பாரிச வாதம் (பக்ஷாகாத), முகவாதம் எனப்படும் முகத்தின் ஒரு பகுதியைச் செயலிழக்கச் செய்யும் ஒருவித வாதரோகம் (அர்தித), தோள் பட்டைப் பகுதி செயலிழத்தல் (அவபாஹூக) போன்ற பலவித வாதரோகங்கள் (வாதரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. உடலுக்கு,மூட்டுக்கு ,முதுகுதண்டுவடத்திர்க்கு   வலுவை கொடுக்கும் அதே சமயத்தில் வலிகளை போக்கும்
  2. பொதுவான மசாஜ்க்கு இந்த தைலம் தான்வந்தரம் தைலத்திற்கு அடுத்து பயன்படும்
  3. பக்க வாதம் ,முக வாதம் போன்ற வாத நோய்களில் இந்த தைலம் சிறந்து விளங்குகிறது
  4. ஆற்றல் தரும்
  5. வலிகளை போக்கும்
  6. ப்ரும்ஹனம் என்ற உடலை தேற்ற கூடிய தன்மை இதற்க்கு உள்ளது

Post Comment

1 comments:

மச்சவல்லவன் சொன்னது…

மேலும் தொடற வாழ்த்துக்கள் சார்.

கருத்துரையிடுக